Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

Marriage On Vinayagar Chaturthi 2023 - விநாயகர் சதுர்த்தியில் கல்யாணம் பண்ணிகிட்ட.... இத்தனை நற்பலனா.....!

Manoj Krishnamoorthi September 07, 2023 & 10:00 [IST]
Marriage On Vinayagar Chaturthi 2023 - விநாயகர் சதுர்த்தியில் கல்யாணம் பண்ணிகிட்ட.... இத்தனை நற்பலனா.....!Representative Image.

எந்த ஒரு சுப காரியம் செய்தாலும் அங்கு முதலில்  விநாயகர் வழிபாடு இருக்கும், நம் கையால் மஞ்சள்  கொண்டு ஒரு பிள்ளையார் செய்து அதை வணங்கி தான் ஆரம்பிப்போம். முழுமுதற் கடவுளான விநாயகப் பெருமானின் விஷேசமான தினத்தில் திருமணம் செய்யலாமா...? அப்படி செய்தால் நன்மையா...! எனப் பலக் கேள்விகள் நம் மனதில் உதிக்கும். உங்களின் மனதில் இருக்கும் அந்த கேள்விக்கு பதிலாக இந்த பதிவு இருக்கும். 

விநாயகர் சதுர்த்தி 2023 அன்று திருமணம் (Marriage On Vinayagar Chaturthi 2023) 

தடைகளை நீக்கும் கணேசனுக்கு விஷேசமான நாளான விநாயகர் சதுர்த்தி அன்று திருமணம் செய்வது தவறில்லை, எனவே உங்கள் மனதில் பயத்தை விதைத்துக் கொள்ள வேண்டாம். இந்த தினத்தில்  திருமணம் மட்டுமில்லாமல் சுப நிகழ்ச்சிகள் எதுவேண்டுமென்றாலும் செய்யலாம். புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கலாம். வீடு கட்ட அடிக்கல் நாட்டலாம்.

பொதுவாக சதுர்த்தியின் அதிதேவர்களாக விநாயக பெருமானும், எம தர்மரும் இருக்கின்றனர். இந்த சதுர்த்தி தினத்தில் செய்யும் காரியம் வெற்றியாகும் என்பது நம்பிக்கை ஆகும். இந்த நம்பிக்கை மன்னர் காலம் முதல் இருக்கிறது, இந்த தினத்தில் படையெடுப்பு எடுத்தால் நிச்சியம் வெற்றி பெற முடியும் என்பது நம்பிக்கை ஆகும்.

நன்மைகள் ( Marriage On Vinayagar Chaturthi 2023 Nanmaigal)

விநாயகர் சதுர்த்தி அன்று திருமணம் செய்தால்  அல்லது சுப நிகழ்ச்சிகள் தொடங்கினால் கிடைக்கும் பலன்கள் ஏராளம் ஆகும். அவை ஒவ்வொன்றாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

  • தடைகள் நீங்கி வளமான வாழ்க்கை அளிக்க வழி செய்யும் சதுர்த்தி தினத்தில் அக்னி சாட்சியாக கரம் பிடிக்கும் தம்பதியரின் வாழ்வில் கஷ்டங்கள் இல்லாமல் இன்பமான வாழ்வை வாழ முடியும். 
  • குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும், தங்கள் குடும்பத்தை முன்னேற்ற ஒருவருக்கு ஒருவர் அனுசரித்து கலந்து உரையாடி புத்திசாலித்தனமாக முடிவெடுப்பர். 
  • கேது பகவானின் தக்கத்தால் உருவாகும் தோஷத்தைக் குறைக்கும் சதுர்த்தி திதி திருமண நடப்பதால் குடும்பத்தில் ஞானம் எப்போது குடி கொண்டு செல்வத்தைக் கவர செய்யும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்