கந்த சஷ்டி திருவிழா நம்பெருமான் முருகனின் அறுபடை வீடுகளிலும் நடைபெறும் அற்புதமான நிகழ்வாகும். உலகெங்கிலும் உள்ள தமிழ் கடவுள் முருகனின் ஆலயங்களில் கந்தசஷ்டி நடைபெற்றாலும் திருச்செந்தூரில் நடைபெறும் விழாவுக்கு கூடுதல் சிறப்பு. அதிலும், சூரசம்ஹாரம் நிகழ்ச்சிக்கு உலகம் முழுக்க இருந்து பக்தர்கள் திருச்செந்தூருக்கு படையெடுப்பார்கள். திருச்செந்தூரில் இந்த விழா மிகச் சிறப்பாக நடைபெறும்.
உலகமெங்கும் உள்ள முருக பக்தர்கள் கூடும் இந்த நிகழ்ச்சிக்கு முந்தைய தினம் வேல்வாங்கும் நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் இன்றைய தினம்தான் வேல்வாங்கும் நிகழ்வு நடைபெறவுள்ளது.
வியர்க்கும் முருகன் சிலை
சூரனை வேல் கொண்டு சம்ஹாரம் செய்ய வேண்டி முருகன், தனது அன்னையிடம் வெற்றி வேலினை வாங்குவார். இந்த நிகழ்ச்சி கந்த சஷ்டி விழாவின் ஐந்தாம் நாளன்று நடைபெறும். இதனைத்தான் சிக்கலில் வேல் வாங்கி செந்தூரில் சூரசம்ஹாரம் என்று கூறுவார்கள். நாகை மாவட்டம் சிக்கல் சிங்காரவேலர் ஆலயத்தில் இந்த நிகழ்வு இன்றிரவு விமர்சையாக நடைபெறும். அப்போது அழகன் முருகனுக்கு முகத்தில் வியர்வை துளிகள் பெருகும். அந்த சமயத்தில் பரவசமடையும் பக்தர்கள் அரோகரா அரோகரா என முழக்கமிட்டு தரிசனம் செய்வார்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…