நம் கனவில் நாம் பல விஷயங்கள் காண்பது யதார்த்தம், அதன் அர்த்தங்கள் என்ன என்பது பல முறை நமக்கு புலப்படுவதில்லை. ஆனால் நம் கனவில் காணும் ஒவ்வொரு விசயத்திற்கும் தனித்தனி சிறப்பு உண்டு. அதில் நம் கனவில் பறவைகள் வந்தாலும் அதற்கு ஒருவித அர்த்தம் உண்டு, இவ்வாசகத்தில் நம் கனவில் பறவைகள் வருவதால் என்ன பலன் என்பதைக் காண்போம்.
Part 3 : கோவில் சார்ந்த கனவு கண்டால் இத்தனை விசயங்கள் நடக்குமா...!
கனவில் பறவை வந்தால் (Kanavu Palangal in Tamil )
காகம்
நம் கனவில் காகம் வந்து மேற்கு நோக்கி குரல் எழுப்பினால் நமக்கு தெரிந்த மனிதர்களின் யாரோ ஒருவர் நம் பழக்கத்திலிருந்து விடுபட போகிறோம் என்பது அர்த்தமாகும்.
ஒருவேளை காக்கை பிடிக்க முயலுவது போல் கனவு வந்தால் நமக்கு பொறுப்புகள் கூடுவது என்பது அர்த்தமாகும்.
காகம் நம் தலையில் கொத்துவது போல கனவு வந்தால் நமக்கு கெடுதல் நடக்கப்போவது என்பது அர்த்தமாகும்.
கோழி
கனவில் சேவல் கூவது போல் கனவு வந்தால் மாற்றம் உண்டாகும் என்பது அர்த்தமாகும்.
நம் கனவில் கோழி தனியாகவோ அல்லது குஞ்சுகளுடன் இரை தேடுவது போலக் கனவு வந்தால் நாம் வீட்டை அல்லது பழைய பொருட்களை சீர்செய்ய போகிறோம் என்பது அர்த்தமாகும்.
புறா
வெண்ணிற புறா கனவில் வந்தால் தொழிலில் மாற்றம் ஏற்படும் என்பது அர்த்தமாகும்.
நம் கனவில் இரண்டு புறாக்கள் ஒன்றாகப் பறப்பது போல் கனவு வந்தால் நம்முடன் நெருக்கத்தில் இருப்பவரின் நட்பு முறியும் என்பது அர்த்தமாகும்.
ஒரு புறாவை நாம் பிடிக்க முயலுவது போல் கனவு வந்தால் நமக்கு புதிய நட்பு கிடைக்க உள்ளது என்பதே அர்த்தமாகும்.
புறாவைக் கூட்டமாகக் கண்டால் நமக்கு உறவில் விரிசல் ஏற்படும்.
கொக்கு
நம் கனவில் கொக்கு வருவது போல் கனவு வந்தால் வருமானம் அதிகரிக்கும், செல்வாக்கு அதிகமாகும்.
குயில்
கனவில் குயில் வந்தால் நல்ல வாழ்க்கை அமையும், திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும் என்பது அர்த்தமாகும்.
ஒருவேளை வேறு எதாவது பாடும் பறவை கனவில் வந்தால் நம் மனதில் மகிழ்ச்சி அதிகமாகும் என்பதைக் குறிக்கும்.
வாத்து
வாத்து நம் கனவில் வந்தால் உதவி கிடைக்கும். முக்கியமாக இக்கட்டான சூழலிலிருந்து விடுபட வழிபிறக்கும்.
தூக்கணாங்குருவி
தூக்கணாங்குருவி கனவில் வந்தால் நல்ல சகுனம் ஆகும். அதுவும் மரக்கிளையில் தொங்குவது போல வந்தால் பண வரவு உண்டு.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…