Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

கீரைகளை காலத்திற்கேற்ப எப்படி உண்ணலாம்..? முழு விவரங்களும் இங்கே…

Gowthami Subramani August 25, 2022 & 13:40 [IST]
கீரைகளை காலத்திற்கேற்ப எப்படி உண்ணலாம்..? முழு விவரங்களும் இங்கே…Representative Image.

கீரைகள் நம் உடலின் ஆரோக்கியத்தில் பெரும் பங்காற்றுகின்றன. அந்த வகையில் நாம் உணவில் சேர்த்துக் கொள்ளும் கீரைகள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், பல்வேறு சத்துக்களை அளிக்கிறது. கீரைகளில் பொதுவாக, சுண்ணாம்பு சத்துகள் மற்றும் இரும்பு சத்துக்கள் அதிகம் காணப்படுகின்றன. இவ்வாறு இயற்கையாகவே சத்துக்களைக் கொண்டுள்ள கீரைகளை உண்பதால், நமது உடலிற்கு நல்ல பலன்கள் கிடைக்கும். இதில், கீரைகளின் வகைகளை எந்தெந்த காலத்தில் உண்ணலாம் குறித்த தகவல்களைப் பற்றி காண்போம்.

கீரைகளின் பொதுப் பண்புகள்

கீரைகள் பொதுவாக, எல்லாக் காலத்திலும் உட் கொள்ள வேண்டிய சத்து மிகுந்த உணவுப் பொருளாகும். ஆனால், சில கீரைகள், பருவநிலை மாற்றத்திற்கேற்ப சில காலங்களிலேயே கிடைக்கும். பருவநிலை மாற்றம் அதாவது, கோடை காலம், குளிர் காலம், சமநிலைக்காலம் என உடலுக்கு குளிர்ச்சி அளிக்கும் கீரை, உஷ்ணத்தை அளிக்கும் கீரை மற்றும் உடலின் வெப்பநிலையை சமநிலைப்படுத்தும் கீரை என கீரைகளின் தன்மைகளைப் பொறுத்து, காலத்திற்கேற்ப நாம் உண்ணுவது சிறந்த பலனைத் தரும். குறிப்பாக, கீரைகளை காலை மற்றும் மதிய வேளையில் மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்தப் பதிவில், தமிழ் மாதத்தினைப் பொறுத்து கீரைகள் உட்கொள்ளும் தன்மையைப் பற்றிக் காண்போம்.

பங்குனி மாதம் முதல் சித்திரை மாதம் வரை

இந்த பங்குனி மாதம் முதல் சித்திரை மாதம் வரையிலான காலம் பின் பனிக்காலம் எனப்ப்டும். இந்த காலத்தில் கிடைக்கக் கூடிய கீரை வகைகள்

முருங்கைக் கீரை

பொன்னாங்கண்ணிக் கீரை

கரிசலாங்கண்ணி கீரை

பசலைக் கீரை

இது போன்ற எளிமையாகக் கிடைக்கும் கீரைகளில் உணவாக செய்தோ அல்லது சூப் தயாரித்தோ காலை வேளையில் எடுத்துக் கொள்ளலாம்.

மதிய உணவாக,

முளைக்கீரை

அரைக்கீரை

கீழாநெல்லி

பருப்பு கீரை

சிறு கீரை

இந்த கீரை வகைகளை மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம்.

வைகாசி மாதம் முதல் ஆனி மாதம் வரை

இந்த மாதங்களுக்கு இடையேயான காலம் இளவேனிற் காலம் என அழைக்கப்படும்.

முருங்கைக் கீரை

கரிசலாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி கீரை

லட்ச கொட்டை கீரை

தவசி கீரை

சக்கரவர்த்தி கீரை

வெந்தயக் கீரை

பாற்சொறி கீரை

குப்பைக் கீரை

தூதுவளை

இந்த கீரைகளை காலை உணவாக கூட்டாகவோ, அல்லது பானம் தயாரித்தோ அருந்தலாம்.

