Sai Baba History in Tamil: கடந்த பதிவில், சாய்பாபா தன் ஞான திருஷ்டியால் மக்களின் எதிர்காலத்தை கூறுகிறார் என்பது பற்றியும், சாய்பாபாவின் அனுமதியின்றி சாய்பாபா தளத்திலிருந்து கிளம்பினால் என்னென்ன இடையூறுகள் ஏற்படும் எனவும், அவருடைய தோற்றம் குறித்த விவரங்களையும் பற்றி கண்டோம். இந்தப் பதிவில், சாய்பாபா நிகழ்த்திய மற்றொரு அதிசயத்தைப் பற்றி காண்போம்.
சாய்பாபா எளிமையான தோற்றம் கொண்டவர். ஆனால், அநீதி நடக்குமாயின் அதனைக் கண்டு பொறுக்க மாட்டார். இவர் தம் பக்தர்களுக்கு சிரமம் நேர்வதையும் அனுமதிக்கப்பட்ட மாட்டார். ஒரு சமயம், சாய்பாபாவின் பக்தர்கள் வண்டிகளில் பிரயாணம் செய்து கொன்டிருந்த சமயத்தில், இடியும் மின்னலும் சூழ்ந்து, கடுமையான மழையும் குறுக்கிட்டன.
இதனால், பக்தர்கள் பயந்து பாபாவை வேண்டினார்கள். உடனே பாபா, “போதும்..! பக்தர்களைப் பயமுறுத்தாதே..! இத்துடன் நிறுத்தி விடு” என்று கட்டளையிட்டார். இயற்கையின் சீற்றம் உடனே தணிந்து அமைதி ஏற்பட்டு விட்டது.
பாபா, பக்தர்களுக்காகப் பலவிதமான அற்புதங்களை நிகழ்த்துவார். ஒரு தூண் அருகில் விளக்கின் பக்கம் உட்கார்ந்து கொண்டு தன்னை நாடி வரும் பக்தர்களுக்குப் பக்கத்தில் வைத்துள்ள பாத்திரத்திலிருந்து தண்ணீரை அள்ளிப் பிரசாதமாகத் தெளிப்பார். இந்த தண்ணீர் பட்ட உடனே, பலருக்கும் நோய்கள் தீர்ந்து விடும். மேலும், பலருக்கு மனக்கவலைகள் தீர்ந்து விடும்.
பக்தர்கள் பாபாவைப் பார்க்க வரும் போதெல்லாம், ரூபாய் நோட்டுகளையும், நாணயங்களையும் போட முற்படுவதுண்டு. ஆனால், பாபா அவற்றை எடுத்துக் கொள்ளாமல், அனைத்தையும் தன்னை நாடி வரும் ஏழைகளுக்குக் கொடுத்து அனுப்பி விடுவார். இவ்வாறு ஒவ்வொரு நாளின் முடிவிலும், அவரிடம் ஒரு சில்லறைக் காசு கூட மிஞ்சாது. எல்லைகளைக் கடந்த மகான் அவர். அவருக்கு எதற்காகப் பணம்? கந்தல் ஆடையும் அவரது உடலில் பட்டாடையாகத் தோன்றும். கனிவான பார்வை கோடிப் பணம் பெறும்.
ஒரு சமயம் திருட்டில் வந்த நகைகளைக் கள்வன் அங்கே எடுத்துக் கொண்டு வந்து விட்டான். சில நகைகள் அவருடைய சந்நிதியில் தங்கி விட்டன. பின்னர், கைது செய்யப்பட்ட கள்வன் பாபாவே அந்த நகைகளை அளித்து விட்டதாகச் சொல்லி விட்டான். நீதிபதி பாபாவுக்குச் சம்மன் அனுப்ப நேர்ந்தது. பாபா அதனை ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியில் நீதிபதி பாபாவிடம் நேரிலேயே வந்து விசாரித்துள்ளார்.
அப்போது பாபா, விளையாட்டாகவே சாட்சி கூறினார். அதில் அவர் தம் பெயரையும், தந்தையார் பெயரையும் சாய்பாபா என்றே கூறினார். தம் மதம் கபீர் என்று கூறியுள்ளார். கபீர்தாஸர் மத எல்லைகளைக் கடந்த இராமபக்தர் ஆவார். முஸ்லீமாக இருந்தாலும், இராமதாசராக வாழ்ந்தவர். பாபா அப்படிச் சொன்னதைக் கேட்டு, நீதிபதி திகைத்துப் போனார். பின்னர், பாபா பேச பேச அவர் மகான் என்பதை உணர்ந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து பாபாவை சாட்சியமாக வைத்தே கேள்விகள் கேட்கும் முயற்சி கைவிடப்பட்டது. குற்றத்தை உணர்ந்து ஒப்புக் கொண்டவன் விடுவிக்கப்பட்டான்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…