Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 Potri

Gowthami Subramani Updated:
சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image.

ஸ்ரீ ராம பக்தராகவும், சனி பகவானின் நண்பனாகவும் இருந்து நம்மைக் காத்து அருள்பவரே ஸ்ரீ ஆஞ்சநேயப் பெருமான். ஆஞ்சநேயரைப் போற்றி வணங்குபவர்களுக்கு எத்தகைய துன்பமும் நேராது எனக் கூறுவர். சிரஞ்சீவியாக வரம் பெற்ற ஆஞ்சநேயரைப் போற்றி வணங்கிட வருகின்ற துயரமும் நீங்கி, வளமான வாழ்க்கையைத் தருவார். ஆஞ்சநேயப் பெருமானுக்கு உகந்த நாளான சனிக்கிழமை நாள்களில், அவரைப் போற்றி வணங்கக் கூடிய 108 போற்றிகளை இந்தப் பதிவில் காணலாம்.

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்

ஓம் ஆஞ்சநேயா வித்மஹே

வாயுபுத்ராய தீமஹி

தன்னோ ஹனுமன் பிரசோதயாத்

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image

ஆஞ்சநேயர் 108 போற்றி

ஓம் அருளே போற்றி

ஓம் அருளானந்தனே போற்றி

ஓம் ஆனந்த வடிவே போற்றி

ஓம் அருட்பெருஞ்ஜோதியே போற்றி

ஓம் ஆகாச சஞ்சாரியே போற்றி

ஓம் அனுமனே போற்றி

ஓம் அஞ்சனைப் புதல்வனே போற்றி

ஓம் ஆதி அந்தம் அல்லானே போற்ரி

ஓம் அந்தாதியே போற்றி

ஓம் ஆக்கு அழிவு அற்றோனே போற்றி

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image

ஓம் அவினாசியே போற்றி

ஓம் அரூபியே போற்றி

ஓம் அசரீரியே போற்றி

ஓம் ஆனந்தனே போற்றி

ஓம் அறிவே போற்றி

ஓம் அறலோனே போற்றி

ஓம் அமைதியே போற்றி

ஓம் அடக்கமே போற்றி

ஓம் அமலனே போற்றி

ஓம் அறம்பாவம் அற்றோனே போற்றி

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image

ஓம் அப்பனே போற்றி ஓம் அம்மையே போற்றி

ஓம் அஞ்சினை வென்றவனே போற்றி

ஓம் அஞ்சினைச் செல்வனே போற்றி

ஓம் ஆனந்த ஜோதியே போற்றி

ஓம் ஆதாரமே போற்றி ஓம் அணுவே போற்றி

ஓம் அணுவின் அணுவே போற்றி

ஓம் அணுவின் ஆகர்ஷணமே போற்றி

ஓம் அண்டத்தின் ஆதாரமே போற்றி

ஓம் அண்டத்தின் காவலனே போற்றி

ஓம் ஆகுதியே போற்றி

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image

ஓம் அறிவுக் கனலே போற்றி

ஓம் அருட்புனலே போற்றி

ஓம் அகிலாண்ட நாயகனே போற்றி

ஓம் அசங்கும் குண்டலதாரியே போற்றி

ஓம் ஆவினன் அவதாரா போற்றி

ஓம் அஞ்சு வண்ண நாயகா போற்றி

ஓம் ஆதித்தன் சீடனே போற்றி

ஓம் ஆசையிலாச் சீலனே போற்றி

ஓம் அடக்கத்தின் அமைதியே போற்றி

ஓம் அறத்தின் வடிவே போற்றி

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image

ஓம் அமிர்தவாணனே போற்றி

ஓம் அருட்கவிதை சொல்வடிவே போற்றி

ஓம் அறிவுச் சதுரனே போற்றி

ஓம் அங்கத பிரியனே போற்றி

ஓம் அனந்த புச்சனே போற்றி

ஓம் ஆணைப் பணிவோனே போற்றி

ஓம் ஆற்றலின் உறைவிடமே போற்றி

ஓம் அமர ஜாம்பவான் ப்ரியனே போற்றி

ஓம் அச்சமற்ற வீரனே போற்றி

ஓம் அலைகடல் கடந்தோனே போற்றி

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image

