பெருமாள் கீர்த்தி பாடி பக்தி பரவசம் கொள்ளும் மாதம் புரட்டாசி மாதம் ஆகும். இந்த புரட்டாசி மாதம் பெருமாள் கோயில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு நடைபெறும். பெருமாள் கோவில் என்ற உடனே நம் நினைவில் வரும் ஸ்தலம் திருப்பதி ஏழுமலையான் திருக்கோயில் ஆகும். நம் வாழ்வில் வரும் பிரச்சனைகளில் இருந்து நம்மை காக்கும் தெய்வம் விஷ்ணு பகவானின் அருளை பெறும் மகத்துவ மாதமான புரட்டாசி தினத்தில் சொல்ல வேண்டிய மந்திரம் என்னவென்று கீழே காண்போம்.
பெருமாள் மந்திரம் (Perumal Mantra in Tamil)
நமக்கு ஏற்படும் மன கஷ்டம், பிரச்சனை போன்றவற்றில் இருந்து விடுபட கீழ்வரும் மந்திரத்தை தினமும் உச்சரிப்பதால் நம் கஷ்டங்கள் தீர்ந்து வளமான வாழ்க்கை வாழலாம்.
ஓம் நிரஞ்சனாய வித்மஹே
நிராபாஸாய தீமஹி
தந்நோ ஸ்ரீனிவாச ப்ரசோதயாத்
எப்படி உச்சரிக்க வேண்டும்? (Perumal Mantra in Tamil)
தினமும் காலையில் சூரிய நமஸ்காரம் செய்து, பின்னர் பூஜை அறையில் விளக்கு ஏற்றி பெருமாளை மனதில் நினைத்து 108 முறை சொல்ல வேண்டும். 108 முறை சொல்ல முடியாத தருணத்தில் 11 முறை உச்சரிக்க வேண்டும்.
இவ்வாறு தினமும் மனமாரா இறைவனை நினைத்து உச்சரித்து வந்தால் நமக்கு தொழில், வீடு, குடும்பம், செல்வம் போன்றவற்றில் உருவாகும் பிரச்சனையைத் தீர்க்கும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…