Thu ,Sep 28, 2023

சென்செக்ஸ் 65,900.73
-217.96sensex(-0.33%)
நிஃப்டி19,648.15
-68.30sensex(-0.35%)
USD
81.57
Exclusive

குரு பகவானால் ஏற்படும் தோஷத்தை விலக்கும் சக்திவாய்ந்த மந்திரம் | Guru Bhagavan Gayatri Mantra in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
குரு பகவானால் ஏற்படும் தோஷத்தை விலக்கும் சக்திவாய்ந்த மந்திரம் | Guru Bhagavan Gayatri Mantra in TamilRepresentative Image.

குரு பகவான் என்பவர் 9 கிரகங்களில் ஒருவரான கிரக வடிவம். இந்திர லோகத்தில் தேவர்களுக்கெல்லாம் குருவாக, ஆலோசனை வழங்கக் கூடியவராக ஆசிரியர் பணியை செய்பவராக இருப்பதால் இவர் 'தேவ குரு' (ப்ருஹஸ்பதி) என்று அழைக்கப்படுகிறார். இவர் நவகிரங்களில் வடக்கு திசை நோக்கி அருள்பாலிப்பவர். குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர். இவருக்கு உகந்த நிறம் மஞ்சள். அதேப்போல் அவருக்கு விருப்பமான நைவேத்தியம் கொண்டைக் கடலை. 

'குரு பார்த்தால் கோடி நன்மை' என்பதற்கேற்ப ஒருவருடைய ராசியில் குரு பார்வை இருந்தாலே போதும் நம்முடைய வாழ்க்கையில் சகல செல்வங்களையும் பெற்றுவிடலாம். ஆனால், அதுவே ஒருவருடைய ஜாதகத்தில் குரு தோஷம் இருந்தால் பல விதமான கெடுபலன்களை அனுபவிக்க நேரிடும். குரு பகவானால் ஏற்படக்கூடிய இத்தகைய தோஷத்தை முறையான பரிகாரம் செய்து, குரு காயத்ரி மந்திரத்தை கூறுவதன் மூலமாக அகற்றலாம்.

குரு பகவானால் ஏற்படும் தோஷத்தை விலக்கும் சக்திவாய்ந்த மந்திரம் | Guru Bhagavan Gayatri Mantra in TamilRepresentative Image

குரு பகவான் காயத்ரி மந்திரம்:

ஓம் விரு‌ஷபத் வஜாய வித்மஹே 
க்ருணி ஹஸ்தாய தீமஹி 
தந்நோ குருஹ் ப்ரசோதயாத்

இடப்பக்கத்தில் கொடியை வைத்திருக்கும் குரு பகவானே, எப்போதும் உங்கள் அருட்கரங்களால் அருள்மழை பொழியும் ப்ரகஸ்பதியே, என் வாழ்வில் உள்ள தீமைகளை அகற்றி நன்மைகளை அளித்திட வேண்டுகிறேன் என்பதே இம்மந்திரத்தின் பொருள்.

எப்படி சொல்ல வேண்டும்?

குரு பகவான் காயத்ரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் மூலம் குரு தோஷம் விலகும், தீமைகள் விலகும், அரசு பணிக்கு முயற்சி செய்வோருக்கு பணி கிடைக்கும். அதோடு குருவால் வாழ்க்கையில் சகல நன்மைகளும் ஏற்படும். தோஷம் இருப்பவர்கள் மட்டும் தான் இதை செய்ய வேண்டும் என்பது கிடையாது. குருவின் அருள் கிடைக்க வேண்டும் நினைக்கும் அனைவரும் இந்த மந்திரத்தை சொல்லலாம். தினமும் துதிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் மட்டும் துதிப்பதாலும் முழுமையான பலன்களை பெற இயலும்.

குரு பகவானால் ஏற்படும் தோஷத்தை விலக்கும் சக்திவாய்ந்த மந்திரம் | Guru Bhagavan Gayatri Mantra in TamilRepresentative Image

குரு தோஷத்தை நீக்கும் பரிகாரங்கள்:

குரு பகவானால் ஏற்படக்கூடிய தோஷத்தை நீக்கி வாழ்க்கையில் மகிழ்ச்சியை பெறுவதற்கு ஆறு மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ தஞ்சாவூர் மாவட்டத்தில் இருக்கும் ஆலங்குடி ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோவிலுக்கு காலை 8 மணிக்குள் சென்று, தட்சிணாமூர்த்தி வழிபாடு செய்ய வேண்டும். 

ஒருவேளை கோயிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் நவக்கிரக சன்னதிக்கு வியாழக்கிழமை நாளில் காலை 8 மணிக்குள் சென்று 27 கொண்டைக்கடலை கோர்த்த மாலையை குரு பகவானுக்கு அணிவித்து, அவருக்கு பிடித்த மஞ்சள் நிறத்தில் பூக்கள் சமர்ப்பித்து, மஞ்சள் நிற இனிப்புகளை நைவேத்தியம் செய்து, மேலே சொன்ன காயத்ரி மந்திரத்தை 108 முறை துதிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை குறைந்தது 9 முதல் 27 வாரங்கள் வரை செய்தால் குரு பகவானால் ஏற்படும் தோஷம் விலகி, வாழ்க்கையில் செல்வ செழிப்பு கிடைக்கப்பெறுவீர்கள். 

மேலே சொன்ன இரண்டு பரிகாரங்களையும் செய்ய முடியாதவர்கள் வியாழக்கிழமை நாட்களில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு மஞ்சள் நிறத்தில் ஏதாவது ஒரு இனிப்பு வகைகளை செய்து உண்ண கொடுக்க வேண்டும். இதுவும் குரு பகவானின் அருளை பெற உதவும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்