கிரகணம் வானியல் நிகழ்வுகளில் மிக முக்கியமானதானது ஆகும். சூரியன் மற்றும் பூமிக்கு இடையில் சந்திரன் வந்து மூன்று கிரகங்களும் நேர்கோட்டில் சந்திப்பதால் சூரிய கிரகணம் ஏற்படுகிறது. ஜோதிட சாஸ்திரம் கூற்றின்படி சூரியன் கேதுவுடன் இருக்கும் அமாவாசை தினம் சூரிய கிரகணம் ஆகும்.
பொதுவாக கிரகண நேரத்தில் சூரிய பகவான் ஜீவ ராசிக்கு அளிக்கும் நற்கதிகளின் ஆற்றல் எதிர்மறையாக கிடைக்கும். எனவே, இந்த கிரகண நேரத்தில் தெய்வ ஆலயம் கூட முடி வைப்பது உண்டு. இந்த நேரத்தில் உணவு உட்கொள்வது சரியானது இல்லை, மேலும் இந்த கிரகண சமயத்தில் விரதம் தான் இருக்க வேண்டும். இந்த பதிவு சூரிய கிரகண நேரத்தில் கடைப்பிடிக்கும் விரதம் பற்றி எடுத்துரைக்கும்.
சூரிய பகவானின் ஆற்றல் எதிர்மறையாக வரும் கிரகண பொழுதில் நாம் இருக்க வேண்டிய விரதம் அதற்கு முதல் நாளிலே கடைப்பிடித்து கொள்ள வேண்டும். விரத முறை என்பது சாதாரணமாக நாம் கடைப்பிடிக்கும் விரத முறையே ஆகும், காலையில் எழுந்து குளித்து விட்டு வீட்டில் உள்ள தெய்வ சிலை அல்லது படத்தை வணங்கி விரதம் இருக்க வேண்டும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…