மாதம் தோறும் 2 ஏகாதசிகள் வரும். அப்படி ஒரு வருடத்தில் 25 ஏகாதிகள் வருகின்றன. இவற்றில் மிகவும் விஷேசமானது மார்கழி மாதம் வளர்பிறையில் வரும் "வைகுண்ட ஏகாதசி". இந்த மங்களகரமான நாளில் பெருமாளுக்கு விரதம் இருந்து வழிபாடு செய்வதன் மூலம் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். மோட்சம் கிடைக்கும். அதுமட்டுமல்லாமல், அன்றைய தினம் விரதம் இருப்பது என்பது வருடம் முழுவதும் விரதம் இருப்பதற்கு சமம்.
மேலும், இன்றைய தினத்தில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்க வாசல் திறக்கப்படும். சொர்க்க வாசல் என்று சொல்லப்படும் பரமபத வாசல் வழியாக சென்றால் முக்தி கிடைப்பதோடு, வாழ்க்கையில் மகிழ்ச்சியும் செல்வமும் கிடைக்கும்.
➤ ஏகாதசி நாளில் துளசி இலைகளை எக்காரணத்திற்காகவும் பறிக்கக் கூடாது. எனவே, தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விட வேண்டும்.
➤ இரவு முழுவதும் கண்விழித்திருக்க வேண்டும் என்பதற்காக தாயம் ஆடுவார்கள். அதற்கு பேசாமல் தூங்கி விடுவதே நல்லது. ஏனென்றால், விளையாடும் போது இதோ 2 போட்டு உன் தலையை கொய்கிறேன், 4 போட்டு உன்னை வெட்டுகிறேன் என அபசகுணமான வார்த்தைகளை கேட்டால் எப்படி இறைவனின் அருள் கிடைக்கும்.
➤ அதேபோல், பரமபத விளையாட்டு ஆடுவதையும் தவிர்க்க வேண்டும்.
➤ சிலர் இரவு முழுவதும் தூங்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக சினிமாவுக்கு செல்வார்கள், வீட்டில் டிவி நிகழ்ச்சிகளை பார்த்துகொண்டே கண் விழித்திருப்பார்கள். இதுவும் தவறே.
➤ ஏகாதசி நாளில் விரதம் இருப்பவர்களை கேலி செய்யக்கூடாது.
➤ ஏகாதசி திதி நாட்களில் தாய், தந்தைக்கு நினைவு நாள் (சிரார்த்தம்) வந்தால் அதை மறு நாள் துவாதசி அன்று நடத்த வேண்டும். ஏகாதசி நாளில் செய்ய கூடாது.
➤ ஏகாதசி அன்று உணவு அளிக்கவும் கூடாது. அந்த உணவை ஏற்கவும் கூடாது. அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தை கூட சாப்பிடக் கூடாது. முடிந்தவரை கோயில்களில் கொடுக்கும் பிரசாதத்தை தவிர்க்க வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…