Sun ,Dec 10, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

சனி பகவான் முதன் முதலில் வக்கிர பார்வையை யார் மீது பதித்தார்? | Shani Shiva Story

Priyanka Hochumin Updated:
சனி பகவான் முதன் முதலில் வக்கிர பார்வையை யார் மீது பதித்தார்? | Shani Shiva StoryRepresentative Image.

நம்முடைய வாழ்வில் நாம் செய்யும் எல்லா கர்மங்களுக்கு ஏற்ற பலனை அளிக்க சிவபெருமானால் உருவாக்கப்பட்ட சக்தி தான் சனி பகவான். நமக்கு துன்பங்களை மட்டும் தருகிறார் என்று எண்ணுபவர்கள் தெரிந்துக் கொள்ள வேண்டிய விஷயங்கள்.

சனி பகவான் முதன் முதலில் வக்கிர பார்வையை யார் மீது பதித்தார்? | Shani Shiva StoryRepresentative Image

ராகுவின் பிடியில் சனி

தன்னுடைய தாயைப் பற்றிய உண்மைகளைக் தெரிந்துக்கொண்டு சனீஸ்வரர் யாரும் வேண்டாம் என்று தனியாக செல்ல ஆரம்பிக்கிறார். அப்போது அவரை தன் வசப்படுத்துகிறார் ராகு. அதனால் பிரபஞ்சத்தில் இன்னல்களைச் செய்யத் தொடங்குகிறார் சனி. இதனால் கடும் கோபமடைந்த சிவபெருமான் தன்னுடைய அவதாரமான வீரபத்திரரை அனுப்பி சனியை கூட்டிட்டு வர உத்தரவிடுகிறார். ஆனால் சனி அவரையும் தாக்கி ஈஸ்வரனை அவமதிக்கிறார். எனவே, தானே நேரடியாக தலையிட முடிவு செய்கிறார் சிவபெருமான். பின்பு அவரின் வழி காட்டுதலுடன் சனி பகவான் தன்னுடைய பிறப்பின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்கிறார்.

சனி பகவான் முதன் முதலில் வக்கிர பார்வையை யார் மீது பதித்தார்? | Shani Shiva StoryRepresentative Image

வக்கிர பார்வை

பின்னர் இந்த பிரபஞ்சத்தில் இருக்கும் எல்லா உயிரினங்களுக்கும் அவரவர்களின் கர்ம பலனை அளிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இதனை மேற்கொள்ள சனி பகவானுக்கு திவ்ய த்ரிஷ்டி என்னும் வக்கிர பார்வை தேவைப்படுகிறது. மும்மூர்த்திகளை தவிர இந்த பிரபஞ்சத்தில் ஒருவருக்கு திவ்ய த்ரிஷ்டி இருக்கிறது என்றால் அது சனி பகவானுக்கு மட்டுமே உள்ளது. அதனைக் கொண்டு அவர்கள் வாழ்வில் செய்த கர்மங்களை தெரிந்துக் கொள்ள முடியும். பின்பு அதற்கு ஏற்ற பலன்களை சனி பகவான் தாராளமாக தரலாம்.

சனி பகவான் முதன் முதலில் வக்கிர பார்வையை யார் மீது பதித்தார்? | Shani Shiva StoryRepresentative Image

முதலில் வக்கிர பார்வை யார் மீது பதித்தார்?

இந்த வக்கிர பார்வையை எப்படி செயல்படும் என்பதை தெரிந்துக்கொள்ள சிவபெருமான் மீது பதிப்பிக்க உத்தரவு கேட்டார் சனி. சிவபெருமானும் ஒரு பகல் மட்டும் பதிக்க அனுமதித்தார். ஆனால் சிவன் சனியிடம் மாட்டிக்கொள்ளாமல் இருக்க பூமிக்கு வந்து யானை உருவம் எடுத்து நேரத்தை கடக்கிறார். சனியோ அவரை தேடிப் பிடிக்க கடுமையாக முயற்சிக்கிறார். எனவே, சிவபெருமான் நதியின் அடிவாரத்தில் தியானம் மேற்கொள்ள ஆரம்பித்தார். சூரிய அஸ்தமனம் ஆகும் சிறிது நேரத்தில் சனி முன்பு தோன்றி வக்கிர பார்வையை பதிக்க உத்தரவிட்டார். அவரும் அப்படி செய்ய கடுமையான சிக்கலில் சிவபெருமான் மாட்டிக்கொள்கிறார். பிறகு பார்வையை எடுத்த உடன் இவரின் பொறுமைப் பற்றி முழுமையாக தெரிந்துக் கொண்டார்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்