Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தீபத்திற்கு முந்தைய நாள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! பாவத்தைப் போக்கும் பரணி தீபம் ஏற்றும் முறை, சிறப்புப் பலன்கள்…!

Gowthami Subramani Updated:
தீபத்திற்கு முந்தைய நாள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! பாவத்தைப் போக்கும் பரணி தீபம் ஏற்றும் முறை, சிறப்புப் பலன்கள்…!Representative Image.

தமிழ் மாதத்தில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உள்ளது போல, கார்த்திகை மாதத்திற்கென சிறப்பு உண்டு. இம்மாதம் முழுவதும் சிவபெருமானை வணங்கி வழிபடுவதன் மூலம், அனைத்து நன்மைகளும் கிடைக்கும் எனக் கூறுவர். எனவே தான், கார்த்திகை மாதத்தில் பரணி, பௌர்ணமி, திங்கட்கிழமை போன்றவை சிறப்புக்குரியதாக அமைகிறது. அதன் படி, இந்தப் பதிவில் கார்த்திகை மாதத்தில் வரும் பரணி தீபம் பற்றிய விவரங்களைப் பற்றி காண்போம்.

கார்த்திகை தீபத்திருநாளில் இப்படி விளக்கேற்றினால் முழுபலனையும் பெறலாம்..

தீபத்திற்கு முந்தைய நாள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! பாவத்தைப் போக்கும் பரணி தீபம் ஏற்றும் முறை, சிறப்புப் பலன்கள்…!Representative Image

பரணி தீபம்

முன்னோர்களை வணங்கும் தினமாக அமையும் அமாவாசை தினத்திற்கு அடுத்தபடியாக அமைவது, பரணி நட்சத்திர தினமாகும். இந்த தினத்தில், நம் வீட்டில் விளக்கேற்றி ஒளிமயமான வாழ்வைப் பெறலாம். பூமியில் இருக்கும் உயிர்களும், மண்ணுலகை விட்டு விண்ணுலகிற்கு சென்ற நம் முன்னோர்களும் இருளில் சிக்கி தவிக்காது, ஒளிமயமாக இருப்பதற்கு, பரணி தீபம் ஏற்றப்பட்டு வழிபடப்படுகிறது.

தீபத்திற்கு முந்தைய நாள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! பாவத்தைப் போக்கும் பரணி தீபம் ஏற்றும் முறை, சிறப்புப் பலன்கள்…!Representative Image

பரணி தீபம் வரலாறு

நம் வாழ்நாளில் நாம் கொண்டாடக் கூடிய, வழிபடக் கூடிய ஒவ்வொரு விழாவிற்கும் சிறப்பான வரலாறு உள்ளது. அதன் படி, பரணி தீபம் உருவான வரலாறு பற்றி காண்போம்.

நசிகேதன் என்பவரின் தந்தை ஒரு மிகப்பெரிய வேள்வியைச் செய்து, அதன் முழு பயனையும் அடைவதற்காக, அதன் நிறைவு பகுதியில் இருந்துள்ளது. வேள்வியின் நிறைவாக அவர் தானம் செய்யும் நேரம் அது. அதில், யாரெல்லாம் வருகிறார்களோ, அவர்களுக்கு தன்னிடம் உள்ள பொருள்களை அனைத்தும் தானம் செய்ய வேண்டும். இவ்வாறு வருபவர்களுக்கு தானம் செய்யும் போது, பார்த்துக் கொண்டிருந்த நசிகேதன் இதையும் கொடுக்குறீங்களா..? என அதிர்ச்சியுடன் கேட்டுக் கொண்டே இருந்தான்.

தீபத்திற்கு முந்தைய நாள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! பாவத்தைப் போக்கும் பரணி தீபம் ஏற்றும் முறை, சிறப்புப் பலன்கள்…!Representative Image

அவரது தந்தையும், நசிகேதன் கேட்ட கேள்விகளுக்கு பொறுமையாக பதிலளித்து தானம் செய்து கொன்டே இருந்தார். இதில், ஒரு கட்டத்தில் நசிகேதன் கோபமடைந்து, என்னையும் தானம் கொடுக்க போறீங்களா? என்றும், யாருக்கு என்னை தானம் கொடுக்க போறீங்க? என்றும் கேட்டுள்ளார். இதனால், கோபமடைந்த நசிகேதன் தந்தை, உன்னை எம தர்மனுக்கு தானம் கொடுக்கிறேன் என கூறி விட்டார். இதனால், உயிருடன் இருக்கும் போதே நசிகேதன் எமலோகம் சென்று விட்டான்.

