தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் முருகனுக்கு மிகவும் உகந்தநாளாக திகழ்கிறது இந்த தைப்பூசம். இந்நாளில் உலகம் எங்கிலும் இருக்கும் முருகன் கோவிலுக்கு விசேஷ பூஜைகள் நடைபெறும். முருகன் பக்தர்கள் பால் குடம் எடுப்பது, வேல் குத்துவது, காவடி எடுப்பது என்று பல வேண்டுதலை செய்து மகிழ்வார்கள். அபப்டி பட்ட சிறப்பு மிக்க தைப்பூசம் திருநாளானது மஹாதேவர் சிவ பெருமான் மற்றும் குரு பகவானுக்கும் உகந்த நாளாகும். இந்த பதிவில் தைப்பூச நல்ல நேரம், எதனால் விசேஷம், விரதம் இருக்கும் முறை போன்ற அணைத்து விவரங்களையும் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ் கடவுள் முருகப்பெருமானுக்கு முக்கியமாக விரதம் இருக்கும் நட்சத்திர நாட்கள் - வைகாசி மாதத்தில் வரும் விசாகம், பங்குனி மாதத்தில் வரும் உத்திரம், தை மாத்தில் வரும் பூசம் மற்றும் கிருத்திகை ஆகியவையாகும். இந்த ஒவ்வொரு நட்சத்திரங்களுக்கு என்று தனி சிறப்பு உள்ளது. வைகாசியில் முருகன் பிறந்த நட்சத்திரம் விசாகம். பங்குனி மாதம் உத்திர நட்சத்திர நாளன்று கடவுள் முருகன் தெய்வாணையை மணமுடித்த நாள். ஆறுபடை வேல் முருகா என்று பக்தர்கள் அழைக்கும் ஆறுமுகம் கொண்ட முருகனை சக்தி ஒரே உருவமாக மாற்றியது கிருத்திகை நட்சத்திரத்தன்று தான். இதில் மிகவும் விசேஷமான நாள் தைப்பூசம், ஏனெனில் அன்று தான் முருகன் தேவி சக்தியிடம் இருந்து வேலை பெற்ற நட்சத்திர நாளாகும்.
மேலே குறிப்பிட்ட விஷயங்கள் மட்டும் தைப்பூசம் சிறப்புகள் அல்ல. புராணம் மற்றும் சாஸ்திரங்களின் அடிப்படையில் தைப்பூசம் சிறப்புக்கள் பல இருக்கின்றன. அவற்றுள்
முதல் சிறப்பு - தைப்பூச நாளில் தான் முதல் முறையாக பூமியில் நீர் தோன்றியதாகவும், அதில் இருந்து உயிர்கள் உருவாகியதாக கூறப்படுகிறது.
இரண்டாம் சிறப்பு - தன்னுடைய தந்தை சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை முருகன் சொன்னது தைப்பூச நாளில் தான்.
மூன்றாம் சிறப்பு - புறங்களில் அடிப்படையில் தைப்பூச நாளில் தான் அகத்தியர்கள் மூன்று தேவர்களுள் ஒருவரான சிவனுக்கு தமிழை கற்பித்ததாக கூறப்படுகிறது.
நான்காம் சிறப்பு - சிதம்பரத்தில் இருக்கும் நடராஜர் தைப்பூசம் அன்று தான் தன்னுடைய நாட்டியதால் பிரம்மா, விஷ்ணு, பதஞ்சலி, வியாக்ரபாதர் ஆகியோருக்கு தரிசனம் அளித்துள்ளார்.
தை மாதத்தில் பூச நட்சத்திரமும், பெளர்ணமி திதியும் ஒன்றாக இணையும் நாளை தான் தைப்பூசம் என்று கூறுகிறோம். ஈந்த ஆண்டு தைப்பூசம் 2023 வரும் பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது.
பெளர்ணமி திதி நேரம் - பிப்ரவரி 4 ஆம் தேதி இரவு 10.41 மணி முதல் பிப்ரவரி 6 ஆம் தேதி அதிகாலை 12.48 வரை.
பூசம் நட்சத்திரம் நேரம் - பிப்ரவரி 4 ஆம் தேதி காலை 10.41 மணிக்கு தொடங்கி பிப்ரவரி 5 ஆம் தேதி பகல் 01.14 மணி வரை.
இந்த இரண்டு நட்சத்திரமும் பிப்ரவரி 5 ஆம் தேதி நாள் முழுவதும் இருப்பதால் அன்றே 2023 ஆம் ஆண்டு தைப்பூசம் நாளாக கருதப்படுகிறது.
தைப்பூசத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்து விட்டு, நெற்றியில் திருநீர் பூசிக்கொண்டு முருகனுக்கு விளக்கேற்ற வேண்டும்.
முருகனுக்கு உகந்த நாள் என்பதால் தைப்பூசம் அன்று முருகனுக்கு சக்கரை பொங்கல் மற்றும் பால் பாயசம் படைத்து வழிபடலாம்.
தைப்பூசம் நாளன்று விரதம் இருப்பது நல்லது. காலை மற்றும் பகல் இரண்டு வேளைக்கும் பால், பழம் சாப்பிட்டுக்கொள்ளலாம்.
நேரம் இருபவர்கள் தைப்பூசம் அன்று காலை மற்றும் மாலை முருகன் கோவிலுக்கு சென்று தரிசித்து வந்தால் எல்லா நன்மைகளும் கிடைக்கும். முடியாதவர்கள் மாலையில் அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வேண்டிக்கொள்ளலாம்.
அன்று முருகனை மட்டும் இல்லாமல் அவர் கையில் இருக்கும் வேவிற்கும் சிறப்பான வழிபாடு செய்து பிராத்திக்கலாம்.
தைப்பூசம் அன்று மனதில் முருகனைப் போற்றி சொல்ல வேண்டிய மந்திரங்கள் இவை தான். கந்தசஷ்டி கவசம், கந்தர் அனுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் கலி வெண்பா, திருப்புகழ், கந்தகுரு கவசம் ஆகிய பாடல்களை மாலை வரை படிக்கலாம். இதனை செய்ய முடியாதவர்கள் நாள் முழுவதும் "ஓம் சரவண பவ" என்ற மந்திரத்தை ஓதிக்கொண்டே இருக்கலாம்.
பலன்கள் - தைப்பூசம் அன்று முருகனை மனதில் நினைத்து விரதம் இருந்தால் உங்கள் வாழ்வில் செல்வம் பெருகும், நினைத்த காரியங்கள் நிறைவேறும், மனதில் வீரம் அதிகரிக்கும், தொட்ட காரியங்கள் வெற்றி பெரும், குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் போன்ற நன்மைகள் வந்து சேரும்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…