Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

மகா சிவராத்திரிக்கு இப்படி ஒரு சிறப்பா..? சிவனின் சிறப்பம்சம்.. | What is Special about Maha Shivaratri

Gowthami Subramani Updated:
மகா சிவராத்திரிக்கு இப்படி ஒரு சிறப்பா..? சிவனின் சிறப்பம்சம்.. | What is Special about Maha ShivaratriRepresentative Image.

மும்மூர்த்திகளுள் ஒருவரான சிவபெருமானைப் போற்றி வணங்கிட எத்தகைய பாவங்களும் விலகி புண்ணியங்கள் பெருகும் என்பது ஐதீகம். சிவ பெருமானுக்கு சுயம்பு, ஆத்மபு என இரு பெர்யர்கள் உள்ளன. மேலும், சிவபெருமானின் மற்றொரு சிறப்பு தனக்கு தானாகவே தோன்றியவன் என்று கூறுவர். இப்படி எண்ணிலடங்கா பெருமைகளைக் கொண்டு விளங்கும் சிவபெருமானைக் கொண்டாடும் மகா சிவராத்திரி தினத்தின் சிறப்பைப் பற்றி இதில் காணலாம்.
 

மகா சிவராத்திரிக்கு இப்படி ஒரு சிறப்பா..? சிவனின் சிறப்பம்சம்.. | What is Special about Maha ShivaratriRepresentative Image

மகா சிவராத்திரி

சிவனின் அருள் பெறுவதற்கு, விரதமிருந்து சிறப்பாகக் கொண்டாடப்படுவதே மகா சிவராத்திரி தினமாகும். ஆண்டுதோறும், கிருஷ்ணபட்ச சதுர்த்தசி திதியில் சிவனை வழிபட்டு நோன்பு இருந்து வழிபடுவர். இதன் மூலம், பல்வேறு பயன்களை அடையலாம் எனக் கூறப்படுகிறது. விரதம் இருப்பதற்கென ஒரு சில வழிமுறைகள் உள்ளன. விரதம் இருப்பவர்கள் அதனைப் பற்றித் தெரிந்து கொள்வதும் அவசியம் ஆகும்.
 

மகா சிவராத்திரிக்கு இப்படி ஒரு சிறப்பா..? சிவனின் சிறப்பம்சம்.. | What is Special about Maha ShivaratriRepresentative Image

மகா சிவராத்திரி சிறப்பு

சிவனின் நாளாகக் கொண்டாடப்படும் சிவராத்திரி தினத்திற்கென ஒரு தனிச்சிறப்பு உள்ளது. அதிலும் மகா சிவராத்திரிக்கு தனி ஒரு வரலாறே உள்ளது. இதன் முக்கியச் சிறப்பே, படைப்பின் தொடக்கத்தில் பரமாத்மா தன்னைத் தானாகவே ஒரு திவ்யமான அக்னி ஸ்தம்பம் வடிவில் வெளிப்படுத்திக் கொண்டார். இந்த தினமே மகா சிவராத்திரி என அழைக்கப்படுகிறது. இதனையே பிறந்த நாள் என இறைவன் தனக்குத் தானாக தன் தத்துவத்தை அறிவித்த நாளாகவே மகா சிவராத்திரி கூறப்படுகிறது.
 

மகா சிவராத்திரிக்கு இப்படி ஒரு சிறப்பா..? சிவனின் சிறப்பம்சம்.. | What is Special about Maha ShivaratriRepresentative Image

புராணக் கதை

சிவராத்திரி தினத்திற்கு ஒரு தனிப் புராணக் கதை உள்ளது. இதில், ஆக்குபவன், காப்பவனாக இருக்கும் பிரம்மா, விஷ்ணூ என இருவரின் மத்தியில் மகா ஜோதிலிங்கமாக தோன்றி ஆதியும், அந்தமும் இல்லாத தத்துவத்தை வெளிப்படுத்தினார்.

