Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கர்ம வினை அளிக்கும் சனீஸ்வரர் சிவனையும் விட்டு வைக்க வில்லை! புராணக்கதையின் பின்னணி

Priyanka Hochumin Updated:
கர்ம வினை அளிக்கும் சனீஸ்வரர் சிவனையும் விட்டு வைக்க வில்லை! புராணக்கதையின் பின்னணி Representative Image.

இந்த உலகில் வாழும் அனைவருக்கும் எந்த வேறுபாடும் இன்றி அவரவர்களின் கர்மவினையை அளிப்பவர் தான் சனீஸ்வரர். பொதுவாக சனி பகவான் என்றாலே நமக்கு துன்பத்தை அளிக்கப்போகிறார் என்று தான் நினைப்பார்கள். ஆனால் அது தவறு. சனீஸ்வரர் நாம் செய்த கர்ம வினைக்கு ஏற்ப தான் நம்மை நடத்துவார். அப்படி தான் ஏழரை சனி காலங்களில் முதல் சில காலம் கஷ்டத்தை தரும் சனி முடியும் போது அள்ளிக்கொடுப்பர் என்று கூறுவதுண்டு. மக்களாகிய நாமே ஏன் சனி பகவானின் வக்கிரப் பார்வையை நம்மீது விழுகிறது என்று வருந்துகிறோம். ஆனால் உங்களுக்கு தெரியுமா நம்மை படைத்த சிவபெருமானால் கூட சனியின் வக்கிரப் பார்கவையில் இருந்து தப்பிக்க முடியவில்லை என்று.

கர்ம வினை அளிக்கும் சனீஸ்வரர் சிவனையும் விட்டு வைக்க வில்லை! புராணக்கதையின் பின்னணி Representative Image

இயல்பாக நவகிரகங்களில் இருப்பவர்கள் எம்பெருமான் சிவனுக்கு பணிந்து நடப்பார்கள். ஆனால் அதில் சனீஸ்வரர் மட்டும் தனித்துவமாக இருந்திருக்கிறார். புராணங்களின் அடிப்படையில் சனியின் வக்கிரப் பார்வை சிவனின் மீது விழுந்த போது என்ன நடந்தது என்பதை பதிவில் பாப்போம்.

(பொறுப்பு துறப்பு - இது உலகம் முழுவதும் மக்களால் கருதப்படும் புராணக்கதையாகும். இதற்கும் எங்கள் வலைத்தளத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை).

கர்ம வினை அளிக்கும் சனீஸ்வரர் சிவனையும் விட்டு வைக்க வில்லை! புராணக்கதையின் பின்னணி Representative Image

சிவபெருமானின் மீது ஈர்ப்பு கொண்ட பல தேவர்களுள் ஒருவரி சனி பகவான். அவர் கைலாசம் சென்று சிவபெருமானை தரிசிக்க சென்றுள்ளார். பின்னர் சனி கடவுளுக்கு கர்ம வினையை தெரிந்துகொள்வதற்காக வக்கிரப் பார்வை கிடைத்தது. அது கிடைத்ததும் முதலில் சிவபெருமானை இரு கைகளை கூப்பி வாங்கினார் சனி. பின்னர் எம்பெருமான் முதலில் யார் மீது அதனை பயன்படுத்த விரும்புகிறாய் என்று கேட்ட போது அவர் கூறிய பதில் தேவலோகத்தையே ஆஹ்ராயத்தில் ஆழ்த்தியது. சனீஸ்வரர் தன்னுடைய வக்கிரப் பார்வையை சிவனின் மீது செலுத்த விரும்புவதாக கூறியுள்ளார்.

கர்ம வினை அளிக்கும் சனீஸ்வரர் சிவனையும் விட்டு வைக்க வில்லை! புராணக்கதையின் பின்னணி Representative Image

சரி எவ்ளோ காலம் என்மீது அந்த பார்வையை வைக்கப் போகிறாய் என்று கேட்டார் சிவன். அதனை சனி பகவான் ஏழரை நிமிடங்கள் என்று பதில் கூறினார். அந்த பதிலை கேட்ட உடன் சனி பகவான் தன்னை பிடிக்கக் கூடாது என்று பூமியில் யானை வடிவம் எடுத்தார் சிவன். வக்கிரப் பார்வைக் காலம் முடிந்ததும் மீண்டும் கைலாச மழைக்கு வந்துவிடுகிறார் எம்பெருமான். எப்படி உன்னுடைய துர்ப்பார்வையில் இருந்து தப்பித்து விட்டேன் பார்த்தாயா, உன் பார்வை என்னை எதுவும் பாதிக்கவில்லை என்று கூறுகிறார்.

கர்ம வினை அளிக்கும் சனீஸ்வரர் சிவனையும் விட்டு வைக்க வில்லை! புராணக்கதையின் பின்னணி Representative Image

அதை கேட்ட சனி பகவான் முதலில் அவரிடம் மன்னிப்பு கேட்டார். பின்பு என்னுடைய வக்கிரப் பார்வையால் தான் கடவுளாகிய நீங்கள் யானை ரூபத்திற்கு மாறுனீர்கள் என்று கூறினார். அதனை கேட்டதும் சிவபெருமான் சிரித்துக்கொண்டே சனீஸ்வரருக்கு ஆசி வழங்கினார். அதற்கு பின்னர் சிவபெருமானுக்கே கர்ம வினையை கொடுத்த சனிக்கு, சனீஸ்வரர் என்று பெயர் வந்தது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்