Tamil Horoscope Full Predictions Tamil Online Horoscope Free
நல்ல நேரம்
காலை: 10:30- 11:30 வரை
மாலை: 04:30- 05:30 வரை
Todays Raasi palan
மேஷம் (Aries 2022 Horoscope)
பொதுநலமாக பிறரின் குறையைத் தீர்க்க அயராது போராடும் உங்களுக்கு இன்றைய தினம் மனம் சற்று குழப்பத்தில் இருக்கும், பாதுகாப்பாக இல்லதைப்போல் உணரும். தொழிலில் உங்கள் வேலை வழக்கத்தைப்போலவே இருக்கும், இன்று பணிகளை முடிக்க சரியான திட்டமிடல் தேவைப்படும். இன்பமான குடும்ப வாழ்க்கையில் அனுசரணையாக நடந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை அடிபடாது. வாழ்க்கைத் துணையுடன் பொறுமையாக நடந்து கொள்ள வேண்டும். இன்று குடும்பத் தேவைக்காக செலவு அதிகமாக இருக்கும். உங்கள் ஆரோக்கியத்தில் கண் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உருவாகும் சூழல் அதிகமாக இருக்கும். நண்பர்களின் உதவி இன்றைய தினத்தில் சிறிய ஆறுதலாக இருக்கும். சோர்வு!
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 3
ரிஷபம் (Taurus 2022 Horoscope)
அமைதியான மனநிலையைக் கொண்ட உங்களுக்கு இன்றைய தினம் கலவையான பலன் அளிக்கும், உங்கள் பொறுமை இழக்காத குணம் குடும்பத்தில் நிம்மதியான சுழலைத் தரும். தொழிலில் இருக்கும் பிரச்சனையை இன்று குடும்பத்தினரின் அறிவுரையால் தீர்க்க முடியும். நிதி நிலையில் இன்று வரவைக்காட்டிலும் செலவுதான் அதிகமாக இருக்கும். சேமிக்கும் குணத்தை வளர்த்து கொண்டால் உங்களுக்கு எதிர்கால நிதி நெருக்கடியைச் சமாளிக்க உதவும். உணவு முறையில் கவனம் தேவைப்படும், முறையில்லாத உணவு பழக்கம் வயிற்றுப் பிரச்சனையை அளிக்கும். செலவு!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 6
மிதுனம் (Gemini 2022 Horoscope)
பிரகாசமான அகத்தால் அனைவரையும் வசிகரிக்கும் நீங்கள் ஆன்மீக நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள், மனம் புத்துணர்ச்சி பெறும். செல்வ நிலையில் நல்ல வளர்ச்சி இருக்கும், இன்று கையிலிருக்கும் ஏராளமான பணப்புழக்கம் உங்களை சுப செலவு செய்யத் தூண்டும்.. அலுவலகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை, சக பணியாளர் மிகவும் உதவிக்கரமாக இருப்பர். காதல் வாழ்க்கையில் அன்பு அதிகமாக இருக்கும், ஒருவரையொருவர் புரிந்து கொள்ளுவீர்கள். மாணவர்களின் கல்வி ஸ்தானம் முன்னேற்றப் பாதையில் நகரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். இன்று முழுவதும் மனம் உற்சாகமாக இருக்கும். சுகம்!
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
அதிர்ஷ்ட எண்: 5
கடகம் (Cancer 2022 Horoscope)
எதிர்கால சிந்தனை அதிகம் கொண்ட கடக இராசிக்காரரே, இன்றைய தினம் உங்கள் செலவு வரவைக்காட்டிலும் அதிகமாக இருக்கும். செய்யும் செலவில் அதிகமான கவனம் தேவைப்படும், இல்லையென்றால் மனம் வருத்தடையும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு அதிகமாக இருக்கும், நட்பு முறையில் குடும்பத்திலிருந்தால் குடும்பத்தினரின் மனதைப் புரிந்து கொள்ள முடியும். ஆரோக்கியத்தில் சிறிய கவனம் காட்ட வேண்டும். விரைய செலவு!
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 3
சிம்மம் (Leo 2022 Horoscope)
கம்பீர குரலும் அழகான தோற்றமும் கொண்ட சிம்ம இராசிக்காரரே இன்று செல்வ நிலை சீராக இருப்பதால் லாபம் இருக்கும், எதிர்காலத்திற்காகச் சேமிப்பது நல்ல பலன் தரும். இன்று முன்கோபத்தைத் தவிர்க்கவும் பொறுமையாக இருப்பது உங்களின் அமைதி கெடும் சூழலைத் தடுக்கும். உடல்நலம் ஒரளவு நன்றாக உள்ளது, ஆனால் சரியான ஓய்வு இன்மை மன அழுத்தை அளிக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்களை புரிந்து நடந்து கொள்வர். பொறுமை!
அதிர்ஷ்ட நிறம்: பச்சை
அதிர்ஷ்ட எண்: 9
கன்னி (Virgo 2022 Horoscope)
பிறரின் உதவியில்லாமல் தன் சொந்த முயற்சியால் வாழ்வில் வெற்றி பெற வேண்டும் என நினைக்கும் உங்களுக்கு இன்று நிதி நிலைமையில் அதிகமான கவனம் தேவைப்படும், உங்கள் நீண்ட நாள் சேமிப்பு அடிபடும். தொழிலில் உங்கள் தகுதிக்கு ஏற்ற சன்மானம் உங்களைத் தேடி வரும், ஆனால் சிறிய தவறு மிகப்பெரிய விளை உருவாக்கக் கூடும். எனவே, உங்களின் அதிகமான கவனம் ஓய்வு நேரத்தைக் குறைக்கும். மனம் இன்று நிம்மதியாக இருக்க உங்கள் நண்பர்கள் ஒரு முக்கியமான காரணமாகும். மாணவர்கள் கல்வியில் கவனம் செலுத்தினால் நல்ல ரிசல்ட் கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக உள்ளது, காதல் வாழ்க்கை மிகவும் நன்றாக உள்ளது. நிம்மதி!
