தமிழர்களின் பாரம்பரிய பண்டிகை என்றால் அது பொங்கல் திருநாள் தான். முதல் நாள் போகி பொங்கல், இரண்டாம் நாள் தைப் பொங்கல், மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல், நான்காம் நாள் காணும் பொங்கல் என நான்கு நாட்கள் கொண்டாடப்படும் இந்த பொங்கல் பண்டியானது எப்போதும் மார்கழி கடைசி நாளில் இருந்து கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு முறை பொங்கல் பண்டிகை வரும்போதும் அனைவருக்கும் மனதில் ஒரு உற்சாகம் பிறக்கும்.
மேலும், இந்த பாரம்பரிய பண்டிகையின் முதல் நாளான போகி பொங்கல் அன்று குலதெய்வத்தை வழிபாடு செய்வது என்பது அவ்வளவு சிறப்பு மிக்கது. சரி, வாங்க பூஜை முறைகளை பற்றி பார்க்கலாம். பொதுவாக, நம்மில் பலருக்கும் குலதெய்வம் எது தெரியாமல் இருக்கும். அப்படிபட்டவர்கள், ஒரு பித்தளை செம்பில் தண்ணீர் நிரப்பி, அந்த செம்பிற்கு மஞ்சள், குங்குமம், பூ வைத்து குலதெய்வமாக நினைத்து மனதார வழிபாடு செய்யலாம். ஒருவேளை உங்க வீட்டில் குலதெய்வத்தின் உருவப்படம் இருந்தால் அதை துடைத்து மஞ்சள், குங்குமம், பூ வைத்துக் கொள்ளவும். அருகிலேயே விநாயகர் சிலை அல்லது உருவப்படம் இருந்தால் வைத்துக் கொள்ளுங்கள்.
முதலில் போகி பொங்கலுக்கு முன்னாடியே வீட்டை சுத்தம் செய்துக்கொள்ள வேண்டும். பிறகு, போகி பொங்கலன்று மாவிலை, வேப்பிளை, பூலாம் பூ, ஆவாரம் பூ நான்கையும் சேர்த்து சிறிது சிறிதாக வைத்து கட்டிக் கொள்ளவும். பின்னர், அதை வீட்டின் வாசல்படியில் தோரணமாக கட்டித் தொங்கவிடவும். மீதி இலைகளை சிறிது சிறிதாக கட்டி வீட்டின் பூஜை அறையில் ஒரு கட்டு, வீட்டின் முன் கூறையில் 3 கட்டு என வைத்து கொள்ளவும்.
பின்னர், வீட்டின் வாசல்படியில் எலுமிச்சை பழமும் கட்டி தொங்கவிடலாம். அப்படி தொங்கவிடும் போது, முதலில் 3 மிளகாய் கோர்த்து நடுவில் எலுமிச்சை பழம் அதன்பிறகு 4 மிளகாய் இந்த வரிசையில் கோர்த்து தொங்கவிடவும். அடுத்ததாக, குலதெய்வத்திற்கு நைவேத்தியமாக அதிரசம், பால் பாயாசம் செய்து படைக்க வேண்டும். இப்போது பூஜையில் ஒரு வாழை இலையில் கரும்பு, வாழைப்பழம், ஆரஞ்சு, திராட்சை, மாதுளை, கொய்யா, வெற்றிலை பாக்கு, தேங்காய் வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், அவரைக்காய் வேக வைத்தோ அல்லது பொறியலாகவோ செய்து படைக்கலாம்.
இந்த பூஜையை காலையில் செய்தாலும் சரி அல்லது அன்றைய நாளில் நல்ல நேரம் எப்போதோ அப்போதும் வழிபாடு செய்யலாம். இவ்வாறு வழிபாடு செய்வதன் மூலம் குடும்பத்தில் இருக்கும் பணக் கஷ்டம், மனக் கஷ்டம் அனைத்தும் விலகு, குலதெய்வத்தின் பூரண ஆசீர்வாதமும் உங்களுக்கு கிடைக்கும். மறக்காமல் வழிபாடு செய்யுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…