Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight Line

Nandhinipriya Ganeshan Updated:
ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image.

இன்றைய காலக்கட்டத்தில் கட்டிடக் கலைக்கு எத்தனையோ தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. ஆனால், நமது முன்னோர்கள் எந்தவொரு தொழில்நுட்ப வசதியும் இல்லாமல், நம்மால் சிந்தித்துக்கூட பார்க்க முடியாத அளவிற்கு கட்டிட கலைகளில் சிறந்து விளங்கியுள்ளார். அதற்கு நம் நாட்டில் உள்ள கோவில் கட்டிட கலைகளே சாட்சி. ஆமாங்க, இந்த உலகத்தில் ஆன்மிகத்திற்கும், கோவில் கட்டிடக் கலைக்கும் இந்தியாவிற்கு நிகரான நாடுகள் எதுவும் இல்லை. அப்படி, உலகமே வியந்து பார்க்கும் ஒருவிஷயம் என்னவென்றால், இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் கோவிலில் இருந்து ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி கோவில் வரை 7 சிவன் கோவில்களுமே ஒரே தீர்க்க ரேகையில் அமைந்திருப்பது தான். 

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image

ஒவ்வொரு கோயிலுக்கும் இடைப்பட்ட தூரம் சுமர் 2383 கிலோ மீட்டர். இவ்வளவு தூரங்களுக்கு இடையில் அமைந்திருந்தாலும் கோவில்கள் அனைத்துமே ஒரே தீர்க்க ரேகையில் துல்லியம் விலகாமல் அமைந்திருப்பது தான் இன்று வரைக்கும் விஞ்ஞானிகளால் கூட கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு மர்மமாகவே இருந்து வருகிறது. இவை அனைத்துமே ஒரே நேர்க்கோட்டி எப்படி அமையப்பெற்றது என்பது எம்பெருமானுக்கு மட்டுமே தெரியும். இதில் மெய்சிலிர்க்க வைக்கும் மற்றொரு விஷயம் என்னவென்றால் இந்த 8 கோவில்களுமே வெவ்வேறு காலக்கட்டங்களில் கட்டப்பட்டதோடு மட்டுமல்லாமல், 8 கருவறை லிங்கங்களுமே கிழக்கு திசை பார்த்து நிர்மாணிக்கப்பட்டுள்ளது. 

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image

இந்த 8 கோவில்களும் உருவாக்கப்பட்ட காலத்தில் எந்தவிதமான செயற்கை கோள்களோ, திசைகாட்டும் கருவிகளோ கிடையாது. இருந்தாலும், புவியியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை தேர்ந்தெடுத்து ஜோதிடத்தின் துணையோடு, கொஞ்சம் கூட அச்சுபிசராமல் மிக துல்லியமாக ஒரே தீர்க்க ரேகைக் கோட்டின் மேல் அமைந்திருப்பதே ஆச்சர்யத்தின் அதிசயத்தின் உச்சம். 

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image

கேதார்நாத்

வடக்கில் இருந்து வந்தால், முதலில் வருவது இமயமலையில் அமைந்திருக்கும் கேதார்நாத் கோயி. 12 ஜோதிர்லிங்களில் முதலாவது ஆலயமும் இதுதான். இக்கோவிலை கோடைக்காலத்தின் துவக்கமான ஏப்ரல் - அக்டோபர் வரையில் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி உண்டு. 

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image

காலேஷ்வரம் 

அடுத்ததாக வருவது, காலேஷ்வரா முக்தீஸ்வரா சுவாமி கோவில். இந்த கோவில் தெலங்கானா மாநிலத்தின் கரீம்நகர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற கோதாவரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. 

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image

காலஹஸ்தி

ஆந்திர மாநிலத்தின் சித்தூரில் அமைந்துள்ளது திருத்தலம் ஸ்ரீ காலஹஸ்திஸ்வரர் கோவில். இந்த கோவில் பஞ்சபூத கோவில்களில் வாயு ஸ்தலமாகவும், ராகு கேது பரிகார ஸ்தலமாகவும் விளங்குகிரது.

