Sat ,Dec 02, 2023

சென்செக்ஸ் 67,481.19
492.75sensex(0.74%)
நிஃப்டி20,267.90
134.75sensex(0.67%)
USD
81.57
Exclusive

திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பது இத்துனை சிறப்பு வாய்ந்ததா? சுவாரஸ்யங்களும் மகிமைகளும்..

Nandhinipriya Ganeshan Updated:
திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பது இத்துனை சிறப்பு வாய்ந்ததா? சுவாரஸ்யங்களும் மகிமைகளும்.. Representative Image.

ஒவ்வொரு வருடமும் தீபாவளி முடிந்த அடுத்த மாதத்தில் வரும் கார்த்திகை தீபம் ஒரு சின்ன தீபாவளி பண்டிகையாகவே கொண்டாடப்படுகிறது என்று சொன்னால், அது மிகையாகாது. அதன்படி, இந்த வருடம் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி அன்று கார்த்திகை தீபம் வருகிறது. நாம் கொண்டாடும் ஒவ்வொரு பண்டிகைகளுக்கு பின்னும் ஒரு சுவாரஸ்யமான வரலாறு இருக்கும் என்று நம் அனைவருக்குமே தெரியும். அதன்படி, தமிழ் மாதமான கார்த்திகையில் வரும் திருக்கார்த்திகை எதற்கு கொண்டாடப்படுகிறது? திருவண்ணாமலை மகா தீபம் ஏன் ஏற்றபடுகிறது? என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..

திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பது இத்துனை சிறப்பு வாய்ந்ததா? சுவாரஸ்யங்களும் மகிமைகளும்.. Representative Image

திருவண்ணாமலை திருத்தலம்..

நம் தமிழகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் பிறப்பதும், வாழ்வது, இறப்பதும், சில கோயில்களை தரிப்பதும் முக்தி கிடைக்கும் என்பது ஐதீகம். அதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் பிறப்பதும், காஞ்சிபுரத்தில் வாழ்வதும், காசியில் இறப்பதும், சிதம்பரம் கோயிலை தரிசிப்பதும் நல்லது. அந்தவகையில், திருவண்ணாமலையை மனிதில் நினைத்தாலே முக்தி அளிக்கக்கூடிய வல்லமை இந்த திருத்தலத்துக்கு உண்டு. ஏனென்றால், அந்த அளவிற்கு கருணை மனம் படைத்தவர், அண்ணாமலையார். இவருடைய ஜோதிமயமான வடிவத்தைதான் நாம் கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திரத்தின்போது வழிபடுகிறோம்.

திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பது இத்துனை சிறப்பு வாய்ந்ததா? சுவாரஸ்யங்களும் மகிமைகளும்.. Representative Image

திருவண்ணாமலை தோற்றம்..

ஒருமுறை விஷ்ணுவும் பிரம்மாவும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று போட்டி போட்டுக்கொண்டிருக்கும்போது, சிவன் பெருமான் விண்ணுக்கும் மண்ணுக்கும் ஜோதிப் பிழம்பாக உருவெடுத்தார். 'யார் சிவனின் அடியையோ... முடியையோ முதலில் பார்க்கிறார்களோ அவர்களே பெரியவர்கள்' என்று விண்ணொளி கேட்க, போட்டியில் விஷ்ணுவும் பிரம்மாவும் தோற்று, தங்கள் தவறை உணர்ந்து சிவனிடம் "எல்லோரும் வணங்கி வழிபடுவதற்கு ஏற்ற உருவத்தை தாங்கள் எடுக்க வேண்டும்" என்று கோரிக்கையை வைத்தனர். அவர்களின் கோரிக்கைப்படியே சிவபெருமான் தற்போது இருக்கும் திருவண்ணாமலையாகவே மாறினார் என்று புராணம் கூறுகிறது. அதனால்தான், மலையையே லிங்கமாக பாவித்துக்கொண்டு நாம் அனைவரும் கிரிவலம் வருகிறோம். 

திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பது இத்துனை சிறப்பு வாய்ந்ததா? சுவாரஸ்யங்களும் மகிமைகளும்.. Representative Image

திருவண்ணாமலை மகா தீபம்.. 