தீபத்திற்கு முந்தைய நாள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! பாவத்தைப் போக்கும் பரணி தீபம் ஏற்றும் முறை, சிறப்புப் பலன்கள்…!Representative Image

இவ்வாறு எமலோகம் சென்ற நசிகேதன் பல வரங்களைப் பெற்று, பல கேள்விகளையும் கேட்கிறான். இதில், ஒன்றாக பூலோகத்தில் இருக்கும் உயிர்கள் எல்லாம் எமலோகம் வரும் போது, வழிகள் அனைத்தும் இருளடைந்து இருக்கும். இதில், தட்டுத் தடுமாறி எமலோகம் வந்தடைய உயிர்கள் பெரும் சிரமப்படும் என கேள்விப்பட்டிருக்கிறேன். இதில், அவர்கள் கஷ்டமின்றி எமலோகம் வருவதற்கும், இங்கு வந்த பிறகு துன்பத்தில் சிக்காமல் வாழ்வதற்கு வேறு ஏதேனும் வழி உண்டா? என கேட்டிருக்கிறான்.

தீபத்திற்கு முந்தைய நாள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! பாவத்தைப் போக்கும் பரணி தீபம் ஏற்றும் முறை, சிறப்புப் பலன்கள்…!Representative Image

இதற்கு எமன் கூறியதாவது,”இதில் பல்வேறு வழிகள் உள்ளது. ஒரு வழி, யார் ஒருவர் பரணி நட்சத்திரத்தன்று தீபம் ஏற்றி சிவ பெருமானை வழிபடுகிறார்களோ அவர்கள் பூலோகத்தில் மட்டுமல்ல, எமலோகத்திலும் துன்பம் இல்லாமல் வாழலாம்” எனக் கூறினார். அதன் பிறகு, நசிகேதன் பூமிக்கு திரும்பி உபதேச மொழிகளாக இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தீபத்திற்கு முந்தைய நாள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! பாவத்தைப் போக்கும் பரணி தீபம் ஏற்றும் முறை, சிறப்புப் பலன்கள்…!Representative Image

திருவண்ணாமலை பரணி தீபம் ஏற்றுதல்

தீபத் திருநாளான்று, திருவண்ணாமலையில் அதிகாலை நேரம் காலை 4 மணி அளவில் அண்ணாமலையார் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்படும். ஐந்து விளக்குகளை ஏற்றி, அவற்றை ஒரே விளக்காக இணைத்து, அதன் பின் மீண்டும் அதை ஐந்து விளக்குகளாக ஏற்றுவார்கள். இது இறைவனே பஞ்ச பூதங்களாக காட்சி அளிப்பதை உணர்த்துவதாகவும், இறைவன் ஒருவனே அவை எல்லா உயிர்களுக்குள்ளேயும் நிறைந்திருப்பதாகவும் அமைகிறது.

தீபத்திற்கு முந்தைய நாள் கட்டாயம் செய்ய வேண்டியவை..! பாவத்தைப் போக்கும் பரணி தீபம் ஏற்றும் முறை, சிறப்புப் பலன்கள்…!Representative Image

வீட்டில் பரணி தீபம் ஏற்ற வேண்டிய நேரம்

திருக்கார்த்திகை திருநாளான தீபத் திருநாளின் முந்தைய நாளில் வீடுகளில் பரணி தீபம் ஏற்ற வேண்டும். இது நம் முன்னோர்களின் நலனுக்காகவும், நமது நலனுக்காகவும் தீபம் ஏற்றுவதாகும்.

வீடுகளில் பரணி தீபம் ஏற்றும் முறை

கார்த்திகை தீபத் திருநாளின் முந்தைய நாளில் வாசலில் இரண்டு தீபங்களும், பூஜையில் விளக்கும் ஏற்ற வேண்டும். இத்துடன் தனியாக ஒரு தாம்பலம் ஒன்றில் 5 விளக்குகளை வட்ட வடிவில் ஏற்ற வேண்டும். இவ்வாறு வட்ட வடிவில் வைப்பதன் மூலம், விளக்குகள் அனைத்து திசைகளை நோக்கி எரியும். எனவே, இதில் திசை கணக்கு கிடையாது. ஐந்து என்பது, பஞ்ச பூதங்களைக் குறிப்பதாக அமைகிறது. நம்மை அனைத்து வகையான துன்பங்களிலிருந்தும் காப்பதை உறுதி செய்கிறது. மேலும், இது சிவபெருமானின் பஞ்ச தொழில்களை விளக்கும் முறையாகவும் 5 தீபங்கள் ஏற்றுவதாகும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்