Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

திருநாகேஸ்வரம் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

Kanimozhi Updated:
திருநாகேஸ்வரம் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!Representative Image.

திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நவகிரகத் தலங்களில் ராகுக் காண பரிகாரத்தலமாக கும்பகோணம் அருகில் உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயில் விளங்கி வருகிறது. சுமார் 1500 ஆண்டுகள் பழமையான இவ்வாலயம் தேவார பாடல் பதிகம் பெற்ற தலமாகவும் விளங்குகிறது. இந்த கோயிலில் கார்த்திகை கடை ஞாயிறு பெருவிழா12 நாட்கள் நடைபெறும் பெருந் திருவிழாவாக நடைபெறுவது வழக்கம். 

திருவிழாவினை முன்னிட்டு இன்று கோயிலில் கொடியேற்றம் நடைபெற்றது. நந்தி உருவம் பொறித்த 40 அடி நீளமுள்ள கொடி ஏற்றத்தினை முன்னிட்டு நாகநாதர், கிரிகுஜாம்பிகை அம்மன், பிறையணி அம்மன், விநாயகர் ,சுப்பிரமணியர் என ஐம்பெரும் கடவுளர் கொடிமரம் அருகே எழுந்தருளியனர். கொடியேற்ற நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்