நம் இந்து சமயத்தின் பாரமரியத்தின் அடிப்படையில் செல்வத்தின் திரு உருமாகவும் செல்வ கடாட்சம் நிறைந்திருக்க திருமகள் லட்சுமி தேவியை வணங்க வேண்டும். லட்சுமி தேவியை வீட்டில் வைத்து வழிபட்டால் அந்த வீடு செல்வ செழிப்போடு தலைமுறைகள் தாண்டியும் செல்வத்துடன் வாழும் என நம்பப்படுகிறது.
இப்படி தலைமுறைகள் தாண்டி காலம்காலமாக செல்வ கடாட்சத்துடன் வாழ வீட்டில் லட்சுமி தேவியை எப்படி வணங்குவது (How to Pooja Maha Lakshmi At home In Tamil) என்று கீழ்வரும் வாசகத்தில் அறிவோம்.
வீட்டில் லட்சுமி தேவி வழிபாடு செய்வது எப்படி?
பொதுவாக நம்முடைய வீட்டில் நம் அம்மா, பாட்டிகள் 'வெள்ளிக்கிழமை விளக்கு ஏற்றினால் லட்சுமி தேவி குடி கொள்வாள்' எனப் பேச்சு வழக்கில் சொல்வதைக் கேட்டு இருக்கிறோம். ஆனால் காலப்போக்கில் அதை மறந்து இன்று இருக்கும் அவசரமான உலகத்தில் அதைக் கவனிப்பதில்லை.
தினமும் பூஜை அறையை சுத்தம் செய்து புதியதாக பூ சூட்டி இறைவிக்கு தீபம் ஏற்றி அதன் பின் வழக்கமான வேலையைத் தொடங்கலாம், இவ்வாறு செய்தால் லட்சுமி தேவி நம் வீட்டில் குடி கொண்டு செல்வத்தை அளிப்பார்.
முக்கியமாக வெள்ளிக்கிழமை தினத்தில் பூஜை அறையைச் சுத்தம் செய்து லட்சுமி தேவிக்கு வெற்றிலை பாக்கு வாழைப்பழம் அடங்கிய தாம்பூலத்தை வைத்து வணங்க வேண்டும். இதை வாராவாரம் செய்வதன் மூலம் நம் வீட்டில் மங்காத செல்வ வரவு இருக்கும்.
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…