Wed ,Dec 06, 2023

சென்செக்ஸ் 69,296.14
431.02sensex(0.63%)
நிஃப்டி20,855.10
168.30sensex(0.81%)
USD
81.57
Exclusive

TNAU Latest News: தொழில் அதிபர் ஆவதற்கான செம சான்ஸ்…! TNAU தரும் அட்டகாசமான ஐடியா…! சீக்கிரம் கலந்துக்கோங்க….

Gowthami Subramani June 01, 2022 & 19:10 [IST]
TNAU Latest News: தொழில் அதிபர் ஆவதற்கான செம சான்ஸ்…! TNAU தரும் அட்டகாசமான ஐடியா…! சீக்கிரம் கலந்துக்கோங்க…. Representative Image.

TNAU Latest News: தமிழ்நாட்டில் வேளாண் சார்ந்த தொழில்களில் நல்ல முன்னேற்றங்கள் நிலவி வருகின்றன. இதில், அரசு மற்றும் வேளாண் சார்ந்த பல்கலைக்கழகங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. அவற்றுள், அரசு விவசாயத்தைக் காப்பதற்காகவும், விவசாய மக்களுக்குப் பயன் தரும் வகையிலும் ஏராளமான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகமும் தொழில் முனைவோர்களை உருவாக்கும் எண்ணத்தில் பயிற்சி முகாம் ஒன்றை அறிவித்துள்ளது (TNAU Latest News).

இயற்கை வேளாண்மை எனப்படக் கூடிய அங்கக வேளாண்மையில் ஆர்வ உள்ள நபர்கள், இந்த ஒரு நாள் பயிற்சி முகாமில் கலந்து கொண்டு தொழில் முனைவோராக உருவாகலாம் எனக் கூறப்படுகிறது.


Representative Image.

PM Kisan-ல் ரூ.2000 அனுப்பியாச்சு… நீங்க இன்னுமா செக் பண்ணாம இருக்கீங்க…!


முகாமின் முக்கியத்துவம்

வேளாண்மையைப் பொறுத்த வரை, இயற்கை மற்றும் ரசாயன உரங்களைப் பயன்படுத்தக் கூடிய வேளாண்மை என சில வகைகள் உள்ளன. வணிக ரீதியாக, பொருளாதாரத்தை அதிகரிக்கும் நோக்கத்திலும், லாபத்தை ஈட்டுவதிலும், பெரும்பாலானோர் ரசாயனம் சார்ந்த வேளாண்மையை உபயோகப்படுத்துகின்றனர்.

இருந்த போதிலும், இந்தியாவின் பாரம்பரியமிக்க வேளாண்மை எனக் கூறப்படுவது இயற்கை வேளாண்மை தான். இந்த வேளாண்மையை மேலோங்கச் செய்வதை நாம் முக்கியமாகக் கருத வேண்டும்.

இந்த ஒரு நாள் முகாமில், இயற்கை வேளாண்மை பற்றிய அனைத்து வகை விவரங்களையும் பார்க்கலாம். வேளாண்பயிர் சத்துக்களின் மேலாண்மை மற்றும் இயற்கை முறையில்  பயிர் மேலாண்மை போன்ற பல்வேறு தகவல்களைப் பற்றி இதில் காணலாம்.

முகாம் நடைபெறும் இடம் மற்றும் நேரம்

அங்கக வேளாண்மை பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தின் மூலம் நடைபெற உள்ளது.

இந்தப் பயிற்சி முகாம், வரும் ஜூன் மாதம் 7 ஆம் நாள் நேரடியாக நடைபெற உள்ளது. அதாவது, செவ்வாய்கிழமை அன்று காலை 9.30 மணி முதல் 1.00 மணி வரை மற்றும் மதியம் 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற உள்ளது.


Representative Image. மாதம் ரூ. 1400 சேமித்தால், ரூ. 35 லட்சம் கிடைக்குமாம்… போஸ்ட் ஆபிஸின் புதிய திட்டம்…. உடனே கிளம்புங்க….


பயிற்சி நடைபெறும் தலைப்புகள்

  • இயற்கை முறையில், பயிர் சத்துக்களின் மேலாண்மை
  • களை மேலாண்மை
  • இயற்கை உரம் மற்றும் பூச்சி விரட்டி போன்றவற்றைத் தயாரித்தல்
  • இயற்கை முறையில், பூச்சி மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்துதல்
  • இதில் பெறக்கூடிய அங்கக சான்றிதழில் வழிமுறைகள் மற்றும் பங்கேற்பாளர்களில் உறுதியளிப்புத் திட்டம்

மேலே கூறப்பட்ட பல்வேறு வகையான தலைப்புகளில் இந்த ஒரு நாள் பயிற்சி நடைபெற உள்ளது.

செலுத்தப்பட வேண்டிய கட்டணம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும், இந்த ஒரு நாள் முகாமிற்குப் பங்கு பெறுபவர்கள் பயிற்சிக் கட்டணம் செலுத்த வேண்டும்.

அதன் படி, மேற்கூறிய முகாமில் ரூ.590/- மட்டுமே பயிற்சிக் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

இது குறித்த கூடுதல் விவரங்களைக் கீழ்க்காணும் விவரங்களுடன் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

முகவரி

பேராசிரியர் மற்றும் தலைவர்,

நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம்,

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்,

கோயம்புத்தூர் - 641 003.

மின்னஞ்சல் முகவரி: organic@tnau.ac.in

தொலைபேசி எண்கள்: 0422 6611206 / 0422 2455055

தொழில் முனைவோர் இந்த பயிற்சியின் மூலம் இயற்கை வேளாண் பற்றியத் தகவல்களைப் பெறலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்