Tue ,Apr 16, 2024

சென்செக்ஸ் 72,943.68
-456.10sensex(-0.62%)
நிஃப்டி22,147.90
-124.60sensex(-0.56%)
USD
81.57
Exclusive

வீட்டிலேயே எளிமையாக இஞ்சி வளர்க்கும் முறைகள்…! இஞ்சி முளைப்பது முதல் அறுவடை செய்தல் வரை…!

Gowthami Subramani August 30, 2022 & 17:40 [IST]
வீட்டிலேயே எளிமையாக இஞ்சி வளர்க்கும் முறைகள்…! இஞ்சி முளைப்பது முதல் அறுவடை செய்தல் வரை…!Representative Image.

வீட்டிலயே நறுமணமான இஞ்சியை வளர்ப்பதற்கு பெரும்பாலானோர் விரும்புவர். அது மட்டுமல்லாமல், மக்கள் இயற்கை விவசாயத்தையே விரும்புகின்றனர். அந்த வகையில், நிலம் வைத்திருப்பவர்கள் தோட்டமாக உருவாக்கி பல்வேறு காய்கறி செடிகளை வைப்பர். இந்த வசதி இல்லாதவர்கள், மாடித்தோட்டம் வைத்து அதன் மூலம், சில சமையலுக்கு உபயோகிக்கக் கூடிய உணவுப் பொருள்களை வளர்த்து பராமரிப்பர்.

அதன் படி, வீட்டில் சமையலுக்கு மிக முக்கியமான ஒன்றாக விளங்குவது. இஞ்சி. இதனை நாம் எல்லா நேரத்திலும் கடைக்குச் சென்று வாங்கிவிட முடியாது. மேலும், நமக்கு வேண்டும் நேரத்திலும், நாம் இதனைப் பெற்றுக் கொள்ளலாம். இந்தப் பதிவில், வீட்டிலேயே எவ்வாறு எளிதாக இஞ்சி நடலாம் என்பது முதல் அதனை அறுவடை செய்தல் வரை பார்க்கலாம்.

இஞ்சி வளர்க்கும் முறை

இஞ்சியை முளைக்க வைப்பது முதல் அதனை அறுவடை செய்வது வரை கிட்டத்தட்ட 10 மாதங்கள் ஆகும். இந்தப் பதிவில் இஞ்சி பயிரிடுதல் பற்றிக் காணலாம்.

இஞ்சி நடுவதற்கு முன்னால், அதனை நன்றாக கழுவி சுத்தமாக எடுத்துக் கொள்வது அவசியம் ஆகும். குறிப்பாக, அதிக கண்ணு உள்ள இஞ்சியை மண்ணில் வளர்ப்பதன் மூலம் சிறப்பான வளர்ச்சியைப் பெறலாம். காய்ந்த இஞ்சியை எடுத்துக் கொள்ளக் கூடாது. பொதுவாக இஞ்சி வளர்வதற்கு அதிக அளவிலான நேரம் எடுத்துக் கொள்ளும். மேலும், இஞ்சியை வளர வைக்க அதனை விதைப்பதற்கு ஒரு நாள் முன்னரே நன்றாக தண்ணீரில் போட்டு ஊறவைக்க வேண்டும்.

நன்றாக ஊற வைத்த பின்னர், அதிக கணுக்கள் உள்ள இஞ்சியை மண்ணில் அப்படியேவும் விதைக்கலாம். அல்லது இஞ்சியை பாகங்களாக உடைத்து, அதனையும் மண்ணில் விதைக்கலாம்.

இஞ்சியை விதைக்கக் கூடிய மண்ணில் சிறிது உரம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனுடன் தேங்காய் நாரையும் பயன்படுத்த வேண்டும்.

இவ்வாறு தேங்காய் நாறு பயன்படுத்துவதன் மூலம், அதிகப்படியாக தண்ணீர் தேங்காமல் தடுக்கலாம். இவ்வாறு தண்ணீர் தேங்க விட்டால், இஞ்சி அழுக நேரிடும்.

அதன் படி, இஞ்சியை விதைத்த இரண்டு வாரங்களில் சிறிது தலையை வெளியில் தூக்கி காட்டுவது போலத் தெரியும்.

மேலும், 1 மாதத்திற்குப் பிறகு 30-க்கும் அதிகமான செ.மீ அளவு நீளத்தில் வளர்ந்து வரும்.

இவ்வாறு சிறிது காலம் கழித்து, மிகவும் அதிக அளவிலான இஞ்சி முளைத்திருப்பதைக் காணலாம்.

பிறகு மண்ணிலிருந்து அதிகமாக முளைத்துள்ள நறுமணமான இஞ்சியை எடுத்து சிறிது நேரம் வெயிலில் வைத்து ஈரப்பதத்தை முழுவதுமாக எடுத்து சமையலில் பயன்படுத்தலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Ginger in Tamil | How to Grow Ginger Plant at Home | How to Grow Ginger Plant at Home in Tamil | How to Plant Ginger Root at Home | How to make a Ginger beer Plant at Home | Can We Grow Ginger at Home | Can you Grow Ginger in the House | How to Grow Ginger from Ginger at Home | How to Grow Fresh Ginger at Home | How to Grow organic Ginger at Home | How to Grow Ginger indoors at Home | How Can We Grow Ginger at Home | How to Grow Ginger at Home in Tamil | How to make a Ginger tea at Home | How to Grow Ginger at Home India | How and When to Grow Ginger at Home | How to Grow Fresh Ginger at Home


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்