Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Temple for thiruvathirai natchathiram: திருவாதிரையில் பிறந்த நீங்க கோவில் போன இவ்வளவு நன்மையா…?

Manoj Krishnamoorthi September 01, 2022 & 12:05 [IST]
Temple for thiruvathirai natchathiram: திருவாதிரையில் பிறந்த நீங்க கோவில் போன இவ்வளவு நன்மையா…?Representative Image.

ஜெகத்தில் நாம் ஜனித்த மணித்துளியின் அடிப்படையில் நமக்கு நட்சத்திரம் கணக்கிடப்படுகிறது, நம் குணத்தை முடிவு செய்வதும்  நட்சத்திரமாகும். இந்த வாசகத்தில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் செல்ல வேண்டிய கோவில் (Thiruvathirai Natchathiram Kovil) பற்றிக் காண்போம்.

திருவாதிரை நட்சத்திர கோவில் (Temple for thiruvathirai natchathiram)

ஜோதிட சாஸ்திரத்தில் ஆறாவது நட்சத்திரமான திருவாதிரை இக்கட்டான சூழ்நிலையிலும் சாமர்த்தியமாக செயல்படும்  கெட்டிக்காரர்கள் ஆவர், ஆடம்பர எண்ணம் மற்றும் ஆடம்பர தொழிலில் அதிகம் நாட்டம் கொண்ட திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய கோவில் ஸ்ரீ அபய வரதீஸ்வரர் கோவில் ஆலயம் ஆகும். 

தல சிறப்பு (Temple for thiruvathirai natchathiram)

திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் கொண்ட தோஷம் நிவர்த்தியாக அபய வரதீஸ்வரரை வழிபாடு செய்தால் ராகு- கேது தோஷம் நீங்கும். தெற்கஏ கடலை பார்த்தபடி பக்தர்களுக்கு அருள்பாலிப்பதால் இத்தல அம்மனை கடல் நாயகி என்று கூறுவர். புராணங்கள் பலக் கொண்ட இத்திருக்கோயில் சம்பந்தரின் பாடலில் வைப்புத்தலமாக இருக்கும், அரூப வடிவில் சித்தர்கள் திருவாதிரை நட்சத்திரத்து அன்று வழிபாடு செய்வதாகக் கூறப்படுகிறது.

தீராத நோய் கொண்டவர்கள் இங்கு ஆயுள் ஹோமமும், மிருத்யுஞ்ஜய யோகமும் செய்வதால் ஆயூள் விருத்தி கிடைக்கும். திருமணத் தடை நீங்க இந்த திருக்கோயிலில் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து வஸ்திரம் சாற்றி வழிபட்டால் திருமண பந்தம் உருவாகு ம். 

எப்படி செல்வது? (Thiruvathirai Natchathiram Temple Route)

சிவ பெருமானுக்கு உரிய நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரக்காரராகிய நீங்கள் அபய வரதீஸ்வரர் கோவில் செல்ல முதலில் பட்டுக்கோட்டை வர வேண்டும். பின்னர் பழைய வாணியம்பாடி என்னும் ஊரில் அமைந்துள்ளது. இந்த கோவில் செல்ல தஞ்சாவூர் இருந்து 70 கி.மீ தொலைவில் உள்ள பட்டுக்கோட்டை வந்து பின் 12 கி.மீ பயணித்தால் திருக்கோவிலை அடையலாம்.   

தொடர்ப்புக்கு:- 99440 82313, 94435 86451

இதுபோன்ற ஆன்மீக செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்   Search Around   Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

TAG: Temple For Thiruvathirai Natchathiram | Temple For Thiruvathirai Natchathiram In Tamil | Temple For Thiruvathirai | அபய வரதீஸ்வரர் கோவில் |  Thiruvathirai Natchathiram Kovil | Thiruvathirai Natchathiram Kovil In Tamil | Thiruvathirai Natchathiram Temple Route | Thiruvathirai Natchathiram Temple Location | Thiruvathirai Natchathiram Temple Contact Number | திருவாதிரை நட்சத்திர கோவில்

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்