சிவபெருமானின் கண்களை பார்வதி தேவியார் ஒருமுறை விளையாட்டாக மூடிவிட, அப்போது பூலோகம் முழுவதும் இருளில் மூழ்கியது. அதனால், கோபமடைந்த சிவபெருமான், பார்வதி தேவியை பூலோகம் சென்று தன்னை வழிபடுமாறு கட்டளையிட்டார். அதன்படி, காஞ்சிபுரத்துக்கு வந்து மணலால் சிவலிங்கம் செய்து வழிபாடு செய்கின்றாள். அதன்பிறகு, திருவண்ணாமலைக்கு சென்ற அம்பாள் கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி சிவபூஜைக்கும் தவத்துக்கும் ஆயத்தமாகிறாள். தொடர்ந்து 'மடக்கு' என்றழைக்கப்படும் பாத்திரத்தில் தீபத்தை ஏற்றி கையில் ஏந்திக்கொண்டு திருவண்ணாமலையை சுற்றி கிரியலம் வந்து வழிபாடு செய்கிறாள்.
 

திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பது இத்துனை சிறப்பு வாய்ந்ததா? சுவாரஸ்யங்களும் மகிமைகளும்.. Representative Image

லிங்கத்தை நெருங்கி வழிபடும்போது அம்பாளின் பக்தியில் சிவன் மனம் கனிந்து ரிஷப வாகனத்தில் வந்து தனது இடதுபாகமாக ஏற்று சிவசக்தியாக காட்சி தருகின்றார். அதன்பிறகு, உலக மக்கள் அனைவரையும் காக்கும் அம்பாளே, 'நீங்கள் எனக்கு மட்டும் காட்சி அளித்தால் போதாது.. அனைவருக்கும் காட்சி அளிக்க வேண்டும்' என்று கோரிக்கையை வைக்கவே, வருடத்திற்கு ஒருமுறை ஜோதி ஸ்வரூபமாக காட்சியளிப்பதாகவும், அந்த ஜோதியை தரிசிப்பவர்களின் 21 தலைமுறையும் முக்தியடையும் என்று கூறப்படுகிறது. அந்த நாள் தான் கார்த்திகை தீபத்திருநாள். அந்த நாளில் தன்னை வந்து தரிசனம் செய்பவர்களின் சகல பாவங்களும் நிவர்த்தியடையும் என்று அருள் வாக்களிக்கிறார் சிவபெருமான். இதுவே, கார்த்திகை மாதத்தில் கார்த்திகை நட்சத்திரத்தில் வரும் 'மகர ஜோதி' என்று சொல்லப்படுகிறது.

திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பது இத்துனை சிறப்பு வாய்ந்ததா? சுவாரஸ்யங்களும் மகிமைகளும்.. Representative Image

ஒவ்வொரு வருடமும் திருவண்ணாமலையில் 10 நாட்கள் நடைபெறும் தீபத்திருநாள் நிகழ்ச்சியின் கடைசி நாள் 'மகா தீபம்' மலையின் மீது ஏற்றப்படுகிறது. அதேபோல், அன்று அதிகாலை நேரத்தில் கோயிலில் உள்ள சுயம்புலிங்கமான அருணாசலேஸ்வரருக்கு பரணி தீபம் ஏற்றப்படும். அதன்பிறகு, மாலை நேரத்தில் ஒரு சில நிமிடங்களே ஆனந்த தாண்டவத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சியளிப்பார். அப்போது, கோயிலில் தீபம் ஏற்றப்படும். அதேநேரத்தில் சங்கு ஒலி முழங்க மலையின் மீது கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்படும். அதன்பிறகு அனைவரும் வீடுகளில் தீபம் ஏற்றி அண்ணாமலையாரை வழிபாடு செய்வார்கள்.

திருவண்ணாமலை மகா தீபத்தை காண்பது இத்துனை சிறப்பு வாய்ந்ததா? சுவாரஸ்யங்களும் மகிமைகளும்.. Representative Image

தீபம் ஏற்றும்போது கவனத்தில் கொள்ள வேண்டியவை:

எப்போதும் தீபம் ஏற்றும் போதும் எண்ணெய் முழுவதும் தீர்ந்து, தீபம் தானாக அணையும் வரை விடக்கூடாது. இது முற்றிலும் தவறு. அதனால், தீபம் ஏற்றியதிலிருந்து தீபத்தை குளிர வைக்கும் வரை விளக்கில் எண்ணெய் இருந்து கொண்டே இருக்க வேண்டும். விளக்கை குளிர்விக்கும்போது, கைகளாலும், வாயில் ஊதியும் அணைக்கக்கூடாது. ஒருசிலர் பூவில் அணைப்பார்கள் அதுவும் தவறு. பூவின் காம்பில் தான் அணைக்க வேண்டும். இதை எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்