கார்த்திகை மாதத்தில் வரும் பௌர்ணமி எப்படி சிறப்பு வாய்ந்ததோ, அதே போல் கார்த்திகையில் வரும் அமாவாசையும் ஏராளமான சிறப்புகளை கொண்டது. பொதுவாக, அமாவாசை அன்று பித்ருக்களுக்கு உரிய பூஜை முறைகளை செய்வது வழக்கம். அதுமட்டுமல்லாது, அமாவாசை நாளில் காகத்திற்கு சாதம் வைப்பது, பசு மாட்டிற்கு தானம் கொடுப்பது போன்றவையும் செய்யப்படுகிறது. மேலும், அமாவாசை நாளில் குலதெய்வ வழிபாடு செய்வதும் ஏராளமான நன்மைகளை கொடுக்கும். அப்படிபட்ட விசேஷமான இந்த அமாவாசை கார்த்திகை மாதத்தில் காலை 6.35 மணிக்கு துவங்கும் அமாவாசை திதியில் சில விஷயங்களை செய்தால், அற்புத பலனை பெற்றிடலாம்.
➤ கார்த்திகை அமாவாசையானது நவம்பர் 23 ஆம் தேதி காலை 6.34 மணிக்கு தொடங்கி 24 ஆம் தேதி அதிகாலை 4.50 மணி வரை இருக்கிறது. அந்தவகையில், இன்று புனித நதிகளில் நீராடுவதும், முன்னோர்களின் பெயரில் அன்னதானம் செய்வதும் புண்ணியத்தை தேடி தரும்.
➤ இன்றைய தினத்தில் முதலில் எந்த ஒரு பூஜைகளையும் மேற்கொள்ளும் முன்பு உங்கள் முன்னோர்களாக இருக்கக்கூடிய இறந்து போனவர்களுக்கு முதலில் படையலிட்டு வழிபட வேண்டும். உங்களால் முடிந்தவர்களுக்கு அன்னதானம் செய்யுங்கள். இப்படி செய்வதன் மூலம் குடும்பத்தில் சந்தோஷம் பெருகும், செல்வ செழிப்புடனும் இருக்கும்.
➤ காக்கைக்கு படையல் சோறு, பசு மாட்டிற்கு அகத்திக்கீரை போன்றவற்றை தானம் கொடுக்க வேண்டும்.
➤ குறிப்பாக, இந்த யாரிடமும் கோபம் கொள்ளக் கூடாது. தவறான வார்த்தைகளை உபயோகிக்க கூடாது.
➤ மேலும், கடன் வாங்கவும் கூடாது, கொடுக்கவும் கூடாது. இறை வழிபாடுகளில் முழுமையாக உங்களை ஈடுபடுத்தி கொள்ள வேண்டும்.
➤ சூரியன் மறைந்த பிறகு நீங்கள் உங்களுடைய வீட்டிற்கு ஒரு சிறிய திருஷ்டி போல இந்த மூலிகை பொருட்களை போட்டு கழித்து கொள்ளலாம். இதனால் உண்டாகக்கூடிய புகை உங்களுக்கு நோய் நொடி இல்லாத நீண்ட ஆயுளை கொடுக்கும்.
➤ மேலும், மாலையில் வீட்டின் வடகிழக்கு மூலையில் பசு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யவும். விளக்கின் திரி சிவப்பு நிற நூலாக இருப்பது நல்லது.
➤ விளக்கிற்கு சந்தனம், குங்குமம் வைக்கவும். அதோடு சக்கரை கலந்த மாவு எறும்புகளுக்கு கொடுக்கவும்..இவ்வாறு செய்வதால் லட்சுமி கடாட்சம் அடைவதோடு, பாவங்களும் அழியும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…