Sat ,Jul 20, 2024

சென்செக்ஸ் 80,604.65
-738.81sensex(-0.91%)
நிஃப்டி24,530.90
-269.95sensex(-1.09%)
USD
81.57
Exclusive

Indraiya Raasi Palan in Tamil: இன்னிக்கு இந்த ராசிக்காரர் நினைப்பதெல்லாம் நடக்கும், அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர் நீங்களா..! ஜூன் 14, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 13, 2022 & 13:45 [IST]
Indraiya Raasi Palan in Tamil: இன்னிக்கு இந்த ராசிக்காரர் நினைப்பதெல்லாம் நடக்கும், அந்த அதிர்ஷ்டசாலி ராசிக்காரர் நீங்களா..! ஜூன் 14, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 7:30- 8:30 வரை

மாலை: 4:30- 5:30 வரை

Indraiya Raasi Palan in Tamil

மேஷம் (Aries 2022 Horoscope)

உங்கள் ராசிக்கு இன்று சந்திரனின் சஞ்சாரம் சரியில்லாததால் கடினமான தருணங்கள் பல உருவாகும், மனதின் தெளிவான ஆற்றல் இன்று உங்கள் நம்பிக்கையை அதிகப்படுத்தும். இருப்பினும் சில எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். தொழில் ஸ்தானத்தில் இன்று பொறுமையாக இருந்தால் நல்லது, சக பணியாளருடன் மோதல் ஏற்படும். மேலும் பணியிடத்தில் சில முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். நிதி நிலையில் அதிகமான கவனம் தேவைப்படும். திருமண வாழ்க்கையில் கவனமாக இருக்க வேண்டும் உங்கள் பேச்சினால் இன்று வாழ்க்கைத் துணையுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவீர்கள். காதல் வாழ்க்கை சர்ச்சையில் முடியும். குடும்பத்தின் மீது இருக்கும் கவனக் குறைவு இன்று குடும்பத்தினரின் மனதை ஏங்கச் செய்யும். ஆரோக்கியத்தில் கழுத்து தொடர்பான பிரச்சனைகள் இருக்கும். குளிர்ச்சியான உணவை உண்ண வேண்டும். அமைதி!   

அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு

அதிர்ஷ்ட எண்: 5

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

உங்கள் கிரக நிலை மாற்றம் இன்று உங்களுக்கு இன்று சாதகமாக இருக்கும், பணிகளைக் குறித்த நேரத்தில் செய்து முடிக்க சக பணியாளரின் உதவி தேவைப்படும். மேலும் நீங்கள் முழு ஆர்வத்துடன் பணியாற்றுவீர்கள். நிதி நிலை ஓரளவு நன்றாக இருக்கும், இன்றைய தினம் நண்பர்களுடன் நேரத்தை ஒதுக்க முடியும். மாணவர்களின் கல்வி ஸ்தானம் சிறப்பாக உள்ளது, சக மாணவரின் உதவி சிறப்பாகப் படிக்க உதவும். உடல்நலம் சிறப்பாக இருக்கும், மனமும் உற்சாகமாக உள்ளது. வீட்டில் நிம்மதி அதிகரிக்கும். அருமையான நாள்! 

அதிர்ஷ்ட நிறம்: ரோஸ் நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்கள் இணக்கமான மன நிலை இன்று தெளிவாகும், மேலும் உங்கள் தொழில் ஸ்தானம் வெற்றி பாதையில் நகரும். சரியான திட்டமிடல் மற்றும் நல்ல ஆலோசகரின் அறிமுகம் உங்களுக்கு பக்க பலமாக இருக்கும். மேலும், குடும்ப வாழ்வு இயல்பாக இருக்கும், உங்கள் குடும்பத்தினரின் ஆலோசனை குடும்பத்தை மேம்படுத்தும். இன்று ஆரோக்கியத்தில் அதீத கவனம் வேண்டும்,  பதற்றமடைவதால் உடல்நிலை பாதிக்கும். முன்னேற்றம் இருக்கும்! 

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 9

கடகம் (Cancer 2022 Horoscope)

பதட்டமான சூழ்நிலையிலும் தெளிவாக இருக்கும் நீங்கள் இன்று அலுவலகத்தில் கொஞ்சம் கடினமான சூழ்நிலையை சந்திப்பீர்கள். இன்று அதிகமாக உழைக்க வேண்டிய தருணம் உருவாகும். வீட்டில் பொறுமையுடன் இருக்க வேண்டும், குடும்ப செலவுகள் இருக்கும். குடும்பத்தினரின் உடல்நலத்தில் கவனம் காட்ட வேண்டும். செல்வ நிலை செலவுதான் ஓங்கி இருக்கும், இன்று தேவை அறிந்து செலவு செய்வது நிதி நிலைமை சமாளிக்க உதவும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காண்பர். நன்மை!

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்  

அதிர்ஷ்ட எண்: 3

சிம்மம் (Leo 2022 Horoscope)

வெற்றியை நோக்கி செல்லும் உங்களுக்கு இன்று சில தடங்கள் இருக்கும், மன உறுதியுடன் முயற்சியைத் தொடர்வது இலக்கையை நெருங்கத் தூண்டும். அலுவலகத்தில் விடாமுயற்சி நல்ல பலன் அளிக்கும். திருமணப் பந்தத்தில் இன்று மகிழ்ச்சியான உறவு உருவாகும்.  நிதி நிலை மிகவும் மந்தமாக உள்ளது. செல்வத்தை செலவிடும் முன் அதிகமான யோசனைத் தேவைப்படும். மருத்துவ செலவுகள் உருவாகலாம். உடல்நலத்தில் சிறிய கோளாறு உருவாகும், அலட்சியப் படுத்தாமல் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும். கல்வி நிலையில் பிரச்சனை இல்லை. நம்பிக்கை!  

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை நிறம்

அதிர்ஷ்ட எண்: 5

கன்னி (Virgo 2022 Horoscope)

சாதகமான சரியான திட்டம் வகுத்து முயற்சி செய்தால் நிச்சியமாக வெற்றி கொள்ளலாம் என்பதை உணர்ந்த உங்களுக்கு இன்றைய தினம் தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். உங்கள் முயற்சிகள் நல்ல பலன் அளிக்கும். அலுவலகத்தில் எடுக்கும் புதிய முயற்சிகள் நல்ல பலன் அளித்து உங்களை பெருமைப்படுத்தும். பணப்புழக்கம் கையில் நன்றாக இருக்கும், பணத் தேவைகளை சமாளிக்க முடியும். ஆரோக்கியம் நல்ல நிலையில் இருக்கும். மாணவர்கள் இன்று கல்வியில் அதீத ஆர்வத்துடன் படிப்பர். முன்னேற்றம்!     

அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்

அதிர்ஷ்ட எண்: 5


Representative Image. மேலும் படிக்க: துலாம்- மீனம் வரை அடுத்த 6 ராசியின் தினசரி பலன்(14.06.2022) பற்றி அறிய இங்கு க்ளிக் செய்யவும்.  


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன்  தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்