திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவினை முன்னிட்டு மகா தீபம் ஏற்றபட்டது.
தேரோட்டம்:
பிரசித்தி பெற்ற பஞ்சபூத தலங்களில் ஒன்றாக கருதப்படும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஆண்டு தோறும் திருகார்த்திகை தீப திருவிழா 10 நாட்களுக்கு விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையடுத்து கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி வெள்ளித் தேரோட்டமும், டிசம்பர் 3ம் தேதி விநாயகர் தேரோட்டமும், முருகன் மற்றும் அண்ணாமலையார் தேரோட்டமும் விமரிசையாக நடைபெற்றது.
அதிகாலை பரணி தீப தரிசனம்:
இதனையடுத்து கார்த்திகை தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான பரணி தீபம் இன்று அதிகாலை 4 மணிக்கு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் வளாகத்தில் ஏற்றப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு கோவிலில் உள்ள அனைத்து சுவாமிகளுக்கு அந்த தீபம் காட்டப்பட்டது. அர்த்த மண்டபத்தில் ஐந்து தீபங்களாக காட்டப்பட்டது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்பட ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
பஞ்ச மூர்த்தி புறப்பாடு:
அண்ணாமலையார் கோயிலில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடு வெகு சிறப்பாக நடைபெறும். பஞ்ச மூர்த்திகளான விநாயகப்பெருமான், வள்ளி, தேவானையுடன் முருகன் உள்ளிட்ட பஞ்ச மூர்த்திகள் கிளி கோபுரத்திற்கு அருகேயுள்ள அலங்கார மண்டபத்தை அடைந்தனர்.
அதன் பின்னர் மகா தீபம் ஏற்ற சரியாக 2 நிமிடங்களுக்கு முன்னால் அர்த்தநாரீஸ்வரர் புறப்பாடு நடைபெற்றது. அவர் வெளியே வந்ததும் கண் இமைக்கும் நேரத்திற்குள் அற்புதம் நடனம் ஒன்றினை அரங்கேற்றிவிட்டு உள்ளே சென்றுவிட்டார். அந்த நேரத்தில் கோயிலில் அகண்ட தீபமானது ஏற்றப்பட்டது. அதனை சமிஞ்சையாக கொண்டு பருவதராஜ ராஜகுலத்தினர் மலைமேல் மகா தீபத்தை ஏற்றினர்.
மகா தீபம்:
மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று முன்தினம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சரியாக 6 மணிக்கு 2,668 அடி உயரமுள்ள மலை உச்சியில் 5 அடி உயரம், 250 கிலோ எடை கொண்ட கொப்பரையில் 3500 லிட்டர் நெய் மற்றும் ஆயிரம் மீட்டர் காடா துணிகள் பயன்படுத்தப்பட்டு மகாதீபம் ஏற்றப்பட்டது. சரியாக 6 மணிக்கு ஏற்றப்படும் போது ‘அண்ணாமலையருக்கு அரோகரா’ என விண்ணை பிளக்கும் அளவிற்கு பக்தர்கள் கோஷமித்திற்கு நடவே தீபம் ஏற்றப்பட்டது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…