ஓம் ஆற்றலின் பேருருவே போற்றி

ஓம் அரியின் சேவகனே போற்றி

ஓம் அப்பொன்மலை வந்தித்த அருட்செல்வா போற்றி

ஓம் ஆசானே போற்றி

ஓம் அரக்கிவாய் அணுவாக போற்றி

ஓம் நுழைந்தோனே போற்றி

ஓம் அற்புதம் செய் விந்தனே போற்றி

ஓம் அந்நிழலரக்கியை மாய்த்தோனே போற்றி

ஓம் அருந்தவசிகள் வாழ்த்தப் பெற்றோனே போற்றி

ஓம் அரக்கி இலங்கிணியை ஒடுக்கியவா போற்றி

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image

ஓம் அஞ்சா நெஞ்சனே போற்றி

ஓம் அட்டமா சித்திக்கு அதிபதியே போற்றி

ஓம் அன்னையிடம் மோதிரம் அளித்த அன்பனே

ஓம் அன்னை சோகம் களைந்தோனே போற்றி

ஓம் அளவிலா வடிவம் கொண்டோனே போற்றி

ஓம் அசோகவனம் அழித்தோனே போற்றி

ஓம் அசுரன் நமனே போற்றி

ஓம் அக்சனை வதைத்தவா போற்றி

ஓம் அயனாயுதத்திற்குக் கட்டுண்டவா போற்றி

ஓம் அரக்கர்கோ ஆணவம் அடக்கியவா போற்றி

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image

ஓம் அத்தீவிற்குத் தீயிட்டவா போற்றி

ஓம் அளப்பரியா ஆற்றலே போற்றி

ஓம் ஆழி தாவிய தூதனே போற்றி

ஓம் அண்ணலிடம் சூடாமணி ஒப்பித்தவா போற்றி

ஓம் அல்லல் தீர்க்கும் அன்பனே போற்றி

ஓம் அளவற்ற அன்பே போற்றி

ஒம் ஆராதனைத் தெய்வமே போற்றி

ஓம் அமரவ வாழ்வு பெற்றோனே போற்றி

ஓம் அயனாகும் அரசே போற்றி

ஓம் அபயம் அருள்வோனே போற்றி

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image

ஓம் அல்லல் களைவோனே போற்றி

ஓம் அரும் பொருளே போற்றி

ஓம் அயோத்தி நிவாஸனே போற்றி

ஓம் ஆபத் பாந்தவனே போற்றி

ஓம் அனாத இரட்சகனே போற்றி

ஓம் அபார கருணாமூர்த்தியே போற்றி

ஓம் அபய வரதனே போற்றி

ஓம் அருட்குடையே போற்றி

ஓம் அணுகுவோர் துயர்துடைப்போனே போற்றி

ஓம் அபிஷேகப் பிரியனே போற்றி

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image

ஓம் ஆயிரம் நாமம் கொண்டோனே போற்றி

ஓம் அன்பர்க்கு அருள்வோனே போற்றி

ஓம் அஞ்சு முகத்தோனே போற்றி

ஓம் அற்புதம் நின்ற கவியே போற்றி

ஓம் ஆராதனையின் ஆணிவேரே போற்றி

ஓம் அமரனே போற்றி

ஓம் அமுத நிலை அருள்வோனே போற்றி

ஓம் அருளும் திருவடியே போற்றி

ஓம் அரியின் வாகனமானவனே போற்றி

ஓம் அரியின் அடியோனே போற்றி

சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயரைப் போற்றித் துதிக்க வேண்டிய 108 ஆஞ்சநேயர் போற்றிகள் | Anjaneyar 108 PotriRepresentative Image

ஓம் அஞ்சலி அந்தணனே போற்றி

ஓம் ஆன்மாவின் உட்பொருளே போற்றி

ஓம் அகமெலாம் நிறைந்திருக்கும் அமுதே போற்றி

ஓம் அமுதாகி இனிக்கும் அற்புதமே போற்றி

ஓம் அனுபூதியே போற்றி

ஓம் அருளும் தெய்வமே அனுமனே போற்றி

ஓம் அண்ணலின் அரியணை போற்றி

ஓம் அமர்ந்தோனே ஆஞ்சநேயனே போற்றி போற்றி….!

சனிக்கிழமை தோறும், ஆஞ்சநேயப் பெருமானை வேண்டி, ஆஞ்சநேயர் போற்றிகளை உச்சரித்து வருவதன் மூலம் துன்பங்கள் அனைத்தும் விலகி நன்மைகள் கிடைக்கும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்