Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam

Nandhinipriya Ganeshan Updated:
ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam Representative Image.

நவக்கிரங்களில் நீதி பகவானாக விளங்குபவர் சனி பகவான். இவர், இரண்டரை ஆண்டுகள் ஒரு ராசியில் சஞ்சரிப்பார். அந்தவகையில், 12 ராசிகளையும் கடப்பதற்காக 30 ஆண்டுகள் எடுத்துக் கொள்கிறார். பொதுவாக, நம்முடைய ஜாதகத்தில் எந்தவகையான சனி இருக்கிறதோ, அதை பொறுத்தே நன்மையும் தீமையும் நிகழும். அந்தவகையில், எத்தனை வகையான சனிகள் இருக்கின்றன; அவை என்ன மாதியான தாக்கத்தை ஏற்படுத்தும்; அந்த தாக்கத்தை குறைக்க என்ன பரிகாரம் செய்யலாம் என்பது பற்றி பார்க்கலாம். 

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam Representative Image

ஏழரை சனி:

ராசிக்கு 12ம் இடம், 1, 2 ம் இடத்தில் சனி பகவான் அமர்ந்திருந்தால் அதை "ஏழரை சனி" என்பார்கள். ஒருவருக்கு ஏழரை சனி ஆரம்பித்தால், அன்றாடம் முடிக்க வேண்டிய வேலையை சரியான நேரத்தில் முடிக்க முயாது. இதனால், குடும்பத்திலும் வேலை செய்யும் இடத்திலும் பெயர் கெட வாய்ப்புள்ளது. அதேபோல், எதிர்பார்த்த ஊதிய உயர்வு, பதவி கிடைக்காமல் போகலாம். சொந்த தொழிலில் லாபம் குறையத் தொடங்கும். எவ்வளவு முட்டிமோதினாலும் நஷ்டம் மட்டுமே ஏற்படும்.

பரிகாரம்

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam Representative Image

ஜென்ம சனி:

ஒரு நபரின் ஜாதகத்தில் அவருடைய லக்னத்திற்கு 12 ஆம் இடத்தில் இருக்கும் சனி கிரகம் அவரது ஜென்ம லக்னமாகிய 9 அம வீட்டில் பெயர்ச்சி ஆவதை தான் "ஜென்ம சனி" என்பார்கள். இரண்டரை ஆண்டு ஜென்ம லக்னத்தில் சஞ்சாரம் செய்யும் சனிபகவானால் ஜாதகக்காருக்கு பல விதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

பரிகாரம்

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam Representative Image

வாக்கு சனி, பாத சனி:

ஒரு நபரின் ஜாதகத்தில் சனிக்கிரகம் அவரது ராசிக்கு 2 ஆம் வீட்டில் பெயர்ச்சியடைந்து, அந்த வீட்டில் இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்வதை தான் "பாத சனி" என்பார்கள். எந்த ராசியில் சனி அமர்கிறாறோ அந்த ராசியின் முன்பாக உள்ள ராசியில் பிறக்கும் சனியானது வாக்கு சனி எனப்படுகிறது. வாக்கு சனி நடக்கும்போது கொடுத்த வாக்கை காப்பாற்ற முடியாமல் திணரும் அளவிற்கு சூழ்நிலை ஏற்படும்.

பரிகாரம்

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam Representative Image

பொங்கு சனி:

30 வயதிலிருந்து 60 வயதிற்குள், இரண்டாவது முறை வரக்கூடிய ஏழரை சனி காலம் பொங்கு சனி எனப்படும். இச்சனி காலத்தில் ஏற்படும் தாக்கமானது முழுக்க முழுக்க பொருளாதார ரீதியான தாக்கமாக தான் இருக்கும். ஒருவரின் வாழ்க்கையே திசை திரும்பக்கூடியதாக இருக்கும்.  கர்மாவிற்கு ஏற்றபடி அவரின் காலம் மிக கடுமையானதாகவோ அல்லது பெரிய பாதிப்பில்லாமல் நாட்கள் நகரும்.

