Sat ,Dec 09, 2023

சென்செக்ஸ் 69,825.60
303.91sensex(0.44%)
நிஃப்டி20,969.40
68.25sensex(0.33%)
USD
81.57
Exclusive

Farmers Subsidy in Tamilnadu: விவசாயிகளே! இனி கவலை வேண்டாம்…! இனி இதற்கும் மானியம் பெறலாம்….

Gowthami Subramani June 09, 2022 & 17:30 [IST]
Farmers Subsidy in Tamilnadu: விவசாயிகளே! இனி கவலை வேண்டாம்…! இனி இதற்கும் மானியம் பெறலாம்….Representative Image.

Farmers Subsidy in Tamilnadu: விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கும் வகையில், அரசு பல்வேறு மானியத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன் படி, தற்போது ஒரு புதிய மானியம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது (Farmers Subsidy in Tamilnadu).

புதிய மானியம்

திருப்பூர் மாவட்டத்தில், விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வகையில், வேளாண் துறை மிகவும் அதிகமான பொறுப்புடன் செயல்பட்டு வருகிறது. அதன் படி, தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம், எண்ணெய் வித்து மரப்பயிர்கள் திட்டத்தின் மூலம், விவசாயிகளின் நிலங்களில் மரம் நடவுவதற்கான மானிய உதவு வழங்க உத்தரவிட்டுள்ளது (Agriculture Subsidy in Tamilnadu 2022).

வெளிவந்த அறிவிப்பு

இந்த புதிய மானிய அறிவிப்பு குறித்து, தேசிய உணவு பாதுகாப்புத் திட்ட ஆலோசகர் வயல் ஆய்வு செய்துள்ளது. இது குறித்து அறிவித்ததாவது, “எண்ணெய் வித்து மரப்பயிர்கள் சாகுபடியை விவசாயிகள் தரிசு நிலங்களில் நட தேசிய உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் மானியம் வழங்கப்பட உள்ளது (Agriculture Subsidy in Tamilnadu 2022 in Tamil). மேலும், இதில் மரப் பயிர்களான வேம்பு மற்றும் புங்கன் போன்றவற்றை நடவு செய்யலாம்”.

மானியத் தொகை

அந்த வகையில், தேசிய உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், வேம்பு மற்றும் புங்கன் பயிர்களை நடவுவதற்கான மானியத் தொகை விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

வேம்பு பயிர் நடுவதற்கு எக்டருக்கு ரூ. 17,000 வழங்கப்படுகிறது.

புங்கன் பயிர் நடுவதற்கு எக்டருக்கு ரூ. 20,000 வழங்கப்படுகிறது.

மேலும், நடவு செய்த முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஊடுபயிரிடுதல் மற்றும் பராமரிப்பு மானியமாக ரூ. 3 ஆயிரம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வகை மானியம் விவசாயிகளுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது (How to get Subsidy do Farmers Get).

அதிகாரிகள் ஆய்வு

மேலும், காங்கேயம் வட்டாரம் கீரணூர் கிராமத்தில் வேம்பு எண்ணெய் வித்து மரப்பயிர் கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன. இதனை தேசிய உணவு பாதுகாப்பு திட்ட ஆலோசகரான அரசப்பன், தொழில்நுட்ப உதவியாளர் கிருத்திகா மற்றும் காங்கேயம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ரவி போன்றோர் நேரில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டனர் (Tamilnadu Government Subsidy Schemes).

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்