அதிர்ஷ்ட நிறம்: அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4
துலாம் (Libra 2022 Horoscope)
ஞானங்கள் பல கற்று பிறருக்கு அறிவு களஞ்சியமாக இருக்கும் துலாம் ராசிக்காரரே இன்று குடும்ப வாழ்க்கை மிகவும் இன்பமாக இருக்கும், வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். திடீரென வரும் செலவுகள் வரும் இன்று கையிருப்பை மொத்தமாகத் தீர்க்கும். உங்கள் வாழ்க்கைத் துணை மூலம் இன்பம் இரட்டிப்பு ஆகும். ஆசிரியரின் பாராட்டை இன்று மாணவர்கள் பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. உடல்நலம் சிறப்பாக உள்ளது. தொழில் ஸ்தானம் வழக்கத்தைப் போல் இயல்பாக உள்ளது. இன்பம்!
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 9
விருச்சிகம் (Scorpio 2022 Horoscope)
நீதி நிலை மாறாமல் தர்ம நெறியில் நடக்கும் உங்களுக்குச் செய்யும் காரியத்தில் சிறிய தாமதம் உருவாகும், ஆனால் உங்கள் பணியைக் கண்டு புகழாரம் சூட்டுவர். வேலை தேடுபவருக்கு புதிய வேலைகள் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் அன்பு அதிகமாகும். இன்று செலவுகள் குறைந்து, எதிர்கால தேவைக்காகச் சேமிப்பு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் நலமாக உள்ளது. பெருமை!
அதிர்ஷ்ட நிறம்: சில்வர் நிறம்
அதிர்ஷ்ட எண்: 1
தனுசு (Sagittarius 2022 Horoscope)
எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும் வரை அயராது போராடும் தனுசு ராசிக்காரரே இன்று உங்கள் ராசிக்குப் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது. மனம் நிறைவாக இருக்கும், நிதி நிலைமை ஓரளவு நன்றாக இருக்கும். குடும்பத்துடன் சுபநிகழ்ச்சியில் கலந்து கொள்ளுவீர்கள், பல மனிதர்களை சந்திப்பீர்கள். பணியிடத்தில் சக பணியாளரின் மூலம் குழப்பம் உருவாகும், உங்கள் திறமை வெளிப்படும். ஆரோக்கியம் மிகவும் நன்றாக உள்ளது, தினமும் தியானம் செய்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களின் கல்வி நிலை மிகவும் நன்றாக உள்ளது. குழப்பம்!
அதிர்ஷ்ட நிறம்: காவி நிறம்
அதிர்ஷ்ட எண்: 3
மகரம் (Capricorn 2022 Horoscope)
ஆன்மீக எண்ணம் அதிகம் கொண்ட மகர ராசிக்காரரே இன்று தொழிலில் நல்ல பெயர் கிடைக்கும் அதனால் எல்லையற்ற ஆனந்தத்தில் மிதப்பீர்கள். உங்கள் அணுகுமுறை நல்ல லாபம் வரும். உடல்நலம் அதிக கவனம் தேவை, ஓய்வு எடுக்க முடியாமல் போகும் வேலை முன்னேற்றம் இருந்து கொண்டு இருக்கும். பணம் வரவு உண்டு. குடும்ப வாழ்க்கையில் இன்பம் இருக்கும். நிதானம்!
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்
அதிர்ஷ்ட எண்: 6
கும்பம் (Aquarius 2022 Horoscope)
தெளிவான மனநிலையால் கடினமான காரியத்தையும் எளியதாக செய்ய உங்களுக்கு இன்று தொழிலில் திட்டமிட்டுச் செயல்படுவது வேலைச் சுமையைக் குறைக்கும், மேலும் சரியான திட்டமிடல் முன்னேற்றத்தை அளிக்கும். இன்று பணம் அதிகமாக செலவாகும். உங்கள் கல்வி ஸ்தானம் முன்னேற்றம் கொள்ளும், ஆசிரியரின் ஆலோசனை கிடைக்கும். வீட்டில் அமைதியாக இருப்பது நிம்மதியைக் கெடுக்காது. குடும்பத்தினருக்கு உடல்நலக் குறை ஏற்படும், மருத்துவச் செலவு ஏற்படும். அமைதி!
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 1
மீனம்(Pisces 2022 Horoscope)
கலகலப்பான மீன ராசிக்காரரே உங்களின் பணிவான குணம் இன்று தொழிலில் உருவாகும் பிரச்சனையைச் சரி செய்ய உதவும், உத்தியோகத்தில் இருப்பவருக்கு எதிர்பார்க்காத வளர்ச்சி இருக்கும். இன்று நீங்கள் மனம் உறுதியுடன் இருப்பதால் முன்னேற்றத்திற்கு நடுவில் வரும் தடைகளைப் பெரியதாகப் பார்க்க மாட்டீர்கள். நிதி நிலையில் இன்று வரவு இருக்கும், ஆனால் செலவு வழக்கம்போல் இருக்கும். மாணவர்களுக்கு ஊக்கத் தொகை கிடைக்கும். வீட்டில் பாசத்துடன் இருப்பீர்கள். உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். வளர்ச்சி!
அதிர்ஷ்ட நிறம்: ஊதா நிறம்
அதிர்ஷ்ட எண்: 8
இதுபோன்ற ஜோதிட செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் Search Around Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…