எதனால் சனி பகவான் கர்ம பலன் அளிக்கும் கடவுளாக திகழ்கிறார் தெரியுமா? பிறப்பால் அனைவரையும் சரியான பாதையில் அழைத்துச் செல்ல மூவேந்தர்களால் படைக்கப்பட்ட சக்தி தான் சனீஸ்வரர். இவர் தன்னுடைய கடமைகளை புரிந்து கொண்ட கதைகளைப் பற்றி பாப்போம்.
சூரிய பகவான் தன்னுடைய தந்தை என்ற உண்மை தெரிந்துகொண்டு சனி பகவான் பல எதிர்பார்ப்புகளுடன் சூரியலோகத்திற்கு செல்கிறார். ஆனால் அவர், யமன், யமுனா மற்றும் மற்ற தேவர்கள் யாரும் இவரை தேவனாக கருத வில்லை. இருப்பினும் தாயிற்காக அனைத்தையும் தாங்கிக்கொண்டு அங்கு வசிக்கிறார். அப்போது தேவி சந்தியாவின் தந்தை விஸ்வகர்மா அவர்கள் இந்த தகவல் அறிந்து சூரிய லோகம் வருகிறார். ஆனால் தன்னுடைய மகள் சந்தியாவின் நடவடிக்கைகளில் மாற்றங்களை உணர்ந்த அவர் சனி மற்றும் தேவி சந்தியாவையும் தன்னுடைய இடத்திற்கு அழைக்கிறார்.
அங்கு சனியின் பிறப்பு மற்றும் தேவி சாயா பற்றிய அனைத்து உண்மைகளையும் தெரிந்துக்கொள்கிறார். அந்த இடத்தில் தான் விஸ்வகர்ம மஹாதேவர் சிவா பெருமானின் கட்டளைக்கு இணங்க கர்மா பலன் அளிப்பவருக்கு ஆயுதத்தை தயாரித்து வைத்துள்ளார். அந்த ஆயுதத்தை மற்ற தேவர்கள் யாராலும் எடுக்க முடியவில்லை. அது முற்றிலும் கர்ம பலனை அளிப்பவருக்கே உரிய ஆயுதமாகும். எப்போது சிவ பெருமான் நீதியை வழங்கும் சக்தி உருவாக்க உள்ளது என்று கூறினாரோ அப்போதில் இருந்து தேவர் மற்றும் அசுரர்கள் அந்த சக்தியை தேடி வருகின்றனர்.
இறுதியாக சனி தான் அந்த சக்தியாக இருக்குமோ என்ற சந்தேகத்தில் இந்திர தேவர் மற்றும் சுக்லாச்சாரியார் இருவரின் சூழ்ச்சியில் சாயா தேவி மாட்டிக்கொண்டார். ஏனெனில், அப்போது தான் சனி அந்த ஆயுதத்தை எடுக்க முயற்சிப்பார் என்று எண்ணினர். அதே போல நடக்கையில் சனி அந்த ஆயுதத்தி எடுத்து தன்னுடைய தாயை காப்பாற்றிவிட்டார். இதனால் இந்திர தேவர் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார். ஏனெனில் ஒரு தேவன் என்றுமே தேவலோகத்திற்கே தன்னுடைய ஆதரவை தருவான் என்று நினைக்கிறார். ஆனால் சனீஸ்வரர் அப்படி செய்வாரா என்பதை பொறுத்திருந்து பாப்போம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…