இன்னொரு புராணக் கதையும் இதில் கூறப்படுகிறது. அதன் படி, மாசி மாதம் கிருஷ்ணபட்ச சதுர்த்தசியின் நள்ளிரவில் சிவபெருமான் மகாலிங்கமாக தோன்றினார் எனவும் கூறப்படுகிறது. மற்றொரு அம்சமாக மார்கழி மாத சிறப்பையும் புராணக் கதை எடுத்துரைக்கிறது.
 

மகா சிவராத்திரிக்கு இப்படி ஒரு சிறப்பா..? சிவனின் சிறப்பம்சம்.. | What is Special about Maha ShivaratriRepresentative Image

அடிமுடி காண முடியாத

மார்கழி மாதத்தில் வரக்கூடிய திருவாதிரிய நட்சத்திரத்தில் பரமேஸ்வரனே மகாலிங்கமாக தோன்றினார். அப்போது, மகாலிங்கமாக தோன்றிய சிவபெருமானின் அடிமுடி அறிவதற்கு பிரம்மாவும் விஷ்ணுவும் முயற்சித்தார்கள். இதனால், பிரம்மா முடியைக் காண்பதற்கு அன்னப்பறவை வடிவில் மேலே பறந்து சென்றார். விஷ்ணுவும் வராக அவதாரத்தில் அடியைக் காண கீழே சென்று தேடினார். ஆனால், இருவருக்குமே அடியையும், முடியையும் காண முடியவில்லை. அப்போது அவர்கள் முன்னே பரமேஸ்வரன் தோன்றி தத்துவத்தை விளக்கினார். அப்போது பிரம்ம தேவனும், விஷ்ணு தேவனும் சிவபெருமானை வழிபட்டதாகக் கூறப்படுகிறது.

மகா சிவராத்திரிக்கு இப்படி ஒரு சிறப்பா..? சிவனின் சிறப்பம்சம்.. | What is Special about Maha ShivaratriRepresentative Image

லிங்க வழிபாடு

இவ்வாறு இவர்கள் இருவரும் சிவனை வழிபட்ட நாள் மாசி மாதத்தில் வரக்கூடிய கிருஷ்ண பட்ச சதுர்த்தசி நாளின் நள்ளிரவில் ஆகும். இந்த நாளிலிருந்தே சிவ வழிபாடு, லிங்க வழிபாடு தொடங்கியது. இந்த வழிபாடு குறித்து தேவதைகள் பிரம்மா, விஷ்ணுவிடம் இருந்து அறிந்து கொண்டனர். அவர்கள் மூலம் ரிஷிகள் அறிந்தார்கள். ரிஷிகள் மூலம் பிரபஞ்சம் முழுவதும் அறிந்து கொண்டது.
 

மகா சிவராத்திரிக்கு இப்படி ஒரு சிறப்பா..? சிவனின் சிறப்பம்சம்.. | What is Special about Maha ShivaratriRepresentative Image

லிங்காஸ்டகம் ஸ்லோகம்

இதில் வழிபாடு குறித்த முழு விஷயங்களும் லிங்காஷ்டகம் ஸ்லோகமாகக் கூறப்படுகிறது.

"பிரம்ம முராரி ஸூரார்சித லிங்கம் நிர்மல பாஷித சோபித லிங்கம்"

இவ்வாறு, பரமேஸ்வரன் தன்னைத் தானாக வெளிப்படுத்திக் கொண்டு தனது வழிபாட்டை பிரம்மா விஷ்ணு மூலமாகப் பரப்பிய தினமே மாசி மாத கிருஷ்ணபட்ச சதுர்த்தசி தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஒரு நாள் வழிபாடு, ஓராண்டு காலம் சிவனை வழிபட்டதற்கான பலனைப் பெறலாம் என சாத்திரங்கள் கூறுகின்றன. இப்படிப்பட்ட அரும்பெரும் பலன்களை வழங்குவதாக உள்ளதே மகா சிவராத்தியின் சிறப்பாகும்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்