Tue ,Mar 19, 2024

சென்செக்ஸ் 72,012.05
-736.37sensex(-1.01%)
நிஃப்டி21,817.45
-238.25sensex(-1.08%)
USD
81.57
Exclusive

நவராத்திரி முதல் நாள்: தடைகள் நீங்கி வெற்றியை அருளும் துர்க்கை அம்மன் போற்றிகள்..!

Gowthami Subramani September 25, 2022 & 19:00 [IST]
நவராத்திரி முதல் நாள்: தடைகள் நீங்கி வெற்றியை அருளும் துர்க்கை அம்மன் போற்றிகள்..!Representative Image.

அன்னை துர்க்கை அம்மன், தீய சக்திகளை அழித்து துன்பங்கள் அனைத்தையும் நீக்கும் மகிஷாசுரமர்தினி ஆகத் திகழ்பவள். அருட்பெரும் சக்தி மிக்க துர்க்கை அம்மனை வழிபடுவதால் அனைத்து வகையான நன்மைகளும் கிடைக்கும் எனக் கூறுவர். துர்க்கை அம்மனைப் போற்றி, செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமைகளில் வழிபடுவதன் மூலம் தீராத நோய்களும் தீர்ந்து, தடைகள் அனைத்தும் விலகும் என்று நம்பப்படுகிறது.

நவராத்திரி முதல் நாள் துர்க்கை அம்மனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் துர்க்கை அம்மனுக்குப் பிடித்த நைவேத்தியங்கள் செய்து, மனப்பூர்வமாக பக்தியுடன் துர்க்கை அம்மனை போற்றி வணங்கிட நல்லவையே நடக்கும். இந்த பதிவில், துர்க்கை அம்மன் 108 போற்றிகள் மற்றும் காயத்ரி மந்திரமும் கொடுக்கப்பட்டுள்ளது.

துர்க்கை காயத்ரி மந்திரம்

ஓம் காத்யாயனாய வித்மஹே

கன்யா குமரீச தீமஹி

தந்நோ துர்க்கிப் ப்ரசோதயாத்

துர்க்கை அம்மன் 108 போற்றிகள்

ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி

ஓம் அஷ்டமி நாயகியே போற்றி

ஓம் அபயம் தருபவளே போற்றி

ஓம் அசுரரை வென்றவளே போற்றி

ஓம் அன்பர்க்கு எளியவளே போற்றி

ஓம் அமரரைக் காப்பவளே போற்றி

ஓம் அறம் வளர்க்கும் தாயே போற்றி

ஓம் அருள்நிறை அன்னையே போற்றி

ஓம் அருளைப் பொழிபவளே போற்றி

ஓம் ஆதாரம் ஆனவளே போற்றி


ஓம் ஆலால சுந்தரியே போற்றி

ஓம் ஆதியின் பாதியே போற்றி

ஓம் இன்னருள் சுரப்பவளே போற்றி

ஓம் இணையில்லா நாயகியே போற்றி

ஓம் இல்லாமை ஒழிப்பாய் போற்றி

ஓம் இடபத்தோன் துணையே போற்றி

ஓம் ஈர மனத்தினளே போற்றி

ஓம் ஈடிணையற்றவளே போற்றி

ஓம் ஈஸ்வரன் துணையே போற்றி

ஓம் உக்ரரூபம் கொண்டவளே போற்றி


Representative Image. நவராத்திரி கொண்டாடுவதற்கு முன், கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை..!


ஓம் உன்மத்தின் கரம் பிடித்தாய் போற்றி

ஓம் உள்ளொளியாய் ஒளிர்பவளே போற்றி

ஓம் ஊழ்வினை தீர்ப்பாய் போற்றி

ஓம் எண் கரம் கொண்டவளே போற்றி

ஓம் எலுமிச்சமாலை அணிபவளே போற்றி

ஓம் ஏழலகும் வென்றவளே போற்றி

சோம் ஏழ்மை அகற்றுபவளே போற்றி

ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி

ஓம் ஒளிமணி தீபத்தாயே போற்றி

ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி


ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி

ஓம் கவலையைத் தீர்ப்பவளே போற்றி

ஒம் காருண்ய மனம் படைத்தவளே போற்றி

ஓம் காளியே நீலியே போற்றி

ஓம் காபாலியை மணந்தவளே போற்றி

ஓம் காவல் நிற்கும் கன்னியே போற்றி

ஓம் கிரிராஜன் மகளே போற்றி

ஓம் கிருஷ்ண சகோதரியே போற்றி

ஓம் குமரனைப் பெற்றவளே போற்றி

ஓம் குறுநகை கொண்டவளே போற்றி


ஓம் குங்கும நாயகியே போற்றி

ஓம் குலம் விளங்கச் செய்தவளே போற்றி

ஓம் கிரியா சக்தி நாயகியே போற்றி

ஓம் கோள்களை வென்றவளே போற்றி

ஓம் சண்டிகேஸ்வரியே தாயே போற்றி

ஓம் சர்வசக்தி படைத்தவளே போற்றி

ஓம் சந்தனத்தில் குளிப்பவளே போற்றி

ஓம் சர்வ அலங்காரப் பிரியையே போற்றி

ஓம் சாமுண்டி ஈஸ்வரியே போற்றி

ஓம் சங்கரன் துணைவியே போற்றி


Representative Image. நவராத்திரி ஒன்பது நாட்களும் வழிபாடு செய்யும் முறை….! செல்வம் பெருகி மென்மேலும் வளர்ச்சி அடைய இத ஃபாலோப் பண்ணுங்க.....


