Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 72,086.15
-402.84sensex(-0.56%)
நிஃப்டி21,868.60
-127.25sensex(-0.58%)
USD
81.57
Exclusive

மகா சிவராத்திரி வரலாறு.. காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்.. | Maha Shivaratri Story in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
மகா சிவராத்திரி வரலாறு.. காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்.. | Maha Shivaratri Story in TamilRepresentative Image.

இந்துக்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் ஒரு முக்கிய திருநாள் மகா சிவராத்திரி. ஒவ்வொரு வருடமும் மாசி மாதம் வரும் தேய்பிறையின் [கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில்] 14 ஆம் தேதி இந்த மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது. சிவபெருமானுக்கு உரிய இந்த நாளில் விரதம் மேற்கொள்வது, இரவு முழுவதும் தூங்காமல் இருப்பது, பூஜை, பஜனை பாடுவது என இரவு முழுவதும் கோலாகலமாக இருக்கும். உண்மையில் இந்த மகா சிவராத்திரி எதனால் கொண்டாடப்படுகிறது? இரவு முழுவதும் ஏன் தூங்காமல் கண் விழிக்க வேண்டும்? இரவு முழுவதும் தீபம் ஏற்றுவது எதற்கு? எல்லா கேள்விகளுக்கும் இந்த பதிவை முழுமையாக படித்தாலே முழு சிவ ரகசியங்களும் தானாகவே புரியும். 

மகா சிவராத்திரி வரலாறு.. காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்.. | Maha Shivaratri Story in TamilRepresentative Image

பிரம்மா - விஷ்ணு சண்டை:

சிவன் குடியிருக்கும் பஞ்ச பூத ஸ்தலங்களில் ஒன்றான அக்னி ஸ்தலமான திருவண்ணாமலையில் தான் மகா சிவராத்திரி தோன்றியது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது. அதாவது, பிரம்ம தேவருக்கும், விஷ்ணுவுக்கும் நான்தான் பெரியவன் என்ற விவாதம் ஏற்பட்டது. அதனால், இருவரும் கயிலை மலையில் இருக்கும் சிவபெருமானிடம் தீர்வை கேட்க மலையில் இருக்கும் சிவபெருமானிடம் தீர்வை கேட்க சென்று, தங்களது பிரச்சனையை எடுத்துரைத்தனர். அப்போது சிவபெருமான் னஹன் விஸ்வரூபம் எடுக்கிறேன் என்றார். தான் எடுக்கும் விஸ்வரூபத்தை இரண்டு பேரில் யார் முதலில் அறிந்து வருகிறார்களோ அவர்கள் தான் பெரியவர்கள் என்று கூறுகிறார்.

மகா சிவராத்திரி வரலாறு.. காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்.. | Maha Shivaratri Story in TamilRepresentative Image

பிறகு சிவபெருமானின் அவதாரத்தை காண இரண்டு பேரும் செல்கின்றனர். ஒருகட்டத்தில் விஷ்ணு என்னால் திருவடியை அடைய முடியவில்லை என்று தனது தோல்வியை ஒப்புக்கொண்டார். பிரம்ம தேவர் சிவ அவதாரத்தை தேடி தேடி மிகவும் கலைத்துவிட்டார். திடீரென்று பிரம்ம தேவருக்கு அருகில் தாழம்பூ ஒன்று தோன்றியது. அந்த பூவிடம் எங்கிருந்து வருகின்றாய் என்று விசாரிக்க, எம்பெருமானின் முடி உச்சியில் இருந்து வருவதாக கூறி, இப்போது பூமியை நோக்கி செல்வதாக கூறுகிறது.

பிரம்ம தேவர் தான் பெரிய என்ற பெயர் வாங்க தாழம்பூவிடம், "பிரம்ம தேவர் தலையின் திருமுடியை அறிந்துவிட்டார், என்னையும் அங்கிருந்து தான் எடுத்து வந்தார்" என்று ஒரு பொய் கூற சொன்னார். தாழம்பூவும் ஒப்புக்கொண்டு, சிவபெருமானிடம் கூறியது. ஆனால், சிவபெருமான் நீ பொய் சொல்கிறாய் என்று கூறி பிரம்ம தேவரை பார்த்து இந்த உலகத்தில் உனக்கென்று ஆன்மீக இடம் கிடையாது என்று கோபமாக கூறினார். பொய்கூறிய தாழம்பூவை பார்த்து என்னுடைய பூஜையில் உனக்கு எக்காலத்திலும் இடம் இல்லை என்று கூறிவிட்டார்.

