காக்கும் தெய்வம் விஷ்ணு பகவானின் தசாவதாரங்களில் ஒன்றான கிருஷ்ணர் மண்ணில் ஜனித்த தருணமே கிருஷ்ண ஜெயந்தி எனக் கொண்டாடப்படுகிறது. கிருஷ்ண பகவான் ரோகிணி நட்சத்திரத்தில் அஷ்டமியில் பிறந்தமையால் இந்த தினத்தை கோலாஷ்டமி என்றும் கூறப்படுகிறது. தர்மத்தை நிலைநாட்ட மண்ணில் அவதரித்த கிருஷ்ண பகவான் தோன்றிய கிருஷ்ண ஜெயந்தி அன்று விரதம் எப்படி இருக்க வேண்டும் என்பதைக் கீழ்க்காண்போம்.
கிருஷ்ண ஜெயந்தி வழிமுறை (Krishna Jayanthi Valipadu In Tamil)
தேவகி நந்தனனாக அவதரித்து ஆயர்பாடியில் யசோதாவின் மகனாக வளர்ந்த கிருஷ்ண பகவானைக் கோகுலாஷ்டமி தினத்தில் வழிபாடு செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதிகம் ஆகும். கிருஷ்ண பகவான் போல சகல ஐஸ்வரியம் கொண்ட குழந்தை வரம் பெற கீழ்வரும் வழிமுறையை பின்பற்ற வேண்டும்.
மேலே குறிப்பிட்ட பொருட்களை வீட்டில் இறைவன் படம் அல்லது சிலை முன் வைத்து வணங்கி, வழக்கமான வேலைகளை செய்யலாம். பின் கிருஷ்ணர் பிறந்த சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு மீண்டும் பூஜை செய்து பிரசாதத்தை குடும்பத்தினருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…