Fri ,Apr 19, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

கீரைகளை வாங்கும் முறை முதல் அதை சமைத்து உண்பது வரை….! அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை…

Gowthami Subramani August 24, 2022 & 16:40 [IST]
கீரைகளை வாங்கும் முறை முதல் அதை சமைத்து உண்பது வரை….! அனைவரும் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை…Representative Image.

நம் உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரும் வகையில், எத்தனையோ வகையான காய்கறிகள், பழங்கள், கீரைகள், பயிறு வகைகள் உள்ளன. ஆனால், இவற்றில் ஒவ்வொன்றையும் வாங்கும் போது, சிலவற்றை நம் மனதில் கொள்ள வேண்டியது அவசியம். அந்த வகையில், நாம் தற்போது கீரைகளை வாங்கும் போது எப்படி பார்த்து வாங்க வேண்டும். அவற்றை சமைத்து உண்பது குறித்த முக்கிய விவரங்களைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

கீரைகளைப் பார்த்து வாங்குதல்

நம்மைச் சுற்றி ஏராளக்கணக்கான கீரை வகைகள் உள்ளன. ஆனால், நாம் ஒரு சில கீரை வகைகளையே உணவுப் பொருள்களில் எடுத்துக் கொள்கிறோம். அது மட்டுமல்லாமல், அந்த ஒரு சில கீரைகளை மட்டுமே நம்மால் பார்க்கவும் முடிகிறது. பல வகையான உடலுக்கு நன்மை தரக்கூடிய கீரை வகைகளை உண்பதால், சிறந்த ஆரோக்கியத்தைப் பெற முடியும் என்பது முற்றிலும் உண்மை.

இவ்வாறு கீரைகளை வாங்குவதற்கும், அதனை வாங்கி உண்பதற்கும் ஒரு சில வழிமுறைகள் உள்ளன. அவற்றைப் பற்றி இங்கு காண்போம்.

கீரைகள் வாங்கும் போது பார்க்க வேண்டியவை

  • பொதுவாக, செடியில் இருந்து கீரைகளைப் பறித்த பின் வறண்டு, வாடிப்போய் காணப்படும். இது போல, வறண்ட, வாடிப்போன கீரைகளை எடுத்துக் கொள்ளக் கூடாது.
  • மஞ்சள், நிறத்தில் உள்ள கீரைகள், பூச்சிகள் முட்டை இட்டு வைத்த கீரைகளையும் ஒதுக்கிவிட வேண்டும்.
  • மாறாக, கீரைகள் பசுமையாக இருக்க வேண்டும். மேலும் கீரைகள், நீர்த்தன்மை கொண்டதாகவும், எண்ணெய் பசை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
  • முற்றின கீரைகளை விட, இளந்தளிராகக் காணப்படும் கீரைகள் மிகவும் அதிக சத்துக்கள் வாய்ந்தவையாக இருக்கும். எனவே, இளந்தளிர் கீரைகளைத் தேர்ந்தெடுப்பது உண்பது நல்லது.
  • இவ்வாறு கீரைகளைத் தேர்ந்தெடுத்து உண்பதால், கீரைகளை இரவில் பறிக்கக் கூடாது.
  • காலைவேளையில் சூரிய உதயத்திற்குப் பின்னர், வெளிச்சத்தில் கீரைகளைப் பறித்து சமைக்கலாம்.
  • மேலும், கீரைகளை முடிந்த வரை நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், பழுப்பு நிற கீரையோ அல்லது பூச்சி நிறைந்த கீரைகளோ நீக்கப்பட்டு விடும். இதற்கு நீரில் 3 முறை அலசி கீரைகளைப் பயன்படுத்த வேண்டும்.

கீரைகள் சாப்பிடும் நேரம்

எவ்வளவு சத்து நிறைந்த உணவாக இருப்பினும், அதனை எடுத்துக் கொள்வதற்கான கால வரையறைகள் உண்டு. அவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.

  • எந்த கீரையாக இருப்பினும், அவற்றை இரவு நேரத்தில் உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். அதே போல, எந்த கீரையை எந்தெந்த காலத்தில் சாப்பிட வேண்டும் என்பதைப் பற்றியும் நன்கு அறிந்து பிறகு உண்ண வேண்டும்.
  • உடல் பருமன் அதிகம் உள்ளவர்கள், கீரைகளைச் சமைக்கும் போது உப்பு சேர்க்காமல், சமைத்த பிறகு, சிறிதளவு உப்பு சேர்த்து சாப்பிடுவது நல்லது.
  • மேலும், கீரைகளை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். பின், அதனை குறுக்காக நறுக்கி நீரில் வேக வைக்க வேண்டும்.
  • குறிப்பாக, கீரைகளை சமைக்கும் போது மூடி போட்டு சமைக்கக் கூடாது. பாத்திரம் திறந்த நிலையில் உள்ளவாறே சமைக்க வேண்டும்.
  • அதே சமயம், அதிக நேரம் கீரைகள் வேகவைக்கப்படக் கூடாது. பாதியளவு வேக வைத்தால் போதும். மீதமிருப்பது அதன் சூட்டிலேயே வெந்துவிடும்.

இவ்வாறே கீரை வகைகளை வாங்கும் போதோ அல்லது பறிக்கும் போதோ கவனமாக இருக்க வேண்டும்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

How to Choose and Cook Keerai Poriyal | How to Choose and Cook Keerai Kootu | How to Choose and Cook Keerai in Tamil | How to Choose and Cook Keerai Kootu in Tamil | How to Choose and Cook Keerai Poriyal in Tamil | How to Cook ponnanganni Keerai | How to Select and Cook Keerai | Keerai Recipes | How to Select and Cook Keerai Poriyal | How to Select and Cook Keerai Kootu | How to Select and Cook Keerai Poriyal in Tamil | How to Select and Cook Keerai in Tamil | How to Select and Cook Keerai Kootu in Tamil | Keerai Masiyal without Dal | Keerai Masiyal Brahmin Style | Keerai Masiyal with Onion and Tomato | Mulai Keerai Recipe | Keerai Masiyal Iyer | Keerai Masiyal Iyengar Style | How to Choose and Cook Keerai in Tamil nadu | How to Choose and Cook Keerai in Tamil language


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்