மாங்கல்ய தோஷம் என்றால் என்ன?
நாம் சென்ற ஜென்மத்தில் பிறருக்கு செய்த துன்பம் தான் மற்றொரு ஜென்மத்தில் தோஷமாக வரும் என்று ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன. பெண்ணின் ஜாதகத்தில் உள்ள சில கிரகங்களின் சேர்க்கை, கோச்சாரநிலை, தசா புத்திகள் போன்ற காரணங்களால் திருமணம் நடைபெறுவதில் தாமதமாகும் அல்லது அந்த பெண்ணுக்கு உரிய வயதில் திருமணம் நடக்காமல் தடையாக இருக்கும் கிரக அமைப்புகளைத்தான் 'மாங்கல்ய தோஷம்' என்பார்கள். இந்த மாங்கல்ய தோஷம் பெண்களுக்கு மட்டுமே ஏற்படும். பெண் திருமணமாகி இறந்து அந்த பெண்ணிற்கு சுமங்கலி பூஜை செய்யாமல் இருந்தாலும் மாங்கல்ய தோஷம் ஏற்படும்.
மாங்கல்ய தோஷம் இருக்கும் பெண்ணை திருமணம் செய்தால், தோஷத்தால் தம்பதிக்குள் வாக்குவாதம் அதிகமாக இருக்கும்.
சுயமாக சிந்தித்து செயல்படத் தெரியாத குடும்பத்தை முறையாக வழிநடித்தத் தெரியாத, சம்பாதிக்காத ஆண் கணவராக அமைவார்.
இல்லையென்றால் மனைவியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்காமல் தன் விருப்படியே மனைவி வாழ வேண்டும் விரும்புவார்.
வாழ்க்கைத் துணைக்கு தீராத, தீர்க்க முடியாத அதிகப்படியான கடன் அல்லது நோய் இருக்கும். அல்லது தம்பதிகளில் ஒருவர் மட்டும் இறந்து விடவும் வாய்ப்பு இருக்கிறது.
சுமங்கலி பூஜை செய்தும் மாங்கல்ய தோஷத்தை நிவர்த்தி செய்ய முடியும். இந்த பூஜையை வீட்டிலோ அல்லது கோவிலிலோ செய்யலாம். இந்த பூஜை ஒரு புதிய தாலி வாங்கி அதனை மஞ்சள் கயிற்றில் கோர்த்து பூஜை செய்து பின்பு அந்த மாங்கல்யத்தை திருமணமான சுமங்கலி பெண் மாங்கல்ய தோஷம் உள்ள கன்னி பெண்ணுக்கு கட்டிவிட வேண்டும்.
அந்த தாலியை 2 மணி நேரம் போட்டிருக்க வேண்டும். 2 மணி நேரத்திற்கு பிறகு எந்த பெண் தாலியை கட்டினார்களோ அவரே அந்த தாலியை கழட்டவிட வேண்டும். பின்னர், தாலியை கழட்டிய பெண் குளித்துவிட்டு அணிந்திருந்த ஆடையை வீசி விட்டு, புதிய ஆடையை அணிந்துக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு, அந்த தாலியை குங்குமம், மஞ்சள், பழம், பூ, சீப்பு, வெற்றிலை பாக்கு, புடவை, சந்தனம் வைத்து சீர்வரிசையாக குலதெய்வ கோவில் அல்லது உங்களுக்கு பிடித்த பெண் தெய்வங்களுக்கு கொடுக்க வேண்டும்.
இந்த பரிகாரத்தை செவ்வாய்க்கிழமை, வெள்ளிக்கிழமை, அஷ்டமி, நவமி இல்லாத நாட்களில் செய்ய வேண்டும். சீர்வரிசை செய்ய முடியாமல் போனால் அதற்கு பதிலாக அந்த தாலியை கோவில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி விடலாம். இவ்வாறு மாங்கல்ய தோஷம் கழித்துவிட்டால் திருமணம் ஆகாத பெண்ணுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…