Tue ,Jul 23, 2024

சென்செக்ஸ் 80,429.04
-73.04sensex(-0.09%)
நிஃப்டி24,479.05
-30.20sensex(-0.12%)
USD
81.57
Exclusive

மறந்தும் கூட சிவனுக்கு இந்த பூவை சூடாதீர்கள்...விளைவுகள் பயங்கரமாக இருக்கும் | Which Flower is not offered to Shiva

Priyanka Hochumin Updated:
மறந்தும் கூட சிவனுக்கு இந்த பூவை சூடாதீர்கள்...விளைவுகள் பயங்கரமாக இருக்கும் | Which Flower is not offered to ShivaRepresentative Image.

ஒவ்வொரு மாதமும் அம்மாவாசை நாளில் இருந்து 14 ஆவது திதியை சிவராத்திரி என்று கொண்டாடப்படுகிறது. அன்றைய தினத்தில் சிவன் கோவில்களில் விசேஷ பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். ஆனால் மாசி மாதத்தில் வரும் சிவராத்திரியை தான் நாம் மகா சிவராத்திரி என்று விமர்சையாக கொண்டாடுகிறோம். அன்றைய இரவு "சிவனுக்கு உகந்த இரவு" என்றும் கருதப்படுகிறது. அன்றைய நாளில் சிவனின் பக்தகொடிகள் விரதம் இருந்து, தூங்காமல், சிவ ஸ்தோத்திரங்கள் அல்லது நம்மன்களை உச்சரித்து பூஜை செய்து வழிபடுவது வழக்கம். இந்த பதிவில் சிவனுக்கு எந்த பூவை படைக்க கூடாது, அதற்கு என்ன காரணம் என்பதைப் பாப்போம்.

மறந்தும் கூட சிவனுக்கு இந்த பூவை சூடாதீர்கள்...விளைவுகள் பயங்கரமாக இருக்கும் | Which Flower is not offered to ShivaRepresentative Image

பிரபஞ்சத்தில் தோன்றும் ஒவ்வொரு எண்ணங்களுக்கு சில எதிர்வினைகள் உள்ளது. அதற்கு உதாரணமாகக் கூறப்படுவது தான் இந்த புராணக்கதை. உயிர்களை படைக்கும் பிரம்மாவிற்கு திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. அதில் உயிர்களை படைப்பவர் பெரியவரா அல்லது காகின்றவர் பெரியவரா என்ற எண்ணம் தோன்றியது. இந்த பிரபஞ்சத்தில் ஒரு உயிரை படைத்த பின்னர் தானே காக்க முடியும். அப்படி என்றால் நான் தான் மிகவும் உயர்ந்தவன் என்னும் மமமதை பிரம்மாவிற்கு ஏறியது.

மறந்தும் கூட சிவனுக்கு இந்த பூவை சூடாதீர்கள்...விளைவுகள் பயங்கரமாக இருக்கும் | Which Flower is not offered to ShivaRepresentative Image

ஆகையால் என்ன தான் நாம் என்னுடைய தந்தை விஷ்ணு அவர்களில் இருந்து பிறந்தால் நான் தான் உயர்ந்தவன் என்னும் எண்ணம் அவருக்கு ஆழமாக இருந்தது. எனவே, அவர் விஷ்ணுவை காண சென்றுள்ளார். அப்போது மகா விஷ்ணு தூக்கத்தில் இருந்தாலும் அவரை எழுப்பி தன்னுடைய கருத்துக்களை கூறி நான் தான் உயர்ந்தவன் என்று பிரம்மா கோஷமிட்டுள்ளார். அதற்கு விஷ்ணு, "அப்படியா, சரி சிவபெருமான் உன்னுடைய தலையில் இருந்து ஒன்றை துண்டித்த போது எங்கே போனது உன்னுடைய படைப்பாற்றல், கோமகாசுரன் உன்னுடைய வேதனைகளை எடுத்துச் சென்ற போது அவனிடம் இருந்து அதனை பறித்து இந்த உலகை காத்தது நான் தானே ஆகவே ஆணவத்தில் வார்த்தைகளை விடாதே" என்று கூறுகிறார்.

