Thu ,Feb 22, 2024

சென்செக்ஸ் 73,168.44
545.35sensex(0.75%)
நிஃப்டி22,222.50
167.45sensex(0.76%)
USD
81.57
Exclusive

பணக் கஷ்டம் தீர்ந்து செல்வ வளம் பெருகணுமா? வியாழக்கிழமையில் இது பண்ணுங்க.. | Thursday Fast Rules in Tamil

Nandhinipriya Ganeshan Updated:
பணக் கஷ்டம் தீர்ந்து செல்வ வளம் பெருகணுமா? வியாழக்கிழமையில் இது பண்ணுங்க.. | Thursday Fast Rules in TamilRepresentative Image.

கிழமைகளில் ஒவ்வொரு கிழமையும்ச் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்த நாளாக கருதப்படுகிறது. அதன்படி, வியாழக்கிழமை என்றதுமே நம்மில் பலருக்கும் முதலில் நினைவுக்கு வரும் கடவுள் குரு பகவானும், சாய்பாபாகவும் தான் இருக்கும். ஆனால், வியாழக்கிழமை பகவான் மஹாவிஷ்ணுவிற்கும் உகந்த நாள் ஆகும். பணக் கஷ்டம், பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்சனைகளுக்கு வியாழக்கிழமை அன்று மஹாவிஷ்ணுவிற்கு விரதம் இருந்து வழிபாடு செய்தால், அனைத்து பிரச்சனைகளும் விலகி அபரிதமான பணவரவு உண்டாகும் என்பது ஐதீகம். மேலும், கன்னிப் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பதால் திருண தடை விலகி, நல்ல வாழ்க்கைத் துணை கிடைக்க பெறுவார்கள்.

வியாழன் செல்வ வளத்தை பெறுவதற்கும் மகிழ்ச்சியான திருமண வாழ்க்கையை அடைவதற்கும் உண்டான பரிகாரங்களை செய்ய மிகவும் சிறப்பான நாளாகவும் கருதப்படுகிறது. இந்த நாளில் விஷ்ணுவை வழிபடுவதன் மூலம் லட்சுமி தேவியும் மகிழ்ச்சி அடைகிறார். பகவான் விஷ்ணு மற்றும் அன்னை லட்சுமியின் அருளால் வாழ்வில் உள்ள அனைத்து குறைகளும் நீங்கி நன்மை பெருகும். அதுமட்டுமல்லாமல், நாம் ஏற்கனவே கூறியது போல வியாழன் குருபகவானுக்கும் உகந்த நாள். அதனால் அன்றைய தினம் விரமிருப்பது குருபகவானின் பூரண அருளையும் நமக்கு தருகிறது. மேலும் ஜாதகத்தில் குரு பலம் பெரும். 

விஷ்ணுவிற்கு விரதம் இருப்பது எப்படி?

ஒவ்வொரு வியாழக்கிழமையும் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு, பூஜை அறையில் இருக்கும் விஷ்ணு மற்றும் மற்ற கடவுள் படங்களை சுத்தம் செய்துவிட்டு, மஞ்சள் மற்றும் குங்குமம் இட்டு, பூவால் அலங்கரித்து கொள்ளுங்கள். 

பின்னர், இறைவனுக்கு பிடித்த மஞ்சள் சாதம் மற்றும் இனிப்புகளை நிவேதனம் படைத்து, நெய் தீபம் ஏற்றி மனதார வேண்டிக் கொண்டு ஒரு டம்ளர் அளவு பால் குடித்துகிட்டு விரதத்தை தொடங்கவும். மேலும், அன்றைய தினம் மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொள்வது நன்மை பயக்கும். பிறகு மாலை நேரம் (6மணிக்குள்) அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று வியாழன் பகவானுக்கு (குரு பகவான்) அல்லது பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதன் பிறகு உணவு எடுத்து கொண்டு விரதத்தை நிறைவு செய்துக் கொள்ளலாம்.

செய்யக்கூடாதவை:

அன்றைய தினத்தில் எக்காரணத்திற்காகவும் வாழைப்பழத்தை சாப்பிட்டு விடாதீர்கள். ஏனென்றால், விரதம் இருப்பதற்கான பலனே இல்லாமல் போய்விடும். அதேபோல், விரதத்தை முடிக்கும் வரை மற்ற உப்பு சேர்த்த உணவுகள் சாப்பிடுவதையும் தவிர்க்கவும். [முழுமையாக விரதம் இருக்க முடியாதவர்கள் இடையிடையே தண்ணீர், பழச்சாறு, இளநீர் எடுத்துக் கொள்ளலாம்]. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்