சந்திரனுக்கும் சூரியனுக்கும் நடுவில் பூமி வருவது சந்திர கிரகணம் ஆகும். இவ்வாறு ஐப்பசி மாத பௌர்ணமியில் சந்திர கிரகணம் நிகழவுள்ளது. சந்திர கிரகணத்தின் போது பூமியின் வளிமண்டலம் சூரிய ஒளியால் சிதறடிப்பதால் நீண்ட அலைநீளம் கொண்ட சிவப்பு ஒளி மட்டுமே சந்திரனில் பயணிக்கும். இதனால் நிலவு சிவப்பு நிறத்தில் நமக்கு புலன்படுகிறது.
அறிவியல் ரீதியாக பார்த்தால் நிலவு சென்நிறத்தில் தெரிய வளிமண்டலத்தில் இருக்கும் அதிகமான தூசி அல்லது மேகங்களே காரணமாகும். இதை ஜோதிட சாஸ்திரத்தின் வாயிலாக பார்க்கையில் சில ராசிகளுக்கு சுபமான பலன் அளிக்காது.
சுபகிருது வருடம் ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் இரவு 9:00 மணிக்கு மேல் வரும் சந்திர கிரகணம் நம் கண்களுக்கு புலன்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நவம்பர் 8, 2022 செவ்வாய்க்கிழமை நிகழும் சந்திர கிரகணத்தால் கீழ்வரும் ராசிகள் வேவ்வேறு பலன்கள் அடைய போகிறது.
சந்திர கிரகணத்தில் நற்பலன் பெறும் ராசிகள்
மிதுனம், கடகம், விருச்சிகம், கும்பம் ஆகிய நான்கு ராசிகளுக்கும் நவம்பர் 8, 2022 அன்று நிகழும் சந்திர கிரகணத்தால் பாதிப்பு இல்லை.
சந்திர கிரகணத்தில் பாதிப்பு அடையும் ராசிகள்
மேஷம், ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய 4 ராசிகளுக்கு சந்திர கிரகணத்தால் நற்பலன் கிடைக்காது.
மிதமான பாதிப்பு அடையும் ராசிகள்
சிம்மம், துலாம், தனுசு, மீனம் ஆகிய நான்கு ராசிகளுக்கு சந்திர கிரகணத்தால் பெரிய பாதிப்பு இல்லை, ஓரளவு பலன்களும் உண்டு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…