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image

காஞ்சிபுரம்

அடுத்ததாக, தமிழ்நாட்டில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள கோவில் ஏகாம்பரேஸ்வரர் கோவில். பஞ்சபூத தலங்களில் நில ஸ்தலமாக விளங்குகிறது. 7ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயிலில் சிவலிங்கம் சுயம்புவாக மண்ணால் உருவானதாகும்.

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் அமைந்துள்ள நெருப்பு ஸ்தலமான அருணாச்சலேஸ்வரர் கோவில். இங்கு சிவபெருமான் நெருப்பு வடிவமாக வணங்கப்படுகிறார். இந்துக்களின் மிக முக்கிய வழிபாட்டு தலமாகவும் விளங்குகிறது.

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image

சிதம்பரம்

கடலூர் மாவட்டத்திலுள்ள சிதம்பரம் நடராஜர் கோவில். இது பஞ்சபூத தலங்களிலேயே மிக முக்கியமான ஆகாய தலமாகும். இக்கோயிலின் மூலவர் திருமூலநாதர் சுயம்பு வடிவாக தோன்றியவர். மேலும், இக்கோயிலில் காட்சியளிக்கும் நடராஜ பெருமானின் கட்டை விரலின் அடியில் தான் பூமியின் மையப்புள்ளி இருக்கிறது. இது மற்றொரு அதிசயம்.

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image

திருவானைக்காவல்

திருச்சிக்கு அருகில் திருவானைக்காவல் என்ற இடத்தில் அமைந்துள்ள ஜம்புகேஸ்வரர் கோவில். இது பஞ்சபூத தலங்களில் நீர் தலமாக விளங்குகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் பெரிய சிவாலயங்களில் இக்கோயிலும் ஒன்று. 

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image

ராமேஸ்வரம்

ராமேஸ்வரத்தில் அமைந்திருக்கும் ராமநாதசுவாமி கோவில் வடக்கிலுள்ள காசியை போன்றே ஒரு புண்ணிய தலமாக விளங்குகிறது. 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக விளங்கும் இத்தலம், ராமாயண காலத்தில் உருவான மிகப்பழமையான தலமாகும். இக்கோவில் பித்ரு தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது.

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image

நேர்கோட்டில் அமைத்துள்ள சிவாலயங்கள்:

கேதார்நாத் – கேதார்நாத் கோவில் [30.7352° N, 79.0669]

காலேஸ்வரம் – காலேஸ்வரம் முக்தீஸ்வரா சுவாமி கோவில் [18.8110, 79.9067]

ஶ்ரீ காலஹஸ்தி - ஶ்ரீ காலஹஸ்தீஸ்வரர் கோவில் [13.749802, 79.698410]

காஞ்சிபுரம் – ஏகாம்பரேஸ்வரர் கோவில் [12.847604, 79.699798]

திருவண்ணாமலை – அண்ணாமலையார் கோவில் [12.231942, 79.067694]

சிதம்பரம் – நடராஜர் கோவில் [11.399596, 79.693559]

ராமேஸ்வரம் – ராமநாதசுவாமி கோவில் [9.2881, 79.3174]

ஒரே தீர்க்கரேகையில் அமைந்திருக்கும் 8 சிவாலயங்கள்.. மெய்சிலிர்க்க வைக்கும் மர்மத்தின் உச்சம்.. | 8 Ancient Shiva Temples in Straight LineRepresentative Image

பஞ்ச பூத ஸ்தலங்கள்:

நிலம் – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் 

நெருப்பு – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் 

நீர் – திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோவில் 

ஆகாயம் – சிதம்பரம் நடராசர் கோவில் 

காற்று –  ஸ்ரீ காலஹஸ்திஸ்வரர் கோவில்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்