Sun ,Jun 04, 2023

சென்செக்ஸ் 62,846.38
344.69sensex(0.55%)
நிஃப்டி18,598.65
99.30sensex(0.54%)
USD
81.57
Exclusive

விவசாயிகளுக்கு வழங்கும் ரூ.1.2 லட்சம் மானியத் தொகை… எப்படி பெறுவது..? முழு விவரங்களும் இங்கே…!

Gowthami Subramani [IST]
விவசாயிகளுக்கு வழங்கும் ரூ.1.2 லட்சம் மானியத் தொகை… எப்படி பெறுவது..? முழு விவரங்களும் இங்கே…!Representative Image.

விவசாயிகளுக்கு உதவும் வகையில், பல்வேறு நலத்திட்ட உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்து வருகின்றன. அந்த வகையில், விவசாயிகளுக்கு ரூ.1.2 லட்சம் மானியம் வழங்குவதற்கான அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களையும், விவசாயிகள் மானியத் தொகை பெறும் முறைகளையும் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

கடல்சார் உணவுப் பொருள்கள்

மீன் வளர்ப்பு, கால்நடை வளர்ப்புக்கான மானியம் வழங்குதல் அரசு மூலம் நடைபெற்று வருகிறது. இதன் மூலம், விவசாயிகள் அதிக லாபத்தை ஈட்டலாம் எனவும் கூறப்படுகிறது.

பொதுவாக, கடல்சார் உணவுகள், உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக உள்ளது. அவற்றிலும், மீன் வகைகள் பெரும்பாலும் உடல் ஆரோக்கியத்தில் முக்கியத்துவம் வகிக்கிறது. மீன் சாப்பிடுவதை வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்குகின்றனர்.

அந்த வகையில், மீன்வளர்ப்போருக்கு உதவி செய்யும் விதமாக, மத்திய மாநில அரசுகள் மானியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

இது குறித்து, கோவை மாவட்ட ஆட்சியரான சமீரன் மானியம் தொடர்பான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1.2 லட்சம் ரூபாய் மானியத் தொகை

உள்நாட்டில் மீன் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கத்தில், பல்நோக்கு பண்ணை குட்டையில் மீன் வளர்ப்போருக்கு அரசு மானியம் வழங்குகிறது.

அதன் படி, மீன் வளர்ப்போர் ஒரு யூனிட்டுக்கு 18 ஆயிரம் என மானியத் தொகையைப் பெறலாம் எனக் கூறப்படுகிறது.

பிரதமரின் மீன் வள மேம்பாடு 2021-22 அம் ஆண்டின் திட்டத்தில், ரூ.40 லட்சம் அளவிலான மதிப்பீட்டில் மானியம் வழங்கப்பட உள்ளது. அதாவது, 10 டன் திறன் கொண்ட குளிர் சேமிப்பகங்கள், பனிக்கட்டி உற்பத்தி நிலைய கட்டுமானங்கல் அமைப்பதற்கு 16 லட்சம் ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது. மேலும், புறக்கடையில் அலங்கார மீன் வளர்ப்போருக்கு மானியமாக 40%-ஐ வழங்கியுள்ளது. இதில் அதிகபட்சமாக மீன் வளர்ப்போர் 1.20 லட்சம் ரூபாயை மானியமாகப் பெறலாம்.

மானியம் பெற தகுதியானவர்கள்

அரசு வழங்கும் மீன் வளர்ப்போருக்கான மானியம் பெற தகுதியானவர்கள் பட்டியலைக் காண்போம்.

அரசு அறிவித்துள்ளதன் படி, பெண்கள், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கான மானியம் 60% என அறிவிக்கப்பட்டுள்ளது.

உயிர் மீன் விற்பனை மையங்கள் அமைப்பதற்கு 40% மானியம், அதிகபட்சமாக 8 லட்சம் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

குளிர் காப்பிடப்பட்ட வாகனங்கள் வாங்குவதற்காக, பொதுப்பிரிவுக்கு 40% மானியம் வழங்கப்படுகிறது.

அதே போல, சிறிய அளவிலான பயோபிளாக் குளங்கள் அமைப்பதற்காக, பெண்களுக்கு 60% மானியம் மற்றும் பொதுப்பிரிவுக்கு 40% மானியம் வழங்கப்படுகிறது.

மேலே கூறப்பட்ட திட்டங்களில் ஏதேனும் ஒன்றில் விவசாயிகள் மீன் வளர்த்து அதிக லாபம் பெற்று பயன் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Farmers Subsidy in Tamilnadu | How Much Subsidy do Farmers Get | Farmers grants list | How Many Farmers Get Subsidies | Agriculture Subsidy in Tamilnadu 2022 | fencing Subsidy in Tamilnadu | Tamil nadu Government Subsidy Schemes | Agriculture Subsidy in Tamilnadu 2022 in Tamil | Tractor Maniyam Tamil nadu 2022 | Government Subsidy Schemes for Farmers | Free borewell Scheme in Tamilnadu 2022 | Tractor Subsidy in Tamilnadu 2021 Apply Online | How to Get Subsidy for Fish Farming | How to start Fish Farming in Tamilnadu | nabard Subsidy for Fish Farming | Tamil nadu Fisheries department Schemes | biofloc Fish Farming Subsidy in Tamilnadu | MSME loan for Fish Farming | Schemes for Fisheries in India | Subsidy for Fish Farming in kerala | How to Get Subsidy for Fish Farming in Tamilnadu | Government Subsidy for biofloc Fish Farming in Tamilnadu | How Much Subsidy on Fish Farming | How can I Get Subsidy for Fish Farming | How to Get Subsidy for Fish Farming | Which Farming is most profitable in Tamilnadu


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்