கடவுளின் கிருபையில் தவறு செய்பவர்களுக்கு ஏற்ற பாடம் கற்பிக்கப்படும். இது மனிதர்களாகிய நமக்கு மட்டும் பொருந்தியது அல்ல, தேவர்கள், அசுரர்கள் என்று அனைவருக்கும் பொருந்தும். புராணங்களின் அடிப்படையில் மும்மூர்த்திகளின் படைப்புகள் ஏதேனும் தவறு செய்தால் அதனை திருத்துவதற்காக புதிய அவதாரங்கள் எடுத்து அந்த பிரச்சனையை முடிப்பதாக கூறப்படுகிறது. அதே போல தான் தமிழர்கள் கொண்டாடும் தைப்பூசம் திருநாளுக்கும் ஒரு வரலாறு உள்ளது. அது என்ன என்பதைப் பற்றி பாப்போம்.
புராணக் கதைகளின் படி, சிவபெருமான் தன்னை மனதார நேசித்து தவம் மற்றும் பிராத்தனை செய்யும் தன்னுடைய பக்தர்களுக்கு அவர்கள் கேட்கும் வரத்தை அளிப்பது வழக்கம். ஆனால் வரம் கேட்பவர்கள் அதனை சாதகமாக பயன்படுத்தி அதனைப் பெற்ற பின்பு தவறான பாதையில் சென்றுவிடுகின்றனர். தருகாசுரன் என்னும் அரக்கன் மிகப்பெரிய சிவன் பக்தன். அவன் சிவனுடைய தரிசனத்தை பெறுவதற்காக கடுமையான தவத்தை மேற்கொண்டான்.
அவனுடைய அன்பை பார்த்த சிவபெருமான் அவனுக்கு தரிசனத்தை தந்து என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவன் எனக்கு சாகா வரம் என்று கேட்டான். அதற்கு பின் இருக்கும் அர்த்தத்தை புரிந்து கொண்ட சிவபெருமான் எல்லா உயிர்களுக்கு இறப்பு என்பது இயற்கை என்னால் இந்த வரத்தை தரமுடியாது என்றார். உடனே தருகாசுரன் அப்படி என்றால் சரி, உங்களுக்கு பிறந்த மகனால் மட்டுமே என்னுடைய உயிர் பறிக்கப்படட்டும் என்று வரம் கேட்டான். உடனே சிவபெருமானும் அந்த வரத்தை அவருக்கு தந்து விட்டார்.
வரத்தை பெற்ற தருகாசுரன் எண்ணற்ற தவறுகளை செய்ய ஆரம்பித்துவிட்டான். அவன் செய்யாத அக்கிரமங்களே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. இவனின் அராஜகத்தை முடிவு செய்ய பல தேவர்களும் படையெடுத்து சென்றனர் ஆனால் அவர்கள் தோல்வியை மட்டுமே சந்தித்தனர். இதற்கு ஒரு முடிவு கட்ட தீர்மானித்தார் மஹாதேவர். பின்னர் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி இருவரின் சக்தியில் இருந்து உருவான தீப்பொறிகள் சரவணப்பொய்கையில் விழுந்துவிட்டது. பின்னர் அந்த ஆறு தீப்பொறிகள் அழகான ஆறு குழந்தைகளாக உருமாறின.
தன்னுடைய முடிவிற்காக உருவான சக்தியை எப்படியாவது அளிக்க வேண்டும் என்று தீர்மானித்தான் தருகாசுரன். சரவணப்பொய்கையில் விழுந்த அந்த ஆறு குழந்தைகளையும் கார்த்திகை பெண்கள் எடுத்து வளர்த்தனர். அதனால் அவருக்கு கார்த்திகேயன் என்ற பெயர் வழங்கப்பட்டது. பின்னர் பார்வதி அந்த ஆறு குழந்தைகளையும் ஒன்றாக அணைத்து ஒரு குழந்தையாக மாற்றினார். இதனால் அவர் முருகன் என்று அழைக்கப்பட்டார். சரியான காலம் வரும் முருகன் கார்த்திகை பெண்களுடன் வளர்ந்து வந்தார்.
காலம் வந்த உடன் முருகனுக்கு அவருடைய கடமையை புரிய வைத்து தருகாசுரனை வதம் செய்ய தயாராகிக்கொண்டார். தேவர்களின் உதவியுடன் யுத்தத்திற்கு சென்ற முருகன் சண்டையிட அந்த அரக்கனை அளிக்க முடியவில்லை. அதனால் அவனை வதம் செய்ய பார்வதி தேவி தானே வேலாக மாறி முருகனின் கையில் சேர்ந்தார். அந்த வேலை வைத்து தருகாசுரனை அளித்து இந்த பிரபஞ்சத்தில் மீண்டும் நிம்மதியை நிலைநாட்டினார். இப்படி பார்வதி தேவி முருகனுக்கு ஞானவேலை தந்த நாளை தைப்பூசம் திருநாளாக கொண்டாடப்படுகிறது.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…