Thu ,Dec 08, 2022

சென்செக்ஸ் 62,410.68
-215.68(-0.34%)
நிஃப்டி18,560.50
-82.25(-0.44%)
USD
81.57
Exclusive

ஒரு எருமை மாட்டின் விலை ரூ.35 கோடி.. பால், பிஸ்தா, பாதாம் தான் சாப்பாடு… ஒரு துளி விந்து 1500 ரூபாயாம்…

Gowthami Subramani October 27, 2022 & 16:00 [IST]
ஒரு எருமை மாட்டின் விலை ரூ.35 கோடி.. பால், பிஸ்தா, பாதாம் தான் சாப்பாடு… ஒரு துளி விந்து 1500 ரூபாயாம்…Representative Image.

ஒரு எருமை மாட்டின் விலை 35 கோடியா? அது எப்படி சாத்தியம்? என எல்லோருக்கும் மனதில் சந்தேகம் எழும். ஆனால், இது முற்றிலும் உண்மை. ஐதராபாத்தில் நடைபெற்ற சதர் விழாவில் ரூ.35 கோடி மதிப்புள்ள எருமை பங்கேற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

ஒரு எருமை மாட்டின் விலை ரூ.35 கோடி.. பால், பிஸ்தா, பாதாம் தான் சாப்பாடு… ஒரு துளி விந்து 1500 ரூபாயாம்…Representative Image

சதர் திருவிழா

எத்தனையோ கண்காட்சிகள் ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. அது போலவே, எருமைகள் பங்கேற்கக் கூடிய விழா ஒன்று தெலுங்கானா மாநிலத்தில் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அதாவது, இந்த விழா தெலுங்கானா மாநிலத்தின் ஹைதராபாத்தில் நடைபெறுவது வழக்கம் ஆகும். இந்த விழாவில், விலையுயர்ந்த எருமைகள் பங்கேற்கும். அதன் படி, இந்த ஆண்டில் ஹைதராபாத்தைச் சேர்ந்த மது யாதவ் என்பவரது தலைமையில், நகராட்சி மைதானத்தில் உழவர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

ஒரு எருமை மாட்டின் விலை ரூ.35 கோடி.. பால், பிஸ்தா, பாதாம் தான் சாப்பாடு… ஒரு துளி விந்து 1500 ரூபாயாம்…Representative Image

சிறப்பு கவனம் பெற்ற எருமைகள்

இந்த விழாவில் பெரும்பாலானோர் தங்களது எருமைகளைக் கூட்டி வந்து பங்கேற்பர். அந்த வகையில், இந்த 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவில் ஹரியானா எருமையான ராஜீ சதர் பங்கேற்றது. மேலும், கருடன் எனும் மற்றொரு எருமை பார்வையாளர்களிடையே சிறப்பு கவனம் பெற்றது. இதனை, 20 நாள்களுக்கு முன்பு ஹைமத் ஆலம்கானிடமிருந்து ரூ.35 கோடி கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. தற்போது, இதனை ஹைதராபாத்திற்கு கொண்டு வந்ததாகவும் தெரிவித்தார்.

ஒரு எருமை மாட்டின் விலை ரூ.35 கோடி.. பால், பிஸ்தா, பாதாம் தான் சாப்பாடு… ஒரு துளி விந்து 1500 ரூபாயாம்…Representative Image

ஒரு துளி விந்தணு 1500 ரூபாய்

பொதுவாக, எருமைகளின் விலை அதன் விந்தணுவின் தரத்திற்கு ஏற்ப விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதன் படி, இந்த கருடன் எருமையின் விந்தின் ஒரு துளி ரூ.1,200 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படுவதாக மது யாதவ் கூறினார். மேலும், இந்த மாநிலத்தில் முர்ரா இனத்தைச் சேர்ந்த எருமைகளின் வளர்ச்சியை அதிகரிக்க உழைத்து வருவதாகவும் தெரிவித்தார்.

ஒரு எருமை மாட்டின் விலை ரூ.35 கோடி.. பால், பிஸ்தா, பாதாம் தான் சாப்பாடு… ஒரு துளி விந்து 1500 ரூபாயாம்…Representative Image

கருட எருமையின் சிறப்பு அம்சங்கள்

✥ இந்த வகை எருமையின் ஒரு துளி விந்தின் விலை 1200 ரூபாய் முதல் 1500 ரூபாய் வரை நிர்ணயம் செய்யப்படுகிறது.

✥ இதன் மூலம், அந்தப் பகுதியில் எருமைகளின் எண்ணிக்கை அதிகமாகி வருவதாகவும் கூறப்படுகிறது.

✥ இந்த கருட எருமைகளுக்கு பால், முந்திரி, பிஸ்தா, பாதாம், கோழிமுட்டை, கொண்டைக் கடலை, கடலைப் பருப்பு, வேர்க்கடலை, குஜார், பீட்ரூட், ஆப்பிள், வெந்தய விதைகள் போன்றவை உணவாக வழங்கப்படுகிறது.

Also Read: கடன் முதல் மானியம் அனைத்தும் ஒரே ஆப்பில்... விவசாயிகளுக்கு அசத்தல் வாய்ப்பு!

Tag: Sadar Celebrations In Hyderabad | The Yadavs Have Made Huge Arrangements | Madhu Yadav Buys Buffaloes His Dairy Farm | Growth Of The Murrah Race In The State | He Bought It From The Owner Of Haimad Alam Khan | The Price Of Buffalo Is So Many Crores | Garuda Surprised At The Sadar Festival | Sadar Buffalo Cost | Murrah Buffalo Price | Garuda Buffalo | Garuda Buffalo Price | Buffalo Festival In Karnataka Sadar Festival Date 2022 | கோடி | முர்ரா இன எருமைகளின் வளர்ச்சி | தூத்வாலா அமைப்பாளர் மது யாதவ் | ஹைதராபாத் | சதர் விழா | சதர் விழா 2022 | சதர் திருவிழா 2022 |.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்