 

ஓம் சங்கடம் தீர்ப்பவளே போற்றி

ஓம் சிவன்கரம் பிடித்தவளே போற்றி

ஓம் சிங்கார வல்லியே போற்றி

ஓம் சிம்மவாகன நாயகியே போற்றி

ஓம் சியாமள நிறத்தாளே போற்றி

ஓம் சித்தி அளிப்பவளே போற்றி

ஓம் செவ்வண்ணப் பிரியையே போற்றி

ஓம் ஜெய ஜெய துர்கா தேவியே போற்றி

ஓம் ஜோதி சொரூபமானவளே போற்றி

ஓம் ஞானம் அருளும் செல்வியே போற்றி


ஓம் ஞானக்கனல் கொண்டவளே போற்றி

ஓம் ஞாலம் காக்கும் நாயகியே போற்றி

ஓம் தயாபரியே தாயே போற்றி

ஓம் திருவெலாம் தருவாய் போற்றி

ஓம் திருபுர சுந்தரியே போற்றி

ஓம் தீமையை அழிப்பாய் போற்றி

ஓம் துஷ்ட நிக்ரஹம் செய்பவளே போற்றி

ஓம் துர்கா பரமேஸ்வரியே போற்றி

ஓம் நன்மை அருள்பவளே போற்றி

ஓம் நவசக்தி நாயகியே போற்றி


ஓம் நவகோணத்தில் உறைபவளே போற்றி

ஓம் நிமலையே விமலையே போற்றி

ஓம் நிலாப்பிறை சூடியவளே போற்றி

ஒம் நிறைசெல்வம் தருவாய் போற்றி

ஓம் நின்னடி பணிந்தோம் போற்றி

ஓம் பக்தர்க்கு அருள்பவனே போற்றி

ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி

ஓம் பயிரவியே தாயே போற்றி

ஓம் பயத்தைப் போக்குபவளே போற்றி

ஓம் பயங்கரி சங்கரியே போற்றி


ஓம் பார்வதிதேவியே போற்றி

ஓம் புவனம் படைத்தவளே போற்றி

ஓம் புண்ணியம் மிக்கவளே போற்றி

ஓம் பூவண்ணன் தங்கையே போற்றி

ஓம் மகிஷாசுர மர்த்தினியே போற்றி

ஓம் மங்கல நாயகியே போற்றி

ஓம் மகேஸ்வரித் தாயே போற்றி

ஓம் மங்கையர்கரசியே போற்றி

ஓம் மகமாயித் தாயே போற்றி

ஓம் மாதர் தலைவியே போற்றி


ஓம் மாங்கல்யம் காப்பாய் போற்றி

ஓம் மாணிக்கவல்லியே போற்றி

ஓம் மாயோன் தங்கையே போற்றி

ஓம் முக்கண்ணி நாயகியே போற்றி

ஓம் முக்தியளிப்பவளே போற்றி

ஓம் முக்கண்ணன் தலைவியே போற்றி

ஓம் மூலப்பரம் பொருளே போற்றி

ஓம் மூவுலகம் ஆள்பவளே போற்றி

ஓம் யசோதை புத்திரியே போற்றி

ஓம் யமபயம் போக்குபவளே போற்றி


Representative Image. கர்ப்ப காலத்தில் நவராத்திரி விரதம் இருக்கலாமா..? செய்யக் கூடியவை மற்றும் செய்யக் கூடாதவை என்னென்ன?


ஓம் ராதுகால துர்க்கையே போற்றி

ஓம் ரவுத்தரம் கொண்டவளே போற்றி

ஓம் வல்லமை மிக்கவளே போற்றி

ஓம் வாழ்வருளும் அம்மையே போற்றி

ஓம் விஷ்ணு துர்க்கையே போற்றி

ஓம் வீர நெஞ்சத்தவளே போற்றி

ஓம் வைஷ்ணவித்தாயே போற்றி

ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி


நவராத்திரி இரண்டாம் நாள்: மன அமைதியுடன், தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள பிரம்மச்சாரினி மந்திரத்தை உச்சரியுங்கள்..நவராத்திரி இரண்டாம் நாள்: மன அமைதியுடன், தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள பிரம்மச்சாரினி மந்திரத்தை உச்சரியுங்கள்..


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்