Mon ,Dec 04, 2023

சென்செக்ஸ் 68,865.12
1,383.93sensex(2.05%)
நிஃப்டி20,686.80
418.90sensex(2.07%)
USD
81.57
Exclusive

Tomorrow Horoscope Tamil: இன்று உஷாரா இல்லை என்றால்  செலவு தான் வந்து சேரும்...! உஷாரா இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா...! ஜூன் 21, 2022 ராசிபலன்!

Manoj Krishnamoorthi June 20, 2022 & 15:00 [IST]
Tomorrow Horoscope Tamil: இன்று உஷாரா இல்லை என்றால்  செலவு தான் வந்து சேரும்...! உஷாரா இருக்க வேண்டிய ராசிக்காரர் நீங்களா...! ஜூன் 21, 2022 ராசிபலன்!Representative Image.

Tamil Horoscope Full Predictions                                   Tamil Online Horoscope Free

நல்ல நேரம்

காலை: 07:30-  08:30 வரை

மாலை: 04:30-  05:30 வரை

Tomorrow Horoscope Tamil

மேஷம் (Aries 2022 Horoscope)

ஆடம்பரமான எண்ணம் அதிகம் கொண்ட உங்களுக்கு இன்று உருவாகும் பிரச்சனைகளைச் சமாளிக்க உதவிகள் தேவைப்படும், உங்கள் பேச்சால் எதிர்மறையான நிலை உருவாகும். தொழில் ஸ்தானம் இன்று அதிகப்படியான சிக்கல் இருக்கும், திட்டமிட்டு செயல்பட வேண்டும். குடும்ப வாழ்க்கை இன்று  பொறுமை மிக அவசியமாகும். திருமண வாழ்க்கையில் இன்று குழப்பமான சூழல்தான் அதிகமாக இருக்கும். உடல்நலத்தில் சிறிய பிரச்சனைகள் தோன்றும், வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. வெற்றி!

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்

அதிர்ஷ்ட எண்: 4

ரிஷபம் (Taurus 2022 Horoscope)

நீண்ட நாட்களாக வெற்றிக்காகக் கடுமையாகப் போராடும் உங்களுக்கு  இன்று தக்க பலன் கிடைக்கும், அலுவலகத்தில் அங்கீகாரம் கிடைக்கும்.  குடும்ப வாழ்க்கையில்  அமைதியான நிலை இருக்கும், அன்பு அதிகரிக்கும். இன்று அமைதியான மனநிலையில் இருப்பீர்கள். நல்ல பண வரவு இருக்கும்  உடல்நிலை நன்றாக உள்ளது. கல்வி ஸ்தானம் மிகவும் நன்றாக உள்ளது. அமைதியான நாள்!

அதிர்ஷ்ட நிறம்:  மெரூன் நிறம்

அதிர்ஷ்ட எண்: 9

மிதுனம் (Gemini 2022 Horoscope)

உங்களின் நம்பிக்கையால் திக்கற்ற சூழ்நிலையிலும் தெளிவாக இருக்கும் உங்களுக்கு இன்றைய தினம் புத்துணர்ச்சியான நாளாக இருக்கும். அலுவலகத்தில் உங்கள் பேச்சாற்றல்  முன்னிலையில் இருக்கும். தொழிலில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும், சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் செல்வ நிலை உயரும். வீட்டில் மகிழ்ச்சியான சூழல் அதிகமாக இருக்கும்.கல்வி நிலை ஓரளவு நன்றாக உள்ளது. வளர்ச்சி!  

அதிர்ஷ்ட நிறம்: பச்சை 

அதிர்ஷ்ட எண்:  7

கடகம் (Cancer 2022 Horoscope)

உங்களின் கலப்பான குணத்துக்கு இன்று செலவுகள் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்,போதிய பணம் கையில் இருக்காது. பணியிடத்தில் இன்று அதிகப்படியான நேரத்தை செலவிடுவீர்கள். வாழ்க்கைத் துணையுடன் சிறிய ஊடல் இருக்கும் ஆனால் குடும்பத்தின் ஒற்றுமைக்கு பாதிப்பு இல்லை. மனம் ஒருநிலை இல்லாமல் அங்குமிங்கும் அலைபாயும். உடலில் பாதத்தில் வலி இருக்கும். அமைதி!  

அதிர்ஷ்ட நிறம்: கருப்பு

அதிர்ஷ்ட எண்: 6

சிம்மம் (Leo 2022 Horoscope)

உங்கள் முன்கோபத்தால் இன்று பிறரின் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களுக்கு ஆளாவீர்கள், இருப்பினும் உங்களின் இரக்கக் குணத்தால் மேலும் வாக்குவாதம்  தவிர்ப்பீர்கள். வேலையிடத்தில் இன்று கடினமான நிலை நிலவும், இருக்கும் சிக்கலைச் சரி செய்யவே நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கும். இன்று பண விசயத்தில் அதிகமான கவனம் அவசியமாகும், வீணான செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறிய குறை இருக்கும், சரியான ஓய்வு ஆரோக்கியத்தை மேம்படுத்தும். குடும்ப வாழ்க்கை நன்றாக இருக்கும். கருணை!  

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை

அதிர்ஷ்ட எண்: 4

கன்னி (Virgo 2022 Horoscope)

லட்சியத்தை நோக்கி சிறப்பாக உழைக்கும் உங்களுக்கு இன்று  தொழில் ஸ்தானம் அருமையாக உள்ளது, அலுவலகத்தில் உங்கள் மேலதிகாரி நிர்மாணித்த இலக்கை எளியதாக முடிப்பீர்கள். குடும்பத்தில் இன்பம் அதிகமாக இருக்கும். திருமண வாழ்க்கையில் அன்பு அதிகரிக்கும், உங்களின் நேர்மையான பேச்சு இன்று கணவன் மனைவி உறவில் நல்ல புரிதல் தரும்.மேலும், காதல் செய்யும் கன்னி இராசியினர் காதல் வாழ்க்கை திருமணமாகும் நிலை உருவாகும்.  சிறப்பான செல்வ நிலை இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும், இன்றைய தினம் உங்கள் மன தைரியம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். கல்வி நிலையில் பிரச்சனை ஏதுமில்லை. நன்மை!   

அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம் 

அதிர்ஷ்ட எண்: 5


Representative Image. மேலும் படிக்க: துலாம்- மீனம் வரை அடுத்த 6 ராசியின் தினசரி ராசிபலனை அறிய இங்கு க்ளிக் செய்யவும்.


இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்