வாரத்தின் ஏழு நாட்களில் வெள்ளிக்கிழமை என்றாலே மங்களகரமான நாள் என்று நமக்கு தெறியும், அதுவும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை என்றால் இன்னும் மகத்துவம் தான். மாதத்தில் வரும் நான்கு வெள்ளிக்கிழமையில் முதல் மற்றும் மூன்றாம் வெள்ளி மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும்.
ஆடி வெள்ளி என்றாலே அம்மன் கோவிலில் விஷேசமாகக் காட்சியளிக்கும், பக்தர்களின் அலை அம்மனை தரிசிக்க விரதம் இருந்து அம்மனைக் கண்டு விரதம் முற்று பெற அம்மனின் விருப்பமான ஆடி வெள்ளி கூழ் குடிப்பர். உங்களுக்கு ஆடி வெள்ளி அன்று விரதம் இருப்பது எப்படி என்று என்பதை அறிய வேண்டுமா.....
ஆடி வெள்ளி விரதம் (Aadi Velli Viratham)
பொதுவாக தமிழ் மாதத்தில் நான்காவது மாதம் காற்று காலமாகும், பலவித நோய்கள் வரும் காலமாகக் கருதப்படும், அதற்கான அறிவியல் விளக்கம் என்னவென்றால் புவியியல் அடிப்படையில் காலமாற்றங்களான வெயிற்காலம் மற்றும் மழைக்காலத்தின் நடுநிலையான பருவமாகும். இதை சரி செய்ய அறிவியல் ஞானத்தில் தலைசிறந்து விளங்கிய நம் முன்னோர்கள் நமக்கு அளித்த விதி முறைதான் ஆடி மாத வழிபாடு ஆகும்.
நாம் அதிகாலையில் எழுந்து குளித்து, தூயக் காற்றையும் சூரியனின் இளம் வெயிலையும் பெறுவது ஆரோக்கியம் அளிக்கும், இதை வழக்கமாக மாற்ற நம் முன்னோர்கள் ஆடி வெள்ளி அன்று அதிகாலையில் எழுந்து குளித்து இல்லத்தைத் தூய்மைப்படுத்தி விரதம் இருக்க வழி அமைத்தனர்.
விரத வழிமுறைகள் ( Aadi Velli Viratham Procedure)
வீட்டையும் நம்மையும் தூய்மை படுத்திய பிறகு, வீட்டில் பூஜை அறையில் அல்லது அம்மன் படத்திற்கு முன்னால் வாசனை மலர்களால் அலங்கரித்த பிறகு தீபம் ஏறி கொள்ளவும். தற்போது விரதம் ஆரம்பித்தாக கணக்கு.
அதன்பிறகு ஆடி வெள்ளி தினத்தில் விரதம் இருத்தல் வேண்டும், மாலை வேளையில் அம்மன் திருக்கோவிலில் அம்மனை தரிசித்த பின் விரதத்தை நிவர்த்தி செய்து கொள்ளலாம். விரதம் என்றவுடன் பயம் வேண்டாம்... பால், பழம், அல்லது உப்பு இல்லாத உணவு பண்டங்களை எடுத்து கொள்ளலாம்.
இவ்வாறு மேற்குறிப்பிட்டுள்ள விரதத்தை ஒவ்வொரு ஆடி வெள்ளி தினத்திலும் இருந்து வர நம் மனம் அமைதி பெறும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகளுக்கான தீர்வு கிடைக்கும், உதாரணமாகத் திருமணத் தடை, கடன் பிரச்சனை, குழந்தை பாக்கியம், தொழில் போட்டி போன்ற பிரச்சனைகள் நிவர்த்தியாகும். இதை அறிவியல் சார்ந்த வழி சிந்தித்தால் அமைதியான மனநிலை அனைத்து பிரச்சனைக்கும் வழி வகுக்கும் என்பதே ஆகும்.
இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
TAG: Science Behind Aadi Velli, Science Behind Aadi Velli in Tamil, Science Behind Aadi Velli Pooja, Science Behind Aadi Month, Science Behind Aadi Month in Tamil, Aadi Velli significance, Aadi Velli 2022, Science Behind Aadi Friday Month, Science Behind Aadi Friday Month 22, Science Behind Aadi Friday Month 22 in Tamil, Science Behind Aadi Friday Month in Tamil, Aadi Velli Viratham, Aadi Velli Viratham Procedure, aadi velli viratham in tamil, Aadi Amavasai 2022, How to Follow Aadi Friday Viratham in Tamil, How to Do Aadi Friday Viratham, அமாவாசை விரதம் இருப்பது எப்படி, How To Do Aadi Masam Friday Viratham in Tamil, How to do Aadi month viratham
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…