Thu ,Apr 25, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

வியக்க வைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் சிலை ரகசியம்.. | Madurai Meenakshi Amman statue Sectres in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
வியக்க வைக்கும் மதுரை மீனாட்சி அம்மன் சிலை ரகசியம்.. | Madurai Meenakshi Amman statue Sectres in TamilRepresentative Image.

மதுரை என்று சொன்னதுமே நமக்கு முதலில் நினைவுக்கு வருவது மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில்தான். நவகிரங்களில் புதன் தலமாக விளங்கும் இக்கோயில் வருடத்தில் 274 நாட்களும் திருவிழா கோலமாக தான் காட்சியளிக்கும். தமிழ்நாட்டின் பல முக்கிய அடையாளங்களில் ஒன்றாக விளங்கும் இந்த மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் அமைப்பும், அதன் வரலாற்று சிறப்பம்சங்களும் அனைவரையும் மெய்சிலிர்க்க வைப்பதாக இருக்கிறது. கயற்கண்குமாரி, அபிராமவல்லி, கோமகள், கற்பூரவல்லி, குமரித்துறையவள், பச்சைதேவி, சுந்தரவல்லி, அபிஷேகவல்லி, தடாதகை, மாணிக்க வலி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவில், மும்முலைத்திருவழுதி மகள் என்றெல்லாம் அழைக்கப்படும் அன்னை மீனாட்சி அம்மனின் சிலையின் மகத்துவத்தை இப்பதிவில் பார்க்கலாம். 

மதுரை மீனாட்சி அம்மன் சிலை ரகசியம்:

மதுரை மீனாட்சி அம்மனின் திருமேனி சிலை முழுவதும் பச்சை மரகதக் கல்லில் செய்யப்பட்டதாகும். இதனால், கருவறை பக்கத்தில் மேளம், நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளை இசைக்க மாட்டார்கள்.

பொதுவாக, கல் என்றாலே கடினமானதாக தான் இருக்கும். ஆனால், மரகத கல் மிக மென்மையானது. அந்த கல்லால் மேளம் நாதஸ்வரம் போன்ற இசைக் கருவிகளின் ஒலி அதிர்வுகளை கூட தாங்கிக் கொள்ள முடியாது. 

அப்படி, ஒலி அதிர்வுகளை கூட தாங்க முடியாத மரகதக்கல்லை  எந்த ஒரு தொழில்நுட்ப கருவியோ வசதியோ இல்லாமல், வெறும் உளியை கொண்டு செதுக்கி இருக்கிறார்கள் நம் சிற்பிகள். இதிலிருந்து நமது சிற்பிகள் எவ்வளவு திறமைசாலிகள் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

அன்னையின் வலது கால் சற்று முன்னோக்கி இருப்பது போன்று அமைந்திருக்கும். இதற்கு காரணம் பக்தர்களின் அழைப்பிற்கு உடனே ஓடி வந்து அருள்புரியக்கூடியவள் என்று அர்த்தம். அன்னையின் வலது கையில் கிளியை ஏந்தி, அது காதில் பேசுவது போன்று அமைந்திருக்கும். 

ஏனென்றால், கிளி தான் பேசுவதை திரும்பத் திரும்ப பேசக்கூடியது. அதனால் பக்தர்களின் வேண்டுதலைத் திரும்ப திரும்ப அன்னையிடம் கூறி, அவர்களின் குறையை விரைவாக நிறைவேற்றும் பொருட்டு கையில் கிளி வைத்துள்ளார்.

இது நம்பமுடியாத அழகாகவும், தனது ஒளிரும் கண்களால் அம்மன் உயிருடன் இருப்பதைப் போல தெரியும் காட்சிகள் அனைத்தும் தெய்வீகமானது. பார்வதி மூன்று மார்பகங்களுடன் பிறந்ததால் இக்கோயிலில் அம்மன் தெய்வத்தை மூன்று மார்பகங்களுடன் காணலாம்.

அனைத்து சிவ ஆலயங்களும் முக்தியைத் தரக்கூடியது. முக்திக்கான வழியைத் தரும். ஆனால் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் குடிகொண்டிருக்கும் மதுரைக்கு வந்தாலே முக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த ஆலயத்தில் வழிபடுவதால் முக்தி மட்டுமல்ல, அனைத்து செல்வங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்