வைகாசி மாதத்தில் வரக்கூடிய வைகாசி விசாகத் தினத்தில் முருகப் பெருமானைப் போற்றி வழிபட்டால் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் பெருகும் என்பது ஐதீகம். இந்த வைகாசி விசாகத்தில், விசாகம் நட்சத்திர நாளில் முருகப் பெருமானை விரதம் இருப்பது நம் உடல் நலத்திற்கும், மன நலத்திற்கும் உரித்தானது என்றே கூறலாம்.
வைகாசி விசாகம் 2023
தமிழ் மாதங்களில் ஒவ்வொரு மாதம் ஒரு சிறப்புப் பண்டிகையைக் கொண்டிருக்கிறது. அதன் படி, ஆண்டுதோறும் வரும் வைகாசி விசாகம் ஆனது மே – ஜூன் மாதங்களில் வரும். இந்த 2023 ஆம் ஆண்டில் வைகாசி விசாகம் வரக்கூடிய ஜூன் மாதம் 2 ஆம் நாள் காலை 05.55 மணிக்குத் தொடங்குகிறது. மேலும், ஜூன் 3 ஆம் நாள் காலை 05.54 மணிக்கு இந்த வைகாசி விசாகம் முடிகிறது.
வைகாசி விசாகம் புராணக் கதை
ஆன்மீக கருத்துப்படி, பிரம்ம தேவர் மற்றும் இந்திரன் போன்ற தேவர்கள் அனைவரும் சிவபெருமானின் பெருமையை உணராமல், தட்சனுக்குப் பயந்து அவன் நடத்திய யாகத்தில் கலந்து கொண்டனர். இதனால், யாகத்தில் கலந்து கொண்ட அவர்கள் பெரும் துன்பத்தில் வாடும் நிலையும் வந்தது.
அதே சமயத்தில் சூரபத்மனாலும் தேவர்கள் துன்பத்தை அனுபவித்தனர். சூரபத்மனோ சிவபெருமானிடம், “உங்கள் அம்சம் பொருந்திய சக்தியைத் தவிர வேறு எந்த சக்தியாலும் எங்களுக்கு அழிவு வரக்கூடாது” என வரம் பெற்றான்.
இதனைத் தொடர்ந்து தேவர்கள் அனைவரும் சூரபத்மனால் தோல்வி காணப்பட்டனர். மேலும், சூரபத்மனின் ஏவல் புரியும் படி, அவன் ஏவிய பணிகளைச் செய்யப் பல பணியாளர்களும், தேவலோகத்தில் இருந்தவர்களுக்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு, அவர்களும் செய்து வந்தனர். இந்த ஏவல் பணி செய்யும் தேவர் குலமில் பிரம்ம தேவரும் கூட தப்பவில்லை. இவ்வாறு பல ஆண்டுகாலமாக சூரபத்மன் மற்றும் அவனது சகோதரர்களால் துன்பம் அனுபவித்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து தேவர்கள் சிவபெருமானை நோக்கி தவம் செய்தனர். சிவபெருமானைச் சந்திக்க நந்தி பகவானிடம் அனுமதி கேட்டு கயிலையின் கதவு அருகே காத்திருந்தனர். ஆனால், எதற்கும் பலனில்லாமல் போயிட்டு அவர்களால் சிவபெருமானைக் காண முடியவில்லை. அவர்கள் எதற்கும் பலனில்லாமல் போயிற்று. அவர்கள் செய்த பாவங்கள் அனைத்தும் துரத்தி வந்தது.
இறுதியாக சிவபெருமானைத் தரிசித்து தங்களுடைய துயரங்களை நீக்கும் படி மன்றாடுவது எப்படி என தேவர்கள் அனைவரும் விஷ்ணுவிடம் கேட்டனர். அதற்கு விஷ்ணு தேவர், “சிவபெருமானின் அம்சத்தில் உருவாகக் கூடிய குமாரனால் மட்டுமே சூரபத்மனுக்கு அழிவு நேரும்” எனக் கூறுகிறார். இவ்வாறே, சூரியனைக் காட்டிலும் பன்மடங்கு ஒளிபொருந்திய தீப்பொறிகளில் இருந்து முருகப் பெருமான் தோன்றினார். இதில், தோன்றிய அழகு முகமான முருகப் பெருமானின் அழகு சிரிப்பில் சூரபத்மனின் அழிவைக் கண்டனர் தேவர்கள்.
வைகாசி விசாகம் விரதம்
இந்த வைகாசி விசாக நன்னாளில் முருகன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் இருக்க கூடிய படத்தைச் சுத்தம் செய்து பொட்டு வைத்து மலர்களால் அலங்கரித்துக் கொள்ள வேண்டும்.
பின், வாழை இலை ஒன்றை எடுத்து அதில் சர்க்கரைப் பொங்கல், தினைமாவு, பால், சித்ரான்னங்கள், பட்சணங்கள் போன்றவற்ரை நைவேத்தியமாகப் படைக்கலாம். மேலும், குத்து விளக்கு ஏற்றி, விநாயகப் பெருமானை மஞ்சள் லது பசுஞ்சாணத்தில் பிடித்து பூஜை செய்ய வேண்டும்.
பூஜையில் முருகப் பெருமானுக்கு உரித்த பாடல்களைப் பாடி வழிபடலாம். மாலை நேரத்தில் முருகப் பெருமானின் தலத்திற்குச் சென்று வழிபட்டு கந்தர் பாடல்களைப் படிக்கலாம்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…