Sun ,Jun 11, 2023

சென்செக்ஸ் 62,547.11
118.57sensex(0.19%)
நிஃப்டி18,534.10
46.35sensex(0.25%)
USD
81.57
Exclusive

பொங்கல் பண்டிகை எதுக்கு கொண்டாடுகிறோம் தெரியுமா? | Thai Pongal History in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பொங்கல் பண்டிகை எதுக்கு கொண்டாடுகிறோம் தெரியுமா? | Thai Pongal History in TamilRepresentative Image.

நம் நாட்டில் திருவிழாவிற்கு பஞ்சமே இருக்காது. அதுமட்டுமல்லாமல், நமது பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் குறிக்கும் விதமாக ஒவ்வொரு பண்டிகையும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இப்படி அனைவராலும் வெகு சிறப்பாக கொண்டாடும் பண்டிகைகளில் ஒன்று தான் 'தை பொங்கல் திருநாள்'. இதை பொதுவாக 'அறுவடை திருவிழா' என்று சொல்வார்கள். இந்த மங்களகரமான நாளில் மகர சங்கராந்தி வழிபாடு மற்றும் சூரிய கடவுளையும் வழிபாடு செய்வோம். நான்கு நாள் திருவிழாவான இந்த பொங்கல் பண்டிகை ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகளும் இடம்பெற்றிருப்பது மேலும் சிறப்பு.

பொங்கல் பண்டிகை எதுக்கு கொண்டாடுகிறோம் தெரியுமா? | Thai Pongal History in TamilRepresentative Image

பொங்கல் என்பது என்ன?

நாம் அடிக்கடி பொங்கல் பொங்கல் என்று சொல்கிறோமே இந்த பொங்கல் என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? பொங்கல் என்ற சொல் தமிழ் இலக்கியத்திலிருந்து வந்தது. பொங்கல் என்றால் 'கொதிப்பது' என்று பொருள். தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் திருநாள் - நெல், கரும்பு, மஞ்சள் மற்றும் பிற பயிர்களை அறுவடை செய்த பிறகு, ஜனவரி - பிப்ரவரி மாதங்களில் சூரிய உத்தராயணத்தின் போது கொண்டாடப்படுகிறது. 

பொங்கல் பண்டிகை எதுக்கு கொண்டாடுகிறோம் தெரியுமா? | Thai Pongal History in TamilRepresentative Image

பொங்கல் பண்டிகையின் வரலாறு:

சுமார் 2000 ஆண்டுகளாக சங்க காலத்தில் இருந்தே வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு "திராவிட அறுவடை கொண்டாட்டம்" அல்லது "தை நீராடல்" என்று பெயர். நாளடைவில் இதுவே "தை பொங்கல் திருநாள்" என்று மாறிப்போனது. இப்பண்டிகையின் முக்கியத்துவமே மகசூல் தரும் பயிர்களை வளர்க்க விவசாயிகளுக்கு  உதவிய இந்திரன் மற்றும் சூரிய கடவுகளுக்கு நன்றி தெரிவிப்பதே ஆகும். அதுமட்டுமல்லாமல், பண்டிகையின் முதல் நாளான போகிப் பண்டிகையின் போது பழைய பொருட்கள் மற்றும் தீய எண்ணங்களை தீயில் எரித்துவிட்டு, புதியவற்றை வரவேற்பது வழக்கம். 

பொங்கல் பண்டிகை எதுக்கு கொண்டாடுகிறோம் தெரியுமா? | Thai Pongal History in TamilRepresentative Image

பொங்கல் கொண்டாட்டம் & வேறு பெயர்:

முதல் நாள் - போகி பண்டிகை 

இரண்டாவது நாள் - தைப் பொங்கல் 

மூன்றாம் நாள் - மாட்டுப் பொங்கல்

நான்காவது நாள் - காணும் பொங்கல்

தமிழகத்தில் அறுவடை திருநாளை தான் பொங்கல் பண்டிகையாக கொண்டாடுகிறோம். அதுவே, மற்ற மாநிலங்களில் பல்வேறு பெயர்களில் பொங்கலை கொண்டாடுகின்றனர். அதன்படி ஆந்திராவில் மகர சங்கராந்தி என்றும், உத்திரப் பிரதேசதில் கிச்செரி என்றும், பஞ்சாப்பில் லோஹ்ரி என்றும், மேற்கு வங்காளத்தில் பௌஷ் என்றும், குஜராத்தில் மகர சங்கராந்தி அல்லது உத்ராயன் என்றும், கர்நாடகாவில் சுகி என்றும், மகாராஷ்டிராவில் மகர சங்கராந்தி என்றும், ஹிமாச்சலப் பிரதேசதில் மஹா சாஜி என்றும், பீகார் மற்றும் ஜார்க்கண்ட்-யில் சக்ராத் அல்லது கிச்ச்டி என்றும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்