மதிய உணவாக,

அரைக்கீரை

சிறு கீரை

வல்லாரைக் கீரை

ஆடி மாதம் முதல் ஆவணி மாதம் வரை

இந்த இரு மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் முதுவேனிற் காலம் ஆகும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் பின்வரும் கீரைகளை சமைத்தோ அல்லது பானமாகவோ எடுத்துக் கொள்ளலாம்.

ஆரக்கீரை

அரைக்கீரை

தூதுவளை

முசுமுசுக்கை

வள்ளி கீரை

வல்லாரை

மூக்கிரட்டை

கானம் வாழை கீரை

முடக்கத்தான்

பண்ணை கீரை

குப்பைக் கீரை

லட்ச கொட்டை கீரை

முருங்கைக் கீரை

கொத்தமல்லி

புதினா

மதிய உணவாக,

முருங்கைக் கீரை

வல்லாரை

தூதுவளை

கொத்தமல்லி

புரட்டாசி மாதம் முதல் ஐப்பசி மாதம் வரை

புரட்டாசி மற்றும் ஐப்பசி இடைப்பட்ட காலம் கார்காலம் ஆகும். இந்த கால கட்டத்தில், நாம் காலை உணவாக எடுத்துக் கொள்ள வேண்டியவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

கொத்தமல்லி

கரிசலாங்கண்ணி

துத்திக்கீரை

முருங்கைக் கீரை

ஆரக்கீரை

அரைக்கீரை

அம்மான் பச்சரிசி

சுக்கான் கீரை

முசுமுசுக்கை

குப்பைக் கீரை

வள்ளி கீரை

புதினா

லட்ச கொட்டை கீரை

முடக்கத்தான் கீரை

மதிய உணவாக,

அரைகீரை

குப்பைக் கீரை

முடக்கத்தான் கீரை

முருங்கைக் கீரை

அகத்திக் கீரை

இரவு உணவாக

பிரண்டை

புதினா

கார்த்திகை மாதம் முதல் மார்கழி மாதம் வரை

இந்த இரு மாதங்களுக்கு இடைப்பட்ட காலம் கூதிர் காலம் எனப்படக் கூடிய குளிர் காலம் ஆகும். அதன் படி, இந்த இரு மாதங்களுக்கு இடையேயான காலத்தில் காலை உணவில் எடுத்துக் கொள்ள வேண்டிய கீரை வகைகள் இதோ..

பொன்னாங்கண்ணி கீரை

அரைக்கீரை

வல்லாரைக் கீரை

முருங்கைக் கீரை

முள்ளி கீரை

குப்பைக் கீரை

முடக்கத்தான் கீரை

துத்திக் கீரை

முசுமுசுக்கை கீரை

ஆரக்கீரை

தூதுவளை

தை மாதம் முதல் மாசி மாதம் வரை

முன் பனி காலம் எனக் கூறப்படும் இந்த கால கட்டத்தில், காலை உணவாக கரிசலாங்கண்ணி கீரையை உட்கொள்ளலாம்.

மதிய உணவாக

புளிச்சக் கீரை

பசலை கீரை

இரவு உணவாக

இந்த கால கட்டத்தில் இரவில் எந்த வகையான கீரையையும் உண்ணக் கூடாது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Keerai Season Name in Tamil | Keerai Season in Tamil | Keerai Season in Tamil nadu | Keerai Types and Benefits in Tamil | Types of Keerai in Tamil and English | Types of Keerai in Tamil nadu | Keerai Season Benefits in Tamil | Keerai Vagaigal in Tamil | Pasalai Keerai Vagaigal in Tamil | Keerai Vagaigal Keerai Names in Tamil | Tamil language Keerai Vagaigal Name in Tamil | Types of Keerai in Tamil nadu | Types of Keerai in Tamil and its Benefits | Types of Keerai in Tamil and English | Types of spinach in Tamil nadu | Vina Vagaigal in Tamil with Example | Types of Keerai Names in Tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்