Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,488.99
-454.69sensex(-0.62%)
நிஃப்டி21,995.85
-152.05sensex(-0.69%)
USD
81.57
Exclusive

வீட்டில் மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்பது? | How to Do Mahashivratri Pooja at Home in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
வீட்டில் மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்பது? | How to Do Mahashivratri Pooja at Home in TamilRepresentative Image.

சிவபெருமானின் விரதங்களில் மிக முக்கியமான விரத நாள் என்றால் அது "மகா சிவராத்தி". மாதந்தோறும் சிவராத்திரி என்பது வந்தாலும் மகா சிவராத்திரியாக நாம் கொண்டாடக்கூடிய மாசி மாதத்தில் வருகின்ற இந்த சிவராத்திரிக்கென்று தனிச்சிறப்புண்டு. இந்த சிவராத்தியின் இரவு முழுவதும் 4 காலமாக வகுத்து தேவர்கள் வழிபட்டது, அம்பிகை வழிபட்டது, விஷ்ணு வழிபட்டது, பிரம்ம வழிபட்டது என்று ஒவ்வொரு காலத்திற்கு ஒவ்வொரு விதமான வழிபாடுகளை மிகத் தெளிவாக நம் முன்னோர்கள் வகுத்துத்தந்திருக்கிறார்கள். அந்தவகையில், 2023 ஆம் ஆண்டிற்குரிய மகா சிவராத்திரி எந்த நாள் வருகிறது? எப்படி விரதம் மேற்கொள்வது? வீட்டில் எவ்வாறு வழிபடுவது? போன்ற தகவல்களை பார்க்கலாம். 

வீட்டில் மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்பது? | How to Do Mahashivratri Pooja at Home in TamilRepresentative Image

மகா சிவராத்திரி 2023:

மகா சிவராத்திரி இந்த ஆண்டு பிப்ரவரி 18 ஆம் தேதி வருகிறது. மாசி மாதத்தில் வரும் தேய்பிறை சதுர்த்தசி திதி நாளில் தான் மகா சிவராத்திரி என்பது நடைபெறும். அந்தவகையில், இந்த வருடம் பிப்ரவரி 18 ஆம் தேதி காலை 06.20 மணிக்கு மேலேயே திதி என்பது துவங்கிவிடுகிறது. எனவே, இந்த மகா சிவராத்திரி இரவு கண் விழித்து விரதம் மேற்கொண்டால் தெரியாமல் செய்த பாவங்களும், தெரிந்து செய்த பாவங்களும் நம்மை விட்டு அகலும் என்பது ஐதீகம். 

வீட்டில் மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்பது? | How to Do Mahashivratri Pooja at Home in TamilRepresentative Image

மகா சிவராத்திரி விரதம் இருக்கும் முறை:

18ஆம் தேதி இரவு கண்விழித்து 19 ஆம் தேதி காலை விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். முறையாக விரதத்தை எப்படி மேற்கொள்வது என்று தெரிந்துக்கொள்வோம். 17 ஆம் தேதி அதாவது மகா சிவராத்திரிக்கு முன்னாடி இரவு எளிமையான உணவு எடுத்துக்கொண்டு அன்றைய தினம் இரவு உறங்கிக்கொள்ளலாம். அடுத்ததாக, மகா சிவராத்திரி நாளில் காலையில் எழுந்து நீராடிவிட்டு வீட்டின் பூஜையறையில் சிவபெருமானின் படத்திற்கு வில்வ இலைகளால் ஆன மாலை அணிவித்து சுவாமிக்கு சந்தனம், குங்குமம் வைத்து வழிபாட்டை துவங்க ஆரம்பிக்கலாம்.

வீட்டில் மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்பது? | How to Do Mahashivratri Pooja at Home in TamilRepresentative Image

ஒருவேலை லிங்கம் வடிவமாகவே வைத்திருப்பவர்கள், அந்த லிங்கத்திற்கு சந்தனம், குங்குமம் வைத்து வில்வ இலை மாலை அணிவித்து, நைவேத்தியமாக் 2 வாழைப்பழம், வெற்றிலை பாக்கு, 1 டம்ளர் பால் வைத்து வழிபாடு செய்துவிட்டு விரதத்தை துவங்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் சிவபுராணம் படிக்க வேண்டும். வேலையில் இருப்பவர்கள் நேரம் கிடைக்கும்போது படிக்கலாம். விரதத்தின்போது தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம். முடியாதவர்கள் பழச்சாறு, பால், இளநீர் எடுத்துக்கொள்ளலாம். பெண்கள் மாதவிடாய் காலத்திலும் விரதம் இருக்கலாம், ஆனால் பூஜை அறை, கோவிலுக்கு செல்லாமல் மனதில் நினைத்தப்படியே வேண்டிக்கொள்ளலாம்.

வீட்டில் மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்பது? | How to Do Mahashivratri Pooja at Home in TamilRepresentative Image

விரதம் இருக்கக்கூடிய நேரம்:

காலையில் விரதத்தை தொடங்கிய பிறகு அன்றைய தினம் முழுவதும் உபவாசம் இருக்க வேண்டும். மாலை நேரத்தில் நாம் நம் வழிபாட்டை துவங்க வேண்டும். முதல் காலம், இரண்டாம் காலம், மூன்றாம் காலம், நான்காம் காலம் என 4 நான்கு கால பூஜைகளையும் செய்து முடித்துவிட்டு, மறுநாள் காலை 6 மணிக்கு பிறகு விரதத்தை பூர்த்தி செய்து கொள்ளலாம். அதேபோல், சிவராத்திரியன்று கண் விழித்திருந்து மறுநாள் விரதத்தை முடித்ததுமே தூங்க கூடாது. மறுநாள் பகல் முழுவதும் தூங்காமல் மாலை 6 மணிக்கு மேல் சிவபெருமானுக்கு தீபம் ஏற்றி வழிபாடு செய்து அதன்பிறகே தூங்க வேண்டும்.

4 காலம்:

முதல் காலம் - மாலை 07.30 மணிக்கு துவங்கும்

இரண்டாவது காலம் - இரவு 10.30 மணிக்கு துவங்கும்

 மூன்றாவது காலம் - நள்ளிரவு 12:00 மணிக்கு துவங்கும்

நான்காவது காலம் - காலை 04.30 மணிக்கு துவங்கும்

வீட்டில் மகாசிவராத்திரி வழிபாடு செய்வது எப்பது? | How to Do Mahashivratri Pooja at Home in TamilRepresentative Image

வீட்டில் வழிபடும் முறை:

காலையில் விரத்தை தொடங்கி மாலை அதாவது ஒவ்வொரு காலம் துவங்கும்போதும் ஒன்று அல்லது இரண்டு வில்வ இலைகளை சிவபெருமானின் புகைப்படத்தின் மீதோ அல்லது லிங்கத்தின் மீது போட்டு வழிபட்டு சிவமந்திரங்களை படிக்கலாம். இப்படி இரவு முழுவதும் சிவனை வழிபட்டால் நாம் செய்த அனைத்து பாவங்களும் விலகி நன்மை பெருகும். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்