சர்வத்தின் ஆதிபரம்பாத்தமாவான சிவனை அனைத்து ஜீவராசியும் வணங்கும், சித்தர்களின் முழுமுதற்கடவுளான சிவன் அனைத்து உயிரினங்களும் கருணை பயக்கும் கடவுளாகும். சுமார் 1000 ஆண்டு பழமையான இத்திருக்கோவில் தமிழுக்கான முனிவர் எனப் போற்றப்படும் அகத்திய முனிவரால் உருவாக்கப்பட்டது. இத்திருக்கோவிலுக்கு எப்படி செல்வது (How to go Nemilichery Agatheeswarar Temple) என்பதை கீழ்வரும் வாசகம் உங்களுக்கு தெளிவாக எடுத்துரைக்கும்.
கோவிலின் மூலவர் யார்?
அண்டத்தின் ஆதியான அம்மையப்பன் சிவனே ஆகும். இங்கு உள்ள சிவன் அகத்தியரால் நிறுவப்பட்ட காரணத்தால் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படும்.
கருவறையிலுள்ள ஈசன் சதுர வடிவிலான லிங்க அமைப்பில் கிழக்கு திசையில் காட்சியளிக்கிறார்.
கோவில் வரலாறு
கோவிலின் சிறப்பு என்னென்ன?
இத்திருக்கோயிலில் உள்ள விநாயகர் நர்த்தன விநாயகர் எனப்படுவார்.மூலவரின் கருவறைக்கு இடதுபுறம் சண்டிகேஸ்வரர் ஆலயம் உள்ளது. கோவிலுக்கு வெளியே அகத்திய முனிவ புஷ்கரணி உள்ளது.
நீண்ட நாட்களாக நிவர்த்தியாகாத நோய்கள் இங்கு உள்ள மூலவர் ஆவுடையாரை வணங்க தீர்ந்துபோகும். குறைகள் தீர்ந்த பிறகு பக்தர்கள் வஸ்திரம் படைத்து இறைவனை வணங்குவர். மேலும் சிவராத்திரி, திருவாதிரை மற்றும் கார்த்திகை சோமவாரத்தில் சங்காபிசேகம் நடைபெறும்.
கோவில் எப்படி செல்வது?
சென்னை மாநகரத்தில் நெமிலிச்சேரி என்னும் ஊரில் அமைந்துள்ளது, இத்திருக்கோவிலுக்குச் செல்ல முதலில் சென்னை குரோம்பேட்டை ரயில் நிலையம் வந்தடைய வேண்டும். குரோம்பேட்டை ரயில் நிலையத்திலிருந்து 3 கீ.மீ தூரத்தில் நெமிலிசேரி அமைந்துள்ளது. ஏராளமான பேருந்து வசதிகள் இருப்பதால் குரோம்பேட்டையிலிருந்து அகத்தீஸ்வரர் கோவில் எளியதாக வந்துவிடலாம்.
கோவில் திறக்கும் நேரம் என்ன?
காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அய்யன் ஈசன் முகத்தைக் காணலாம்.
கோவில் முகவரி என்ன?
அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோயில்
நெமிலிச்சேரி
சென்னை- 600044
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…