மகா சிவராத்திரி வரலாறு.. காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்.. | Maha Shivaratri Story in TamilRepresentative Image

இதனால் கோபமான சிவபெருமான் அக்னிப் பிழம்பாக மாறினார். இதனால் எமன், இந்திரன், அக்னி, குபேரன் உள்ளிட்ட பாலகர்கள் 8 பேரும் மற்றும் தேவர்களும் அமைதி பெற வேண்டினர். அவர்களின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், ஓர் மலையாய் அடங்கி சிறிய ஜோதியாய் அதன் உச்சியில் தென்பட, அனைவரும் வணங்கினர். அந்த நாளே மகா சிவராத்திரியாக ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரி வரலாறு.. காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்.. | Maha Shivaratri Story in TamilRepresentative Image

நீலகாந்தா:

புராணங்களின் படி, சமுத்திர மந்தன் என்று அழைக்கப்படும் பாற்கடலை 'வாசுகி' என்ற பாம்பை கொண்டு தேவர்கள் கடைந்த போது விஷம் கடலில் கலந்தது. இது முழு உலகையும் அழிக்கத்துவிடுமோ என்று தேவர்கள் பயந்துபோனார்கள். இதை  தடுக்க தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் உதவியை நாடினர். அவர்களின் கூற்றை ஏற்றுக்கொண்ட சிவபெருமான் அந்த கடலில் கலந்த கொடிய விஷயத்தை குடித்துவிட்டார். ஆனால், அதை விழுங்காமல் தொண்டையிலேயே வைத்துக்கொண்டார். இதனால் சிவபெருமானின் தொண்டை நீலமாக மாறிப்போனது. இதன் காரணமாக தான் சிவபெருமானை 'நீலகாந்தா' என்று அழைக்கப்பட்டார். இந்த சம்பவம் நடந்த நாளே 'மகா சிவராத்திரி' என்று சொல்லப்படுகிறது.

மகா சிவராத்திரி வரலாறு.. காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்.. | Maha Shivaratri Story in TamilRepresentative Image

வில்வ இலையின் சிறப்பு:

சிவராத்திரி நாளில் ஒரு காட்டில் பல பறவைகளை கொன்ற வேட்டைக்காரனை பசியுள்ள சிங்கம் துரத்தி சென்றுள்ளது. சிங்கத்தின் தாக்குதலில் இருந்து தன்னைக் காப்பாற்ற வேட்டைக்காரர் வில்வ மரத்தில் ஏறிக்கொண்டார். சிங்கம் மரத்தின் அடியில் இரவு முழுவதும் காத்திருந்தது. மரத்திலிருந்து தூக்கத்தில் விழுவதைத் தவிர்ப்பதற்காக விழித்திருக்க வேட்டைக்காரன் வில்வ மரத்தின் இலைகளை பறித்து கீழே போட்டு கொண்டே இருந்தான்.

அப்போது அந்த இலைகள் அனைத்தும் மரத்தின் அடிப்பகுதியில் ஒரு சிவலிங்கத்தின் மீது விழுந்தன. வில்வ இலைகளை வழங்கியதால் மகிழ்ச்சியடைந்த சிவபெருமான், பறவைகளை கொல்வதன் மூலம் வேட்டைக்காரன் செய்த அனைத்து பாவங்களையும் மன்னித்து அவனை காப்பாற்றினார். இந்த கதை சிவராத்தியில் வில்வ இலைகளுடன் சிவபெருமானை வழிபடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது. 

மகா சிவராத்திரி வரலாறு.. காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்.. | Maha Shivaratri Story in TamilRepresentative Image

சிவன் - சக்தி:

மஹா சிவராத்திரிக்கு இன்னொரு புராணக்கதையும் உண்டு. அதாவது சக்தியின் இருவடிவங்களான சிவனும் பார்வையும் ஒரே சக்தியாக உருவெடுத்த நாள். அதாவது, சிவன் தனது மனைவியான பார்வதி தேவியை இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட நாளே 'சிவராத்திரி' என்று கொண்டாடப்படுகிறது.

மகா சிவராத்திரி வரலாறு.. காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்.. | Maha Shivaratri Story in TamilRepresentative Image

சிவராத்திரி பெயர் காரணம்:

சிவராத்திரி என்ற பெயர் வர காரணம் அம்பாள் தான். பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை சிவபெருமானை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும், மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே, அதாவது “சிவராத்திரி” என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

மகா சிவராத்திரி வரலாறு.. காலத்தால் அழியாத அபூர்வ ரகசியங்கள்.. | Maha Shivaratri Story in TamilRepresentative Image

சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை, தங்களை(சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள். சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள் புரிந்தார். அந்த இரவே “சிவராத்திரி” என வழங்கப்பட்டு அனைவராலும் கொண்டாடப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்