Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!

Gowthami Subramani October 22, 2022 & 08:30 [IST]
தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!Representative Image.

தீபாவளி என்றாலே கொண்டாட்டம் தான். புத்தாடை அணிந்து இனிப்புகளைப் பகிர்ந்து, பட்டாசுகள் வெடித்து கொண்டாடி மகிழ்வோம். அதே சமயம் இந்த திருநாளில் தீபாவளி நோம்பு, மேற்கொள்வர். இந்த நாளில் நோம்பு இருப்பதற்கு ஒரு சிறப்பான காரணம் உள்ளது. தீபாவளி அன்று கேதார கௌரி விரதம் உள்ளது. பொதுவாக இந்த விரதத்தை பெண்கள் கடைபிடிப்பார்கள். இந்த நன்னாளில் இருக்கும் தீபாவளி நோம்பு எதற்காக இருக்கப்படுகிறது என்றும், இந்த விரதத்தை எப்படி இருக்கலாம் என்றும் இந்தப் பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!Representative Image

தீபாவளி நோம்பு என்றால் என்ன?

தீபாவளி தினத்தன்று இருக்கும் கௌரி விரத நோம்பு, அம்மனை வேண்டி வழிபடக்கூடிய நோம்பு ஆகும். இந்த விரதத்தை நம் முன்னோர்கள் காலத்தில் 21 நாள்கள் வரை மேற்கொள்வர். அதாவது, 21 சாப்பிடாமல் விரதம் இருந்து தீபாவளி அமாவாசை தினத்தன்று விரதத்தை முடிப்பர். ஆனால், இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தீபாவளிக்கு வரும் அமாவாசையில் மட்டும் நோம்பு இருந்து விரதம் இருப்பர். சரி, இந்த தினத்தில் தீபாவளி நோம்பு எப்படி இருப்பது என்பதைப் பார்க்கலாம்.

தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!Representative Image

தீபாவளி நோம்பு இருக்கும் முறை

முதலில், நம் வீட்டை தூய்மை செய்து பின் குளித்து விட்டு அதன் பிறகு பூஜை அறையில் சாமியை அலங்கரிக்க வேண்டும்.

ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் நோம்பு இருக்க வேண்டும். மேலும், அருகில் உள்ள கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

கோவிலுக்கு சென்று வந்த பின், வீட்டில் சாமிக்கு பலகாரங்களை படையலிட்டு வழிபட வேண்டும். தீபாவளி நோம்பு இருப்பவர்கள் 2 புது துணிகளை வாங்கிக் கொள்ள வேண்டும்.

நோம்பு இருக்கும் நாளில் வீட்டில் அசைவம் செய்யக் கூடாது. நோம்பு விரதம் முடித்து சாப்பிடுபவர்கள், புதிய பாத்திரத்தில் சமைத்து சாப்பிட வேண்டும்.

மேலும், நோம்பு இருப்பவர்கள் கடைகளில் இருக்கும் வண்ணக் கயிறுகளை வாங்கி, சாமியிடம் வைத்து பூஜை செய்து கையில் கட்ட வேண்டும்.

குறிப்பு: அந்த வருடத்தில், உறவினர்கள் யாரேனும் இறந்து விட்டால் நோம்பு கட்டாயம் இருக்கக் கூடாது.

தீபாவளி நோன்பு இருக்கும் முறை? நோம்பு இருப்பதற்கான காரணம்… தீபாவளிக்கு கட்டாயம் செய்யக் கூடியவை..!Representative Image

தீபாவளி நோம்பு இருப்பதற்கான காரணம்

பெண்கள் மேற்கொள்ளும் இந்த தீபாவளி நோம்பு பொதுவாக திருமணமான மற்றும் திருமணமாகாத பெண்களும் இருப்பர்.

திருமணமான பெண்கள் தன்னுடைய தாலி நிலைத்திருக்க வேண்டும் என்றும், தன்னுடைய கணவன் எந்த நோய் நொடிகளுமின்றி நல்லபடியாக இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விரதம் இருப்பர்.

மேலும், திருமணமாகாத கன்னிப் பெண்கள், தனக்கு வரப்போகும் வாழ்க்கைத் துணை நல்லவராக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு விரதம் இருப்பர்.

வாழ்வில் சிறந்த பலன்கள் கிடைக்க தீபாவளி தினத்தில் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்