Mon ,Dec 11, 2023

சென்செக்ஸ் 70,028.54
202.94sensex(0.29%)
நிஃப்டி21,019.00
49.60sensex(0.24%)
USD
81.57
Exclusive

Narakasura Temple : நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?

Manoj Krishnamoorthi October 20, 2022 & 18:30 [IST]
Narakasura Temple : நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?Representative Image.

தீபாவளி என்றாலே நம் மனதில் ஓடுவது பட்டாசு சத்தம், இனிப்பு பலகாரங்களும் தான். இந்த தீபாவளி பண்டிகை எப்படி உருவானது என்று கேட்டால் நமக்கு தெரியும் நரகாசுரன் இறந்த தினமே தீபாவளி என்று உரைப்போம். ஆனால் நரகாசுரன் யார் என்று தெரியுமா..? அவன் கோவில் கட்டியுள்ளான் அது பற்றி அறிய உங்களுக்கு இந்த பதிவு உதவிக்கரமாக இருக்கும். 

Narakasura Temple : நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?Representative Image

நரகாசுரன் யார்? (Narakasura Temple)

நரகாசுரன் என்னும் அசுரனை கிருஷ்ணர் அழித்தால் தீபாவளி கொண்டாடுகிறோம் என்பது அனைவருக்கும் தெரிந்தது ஆகும். யாராலும் அழிக்க முடியாது என்ற ஆணவத்தில் கொடுமைக்காரனாக மாறிய நரகாசுரன் விஷ்ணுவின் மகன் ஆவார்.

என்னது நரகாசுரன் திருமாலின் மகனா..? என்ற உங்கள் ஐயம் புரிகிறது. ஆம், திருமாலின் வராக அவதாரத்தில் இருந்தபோது திருமாலுக்கும் பூமாதேவிக்கும் நரகாசுரன் மகனாக பிறந்தான். தன் பெற்றோரால் மட்டுமே இறக்க வேண்டும் என்ற வரத்தையும் கொண்ட வீரன் ஆவான். 

Narakasura Temple : நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?Representative Image

நரகாசுரன் கட்டிய கோவில்! (Narakasura Temple)

ஒளி நகரம் என்று அழைக்கப்பட்ட விதேஹ (தற்போதைய பீகார்) மன்னன் ஜனகர் என்பவர் நரகாசுரனை வளர்த்தார். தன் பலத்தால் பிராக்ஜோதிபுரத்தின் (தற்போதைய அசாம்) மன்னனாக நரகாசுரன் ஆட்சி செய்து வந்தான்.

விதிவசத்தால் பாணாசுரன் என்பவனின் நட்பு நரகாசுரனின் அழிவிற்கு ஆரம்பமாகியது. தீவிர காமாக்யா தேவியின் பக்தனான நரகாசுரனை 'உன்னை கொல்ல யாருமில்லை, நீ கடவுளுக்கு சமம்' போன்ற வார்த்தைகளைக் கூறி நரகாசுரனை பெண்பித்தனாகவும் மகா குடிகாரனாகவும் மாற்றினான். 

நண்பன் சொல்வதை ஏற்கும் மனநிலையில் இருந்த நரகாசுரனிடம் ஒருநாள் பாணாசுரன்....' நீ வணங்கும் காமாக்யா தெவி, எவ்வளவு அழகாக இருக்கிறாள்... அவளை திருமணம் செய்து கொண்டால் உன் கீர்த்தி பெருகும்' என்றான். இதனால் நரகாசுரனுக்கு ஆசை துளிர்விட்டது.

தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி காமாக்யா தேவியிடம் நரகாசுரன் கேட்டான். இதிலிருந்து தப்பிக்க தந்திரமாக 'எனக்கு ஒரே இரவில் நீ கோவில் கட்டு.... உன் விருப்பத்தை ஏற்று கொள்கிறேன்' என்றாள்.

உடனே கோவில் கட்ட ஆரம்பித்தான். இவன் முயற்சியைத் தடுக்க காமாக்யா தேவி ஒரு சேவலை கூவ செய்து விடிந்தது போல செய்தாள். இதை நம்பி தன் வேலை நிறுத்திய நரகாசுரன் காமாக்யா தேவி கோவிலுக்கு பக்தர்கள் செல்வதை தடுத்து விட்டான்.   

Narakasura Temple : நரகாசுரன் கட்டிய கோவில் எங்கு உள்ளது...?Representative Image

எங்கு உள்ளது? (Narakasura Temple)

இன்றைய அசாம் தலைநகரமான  கவுகாத்தி இருந்து 12 கி.மீ கடந்தால் பிரம்மபுத்திரா ஆற்றங்கரையில் வசிஷ்டர் ஆசிரமம் உள்ளது. அங்கு இருந்து படகு மூலம் நதியைக் கடந்த பின் கோவிலை அடையலாம். 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்