மறந்தும் கூட சிவனுக்கு இந்த பூவை சூடாதீர்கள்...விளைவுகள் பயங்கரமாக இருக்கும் | Which Flower is not offered to ShivaRepresentative Image

இருவருக்கு இருக்கும் கருத்துக்கள் வெவ்வேறமாறி இருந்ததால் சொற்போர் அதிகரித்து இறுதியில் போர் நடக்க ஆரம்பித்து விட்டது. இவர்களின் சண்டையால் பிரபஞ்சமே அதிர்வுற்று கண்ணப்பட்டது. பயந்து போன தேவர்கள், அசுரர்கள், ஞானிகள் அனைவரும் சிவபெருமானிடம் அடைக்கலம் தேடி சென்றனர். உடனே ஈசன் இவர்களின் சண்டையை சுமுகமாக முடிக்க தன்னுடைய திருவிளையாடலை ஆரம்பித்தார். மகா விஷ்ணு மற்றும் பிரம்மா சண்டைப் போட்டு கொள்ளும் இடத்தில் ஒரு ஒளி தோன்றியது. அந்த ஒளியானது அசரீரியாக கூறியது என்னவென்றால், "யார் என்னுடைய அடியையும் முடியையும் முதலில் யார் கண்டு பிடிக்கிறார்களோ அவர்கள் தான் உயர்ந்தவர்கள்" என்று கூறியது.

மறந்தும் கூட சிவனுக்கு இந்த பூவை சூடாதீர்கள்...விளைவுகள் பயங்கரமாக இருக்கும் | Which Flower is not offered to ShivaRepresentative Image

எனவே, பிரம்மா அன்னப்பறவையாக உருமாறி முடியை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கினார். மகா விஷ்ணுவோ வராஹ அவதாரம் எடுத்து அடியைத் தேடி கீழே பயணம் செய்கிறார். அவர்கள் எவ்ளவோ முயற்சித்தும் அடியையும் முடியையும் அவர்களால் பார்க்க முடியவில்லை. விஷ்ணு பகவானுக்கு இது எம்பெருமான் சிவனின் திருவிளையாடல் என்று புரிந்துவிட்டது. அதன் பின்னர் அவர் சிவனிடம் மன்னிப்பு கேட்டு சரணடைகிறார். ஆனால் பிரம்மா தன்னுடைய தோல்வியை ஒப்புக்கொள்ள தயாராக இல்லை. அந்த தருணத்தில் திருமுடியில் இருந்து தாழம்பூ ஒன்று கீழே விழுவதை பார்க்கிறார் பிரம்மா. அவர் உடனே அந்த தாழம்பூவிடம் தான் முடியை பார்த்து விட்டதாக சிவனிடம் பொய் சொல்லுமாறு சொல்கிறார். அந்த பூவும் அதற்கு ஒப்புக்கொண்டது.

மறந்தும் கூட சிவனுக்கு இந்த பூவை சூடாதீர்கள்...விளைவுகள் பயங்கரமாக இருக்கும் | Which Flower is not offered to ShivaRepresentative Image

அவர்கள இருவரும் சிவபெருமானிடம் வந்து பேசி வைத்தது போல கூறுகின்றனர். இதனால் கடும் கோபமடைந்த சிவபெருமான் பிரம்மா தேவா நீங்கள் உங்கள் தவறுகளாய் உணராமல் பொய் சொல்லியதால் மூஉலகில் உங்களுக்கு கோவில்களும் வழிபாடும் இல்லாமல் போகட்டும் என்று சபித்து விடுகிறார். பொய் சாட்சி சொன்ன தாழம்பூவிடம் இனி என்னுடைய பக்தர்கள் யாரும் தாழம்பூவை எனக்கு சூட மாட்டார்கள் என்று சாபம் விட்டார். ஆகையால் தான் சிவபெருமானுக்கு தாழம்பூவை சூட கூடாது. பின்னர் கோபம் குறையால் இருந்த சிவபெருமானை சாந்தப்படுத்த தேவர்கள், புலவர்கள் எல்லாம் பாடல்கள் பாடி அவரை குளிர வைத்தார். இது மகா சிவராத்திரிக்கு புராணக்கதைகள் கூறும் முக்கிய தகவலாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்