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam Representative Image

மங்கு சனி:

ஒருவர் பிறந்து 30 வயதுக்குள் முதன் முறையாக வரும் ஏழரை சனி காலத்தை தான் மங்கு சனி என்பார்கள். இந்த சனியின் தாக்கமானது மற்ற சனிகளுடன் ஒப்பிடும்போது அவ்வளவாக இருக்காது. இருப்பினும், இந்த சனி இருக்கும் ஜாதககாரர்களின் பெற்றோர்களுக்கே தாக்கம் அதிகம் இருக்கும். எனவே, மங்கு சனி நடக்கும் ராசியினரின் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam Representative Image

அஷ்டமத்து சனி:

முன் ஜென்மத்தில் ஒரு செய்த கர்ம வினைகளை பொறுத்து சனி பகவான் அவர்களுக்கு தண்டனையை ஏழரை சனி அல்லது அஷ்டமத்து சனி காலத்தில் கொடுப்பார். ஒவ்வொருவருக்கும் வயதிற்கு ஏற்ப அஷ்டம சனி பிரச்சனை ஏற்படும். அதாவது 4 முதல் 15 வரை உள்ளவர்களுக்கு அஷ்டமத்து சனி நடக்கிறது என்றால், அவர்கள் படிப்பில் சற்று மந்தநிலையில் இருப்பார்கள்.

அதுவே, 40 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு நடக்கிறது என்றால் அஷ்டம சனி காலம் முடிவடையும் வரை அவர்களுடைய குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் வந்துக்கொண்டே இருக்கும். அதேபோல், சிலருக்கு வேலை பறிப்போகவும் வாய்ப்புள்ளது. பணப்பற்றாக்குறை, பணியிடத்தில் தொடர்ந்து பிரச்சனை போன்றவை இருந்துக்கொண்டே இருக்கும். 

பரிகாரம்

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam Representative Image

மாரக சனி:

ஒருவரின் வாழ்நாளில் மூன்றாவது முறையாக வரக்கூடிய ஏழரை சனி காலம் மரண சனி அல்லது மாரக சனி எனப்படும். இந்த சனிக்காலத்தில் சனிபகவானின் பார்வைபடும் ஜாதககாரர்களுக்கு மரணம் நிச்சயம் என்று உறுதியாக சொல்ல முடியாது. ஆனால், மரணத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டே இருப்பார். அந்த ஜாதகருக்கு நல்ல தசை, புத்தி நடந்தால் பெரிய பிரச்னையை சந்திக்க மாட்டார். இல்லையேல் அவருக்கு மரணம் ஏற்படக்கூடிய வாய்ப்புள்ளது. எனவே, மற்ற சனிக்காலங்களை காட்டிலும் மாரக சனி காலத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam Representative Image

விரைய சனி:

ஏழரை சனியின் முதற்கட்டமே விரைய சனி எனப்படும். இது ஒரு ஜாதகத்தில் இரண்டரை வருட காலம் ஆட்சி செய்யும். இச்சனியின் காலத்தில் பொருளாதாரத்தில் பெரிய நஷ்டம் ஏற்படும்.

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam Representative Image

அர்த்தாஷ்டம சனி:

சனிபகவான் ஒரு இராசிக்கு 4ஆம் இடத்தில் சஞ்சரிக்கும் நிலையை தான் அர்த்தாஷ்டம சனி என்பார்கள். அர்த்தாஷ்டம சனி காலத்தில் கிரகங்களின் பார்வை, லக்ன சுபர் மற்றும் அசுபர் என்ற நிலைக்கு ஏற்ப பலன்களை தருவார். பொதுவாக, அர்த்தாஷ்டம சனியில் பொருள் மற்றும் மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். அர்த்தாஷ்டம சனி நடக்கும் ராசியினருக்கு அல்லது அவரது குடும்பத்தில் யாரோவொருக்கு திடீர் உடல்நல பாதிப்புகள் ஏற்படும். அதனால், சம்பாத்தியம் அனைத்தும் செலவிலேயே முடிந்துவிடும். சில சமயம் கடன் வாங்கும் அளவிற்கும் செல்லலாம்.

பரிகாரம்

ஏழரை சனி, ஜென்ம சனி, அஷ்டமத்து சனி - எது அதிக ஆபத்து? | Different Types of Sani Dhosam Representative Image

கண்டக சனி:

ராசியில் நடைபெறும் ஒவ்வொரு சனி பெயர்ச்சியும் நம் ராசியில் இருக்கும் சந்திரனை பொறுத்தே அமைகிறது. சனி கிரகம் சந்திரனுக்கு முன்னும் பின்னும் அல்லது சந்திரனோடு இணைந்தோ சஞ்சாரம் செய்தால் அதற்கு ஏழரை சனி என்று பெயர். அதேபோல், ராசியில் 7 ஆம் இடத்தில் கோச்சார சனி வந்தால் அதை கண்டக சனி என்று சொல்வார்கள். 7 ஆம் இடத்தில் இருந்து சனி பகவான் உங்க ராசியை பார்ப்பதால் கண்டக சனி ஏற்படுகிறது. ஒருவருக்கு கண்டக சனி ஏற்பட்டால் கழுத்தை பிடிக்கும் அளவிற்கு பிரச்சனை இருக்கும்.

பரிகாரம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்